Agora தூதர்கள் ஒரு நாட்டில் உள்ள Agora அமைப்பின் தலைவராக அல்லது நற்செய்தியாளராக செயல்படுபவர்கள்; ஒரு நாட்டில் Agora-வின் ஆரம்ப கட்டங்களில், அமைப்பு, அதன் கொள்கைகள் மற்றும் அதன் விழுமியங்களின் பிரதிநிதியாக இருப்பவர்கள். எதிர்கால இயக்குநர்கள் குழுவின் கருவாக திகழுபவர்கள்
தேவைகள்
இந்த நோக்கத்தை நிறைவேற்ற, Agora தூதர்கள் மிகவும் நெறிமுறையாளராகவும், ஆதரவளிப்பவராகவும், தங்கள் நாட்டில் உள்ள மக்கள் Agora கிளப்புகளைத் தொடங்கவும் மற்றும் இயக்கவும் உதவக்கூடியவராகவும் மற்றும் நிறுவனம் நாட்டில் விரிவடைவதற்கு உதவக்கூடியவராகவும் இருக்க வேண்டும். நாட்டின் அளவு மற்றும் மக்கள்தொகையைப் பொறுத்து, ஒரு நாட்டில் ஒன்று அல்லது பல தூதர்கள் இருக்கலாம்.
தூதர்கள் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- எங்கள் நோக்கம் மற்றும் பணி, கல்வித் திட்டம், அனைத்து சந்திப்புப் பிரிவுகள், மற்றும் பாத்திரங்கள் மற்றும் கிளப்பை உருவாக்கி இயக்குவதற்கான வழிகாட்டுதல்கள் என Agora-வைப் பற்றிய அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
- வருடத்திற்கு குறைந்தது ஒரு புதிய கிளப்பை தங்கள் நாட்டில் உருவாக்க வேண்டும். அந்தக் கிளப்பை நீங்கள் நடத்த வேண்டும் என்பதில்லை (நீங்கள் அந்தக் கிளப்பை தொடங்க விரும்பினால் மற்றும் அவ்வாறு செய்ய நேரம் இருந்தால் தவிர) - புதிய கிளப்பை தொடங்க உதவலாம், அது சுதந்திரமாக வளருவதற்கு வழிகாட்டலாம்.
- தங்களின் கிளப் பற்றி ஊடகங்களில் (புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) பகிர வேண்டும்.
- அதிகாரப்பூர்வமாக தங்களின் சமூக ஊடக சுயவிவரங்களில் தங்களின் தலைப்பை ("நாட்டிற்கான Agora Speakers தூதர்") சேர்க்க வேண்டும்.
- Agora Speakers International உடைய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகும் நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்.
நிர்வாக மற்றும் செயல்பாட்டு கண்ணோட்டத்தில், Agora தூதர்கள் கண்டிப்பாக:
- தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- கணினி மற்றும் இணைய இணைப்பிற்கான தினசரி அணுகல் இருக்க வேண்டும் மற்றும் தூதர்கள் அஞ்சல் பட்டியலில் பங்கேற்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள தெரிந்தவராக இருக்க வேண்டும், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அல்லது நீங்கள் வாழும் பகுதியில் பேசப்படும் மொழியை சரளமாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
- மாதாந்திர தூதர் சந்திப்புகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
தூதர் அந்தஸ்து வழங்குவது என்பது தானியங்கி செயல்முறை அல்ல, இது Agora Speakers International ஃபவுண்டேஷனின் விருப்பத்தின் பேரில் மட்டுமே வழங்கப்படும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். மேலே உள்ள அனைத்து தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தாலும், மற்ற காரணங்களுக்காக இந்த அந்தஸ்து வழங்குவதற்கு மறுக்கப்படலாம். இதற்கு நேர்மாறானதும் சாத்தியம்: அதாவது மேற்கண்ட தேவைகளில் சில உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் விதிவிலக்கான பங்களிப்புகளைச் செய்திருந்தாலோ அல்லது ஃபவுண்டேஷனுக்கு விதிவிலக்கான மதிப்பைச் சேர்த்திருந்தாலோ உங்களுக்கு தூதர் அந்தஸ்து வழங்கப்படலாம்.
மேலும், தயவுசெய்து ஒரு தூதராக மாறுவதற்கான தேவைகள் காலப்போக்கில் மாறும், மேலும் இது அந்நாட்டில் நிலவும் Agora-வின் வளர்ச்சியை பெரிதும் சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
முன்னோடி கிளப்பை நடத்துவது
ஒரு தூதரின் மிக முக்கியமான பணி என்னவென்றால் "முன்னோடி" அல்லது "மாதிரி கிளப்பை" நடத்துவதுதான் - அதாவது நாட்டின் மற்ற மக்கள் முன்னோடியாக பார்க்கக்கூடிய விதமாகவும், Agora கிளப் உலகம் முழுவதும் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாகவும் திகழும் வகையில் Agora கிளப்பை நடத்துவதுதான். எனவே, முன்னோடி கிளப்புகள் பரிந்துரைக்கப்பட்ட சந்திப்பு வடிவம் மற்றும் ஒரு சந்திப்பில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச பாத்திரங்களின் எண்ணிக்கைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். முன்னோடி கிளப் ஒரு சாதாரண பொது கிளப்பை விட சற்று கடுமையான தேவைகளைக் கொண்டுள்ளது, ஏனென்றால், இது சாதாரண கிளப்பை விட ஒரு படி உயர்ந்தது - இது அமைப்பு செயல்படும் முறையை இது பிரதிபலிக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகளை அறிய இந்த ஒப்பீட்டு பட்டியலைப் பார்க்கவும்.
சில சந்திப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் பாத்திரங்களைப் பதிவுசெய்து, Agora சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனும், குறிப்பாக ஊடகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் தங்களது சொந்த நாட்டிலுள்ள பிற வெளியீடுகளில் பகிர்வதன் மூலம் முன்னோடி கிளப் உதவி புரிகிறது. Agora தூதர்கள் அமைப்பின் விழுமியங்கள், இலட்சியங்கள் மற்றும் முக்கிய கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும்; அதனால்தான் இந்த கிளப் முடிந்தவரை எந்தவிதமான குறைபாடும் இல்லாத முறையில் செயல்படுவது முக்கியம்.
முன்னோடி கிளப் பொது மக்கள் அல்லது பிற அமைப்புகளிலிருந்து விருந்தினர்களை வரவேற்று, முடிந்தவரை கலந்து கொள்வதற்கு சில கட்டுப்பாடுகளையும் தேவைகளையும் விதித்து, மாதத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சந்திக்க வேண்டும்.
உதாரணமாக, பின்வரும் விஷயங்கள் முன்னோடி கிளப்புகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை:
- விருந்தினர்கள் சந்திப்பில் பங்கெடுக்க நீண்ட காலத்திற்கு முன்பே வருகை அறிவிப்பு தர வேண்டும்
- பொது போக்குவரத்து மூலம் எளிதில் அணுக முடியாத தொலைதூர இடங்கள் அல்லது வளாகங்களில் சந்திப்பு இடங்கள் இருப்பது
- சந்திப்பு இடங்கள் கடுமையான பாதுகாப்புத் தேவைகளைக் கொண்டிருப்பது
- கலந்து கொள்வதற்கு முன் விருந்தினர்கள் குழுக்களில் அல்லது அஞ்சல் பட்டியல்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை
- பரிந்துரைக்கப்பட்ட சந்திப்பு அமைப்பிலிருந்து பெருமளவில் மாறுபடும் சந்திப்பு வடிவங்கள்
முன்னோடி கிளப்புகள் முடிந்தவரை குறைந்த கட்டணத்தைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் விருந்தினர்கள் கலந்து கொள்ள கட்டணம் வசூலிக்கக்கூடாது.
சமூக ஊடகம்
Agora Speakers முகநூல் குழுக்கள், மன்றங்கள் (ஃபாரம்ஸ்) போன்ற பல சமூக ஊடகங்களை பராமரிக்க வேண்டும். Agora-வின் சமூக ஊடக சேனல்களுக்கு ஒரு தூதுவர் பொறுப்பு வகித்து, அதனை நிர்வகிக்கும் உரிமைகளைக் கொண்டுள்ளார். இந்தச் சேனல்களும் முடிந்தவரை சீராக இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும், அதாவது அடிப்படையில் உறுப்பினர் கோரிக்கைகளை விரைவில் அங்கீகரித்தல், கேள்விகளுக்கு பதிலளித்தல், கேள்விக்குரிய உள்ளடக்கத்தை நீக்குதல் என உடனுக்குடன் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும்.
தூதர்கள் எதையும் தொடர்ந்து வெளியிடவோ அல்லது ஏதேனும் வகையான வலைப்பதிவு அல்லது செய்திமடல்களை பராமரிக்கவோ தேவையில்லை. இன்னும், தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால், அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இருப்பினும், Agora தூதர்கள் தங்கள் கிளப்பின் செயல்பாட்டை விளக்கும் ஊடகங்களை (புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்) அவ்வப்போது பகிருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
Agora-வில் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ மொழிகளைப் பொருட்படுத்தாமல், தூதர்கள் அனைத்து சமூக ஊடக சேனல்களிலும் நிறுவனத்தின் எல்லைகளை விரிவுப்படுத்த நாட்டில் பேசப்படும் பல மொழிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பிற செயல்பாடுகள்
Agora தூதர்கள் பின்வருவனவற்றையும் செய்யலாம்:
- நாட்டில் Agora சமூக நெட்வொர்க்குகளை (முகநூல் குழுக்கள், ட்விட்டர் போன்றவை) நிர்வகிக்கலாம்.
- அமைப்பு தங்கள் நாட்டில் வளருவதற்கு முக்கிய புள்ளியாக அல்லது மையமாக செயல்படலாம்.
- பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கிளப்புகளுக்கு விருதுகளை வழங்கலாம்.
- அமைப்பின் மேலும் வளர்ச்சிக்கு, தங்கள் நாட்டில் அல்லது வேறு இடங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களைப் பரிந்துரைக்கலாம்.
- குறிப்பிட்ட மத அல்லது அரசியல் பிரச்சினைகள், மொழிபெயர்ப்புத் தேவைகள், வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள் என அமைப்புக்குத் தெரியாத உள்ளூர் பிரச்சினைகள் குறித்த புரிதலை வழங்கலாம்.
- ஊடக விசாரணைகள் மற்றும் ஊடகங்கள் தொடர்பான விஷயங்களுக்கு தொடர்பு கொள்ளக்கூடிய விவரங்களை வழங்கலாம்.
- நிறுவனத்தை தீவிரமாக பிரபலப்படுத்தலாம், புதிய கிளப்புகள் உருவாவதற்கு உதவலாம்.
- கிடைக்கும் நேரங்களில், வருங்கால நிறுவனங்களில் டெமோ சந்திப்புகளை நடத்தலாம்.
- வருங்காலத்தில் கிளப் தொடங்கவிருப்பவர்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கலாம்.
- Agora-வின் வளர்ச்சிக்கான விளம்பர பிரச்சாரங்கள் அல்லது சேனல்கள் மற்றும் வாய்ப்புகளை ஏற்பாடு செய்யலாம், பங்கேற்கலாம் அல்லது பரிந்துரைக்கலாம்.
- உள்ளூர் நாட்டு அலுவலர்களின் பங்கேற்பு சம்பந்தப்பட்ட அல்லது பங்கேற்பு தேவைப்படும் செயல்திட்டங்களுக்கு உள்ளூர் தொடர்பை வழங்கலாம்.
- உள்ளூர் Agora நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்யலாம், பங்கேற்கலாம் அல்லது பரிந்துரைக்கலாம்.
- உலகளாவிய அளவில் நிறுவனத்தை வளர்ப்பதற்கான யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் ஆழமான பார்வை ஆகியவற்றை பகிர்ந்துக்கொள்ளும் சந்திப்புகளில் பிற தூதர்களுடன் பங்கேற்கலாம்.
- ஒழுங்கு நடவடிக்கை பிரச்சினைகளுக்கு மேல்முறையீட்டு நபராக செயல்படலாம்.
ஒரு தன்னார்வப் பாத்திரமாக, நாட்டில் முன்னோடி கிளப்பை நடத்துவது, ஃபவுண்டேஷனை பிரபலப்படுத்துவது மற்றும் எங்களது விழுமியங்களை நிலைநிறுத்துவதைத் தவிர வேறு எந்த பயணமோ அல்லது வேறு "தேவையான" செயல்பாடுகளோ ஒன்றும் இல்லை.
தூதர்களின் அங்கீகாரம்
இணையதளத்தில் மற்றும் Agora வெளியீடுகளில் ஒரு முக்கிய இருப்பை பெறுவது உட்பட தூதர்கள் Agora-வில் பல வழிகளில் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
அனைத்து தூதர்களும் எங்களது விக்கியில் சிறப்பு சுயவிவரத்தைக் கொண்டுள்ளனர்.
வரையறைகள்
Agora தூதராக இருப்பது Agora Speakers International ஃபவுண்டேஷனை சட்டப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தவோ, அதன் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது பிணைப்பு ஒப்பந்தங்களில் நுழையவோ உரிமை அளிக்காது என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
மேலும், ஒரு தூதராக உங்கள் பாத்திரத்தை வேறு எந்த அமைப்பையும், வணிகத்தையும், சேவையையும் அல்லது Agora Speakers International ஏதேனும் வகையில் பிற நிறுவனங்கள், வணிகங்கள், சேவைகள் அல்லது தயாரிப்புகளை அங்கீகரிக்கிறது, ஆதரிக்கிறது, பங்களிக்கிறது அல்லது அத்துடன் தொடர்புடையது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தக்கூடாது.
இறுதியாக, தூதர்கள் வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் மற்றும் வழிநடத்துபவர்களாக செயல்பட வேண்டும், ஆனால் தூதர் பாத்திரம் எந்த கிளப்பின் மீதும் அதிகாரத்தை செலுத்தக்கூடாது, அல்லது அதன் உறுப்பினர்கள் மீது முடிவுகளைத் திணிக்கும் அதிகாரத்தை அல்லது இயலுமையைக் கொண்டிருக்கக்கூடாது.
Agora தூதராக இருப்பது, மற்ற நிறுவனங்களில் இதே போன்ற பாத்திரத்தைக் கொண்டிருப்பதுடன் இணக்கமானது, இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் தூதர் பாத்திரத்தை நீங்கள் சரியாகச் செயல்படுத்தும் வரை. நிச்சயமாக, Agora-க்கு பதிலாக நீங்கள் தொடர்ந்து மற்ற நிறுவனங்களை பிரபலப்படுத்தினால், Agora தூதருக்கு நீங்கள் உண்மையில் பொருத்தமானவரா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். குறைந்தது மற்ற நிறுவனங்களைப் போலவே நீங்கள் Agora-வை முடிந்தளவு பிரபலப்படுத்துவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய தூதர்கள்
தற்போது Agora தூதர்களாக திகழுபவர்களின் பட்டியல் இதோ இங்கே - /%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D -, இந்தப் பட்டியல் இது தொடர்பான விஷயங்களுக்கு ஒரே ஆதாரம். சில நாடுகளில் தூதர் இல்லை, ஆனால் அது பரவாயில்லை: இதன் பொருள் அந்த நாட்டில் உறுப்பினர்கள் மற்றும் கிளப்புகள் உள்ளன, ஆனால் யாரும் இதுவரை அந்நாட்டிற்கான தூதராக இருக்க முன்வரவில்லை.
Agora சமீபத்தில் பிரபலமாகிவிட்டது, சிலர் தூதர்கள், பிரதிநிதிகள், இயக்குநர்களாக இருக்க முன்வருகின்றனர், வேறு என்ன வேண்டும்.
Agora-வில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட "பதவிகள்":
- கிளப் நிறுவனர்கள் - கிளப் அளவில்.
- கிளப் அலுவலர்கள் - கிளப் அளவில்.
- நாட்டின் தூதர்கள் - நாடளவில்.
எங்களிடம் "பிராந்திய இயக்குநர்கள்", "கண்டத்தின் தூதர்கள்" அல்லது இதே போன்ற பிற கற்பனை பாத்திரங்கள் இடம்பெறவில்லை.
கௌரவ தூதர்கள்
தற்போது செயல்பாட்டில் இல்லாத, ஆனால் ஃபவுண்டேஷனிற்கு விதிவிலக்கான சேவையை வழங்கிய தூதர்கள் கெளரவ தூதர்கள் என்ற பதவியை வகிக்கின்றனர், இது அவர்களுக்கு தங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கிறது, ஆனால் தீவிரமாக செயல்படுவது அல்லது கிளப்புகளை தொடங்குவது அல்லது சமூக நெட்வொர்க்குகளில் நடுநிலையாளராக செயல்படுவது போன்ற கடமைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறது.