பின்வரும் பிரிவு ஏதேனும் கட்டணங்கள் அல்லது நிதிகளை சேகரிக்கும் அனைத்து கிளப்புகளுக்குமான கட்டாய விதிகளை கோடிட்டுக் காட்டுகிறது - இவை இந்தக் கட்டணங்கள் அல்லது நிதிகளை எந்த ஆதாரத்தில் இருந்து சேகரிக்கிறது அல்லது எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை கட்டணங்களை வசூலிக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல். கார்ப்பரேட் கிளப்புகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது, இவை நிதி தொடர்பாக தங்கள் நிறுவனங்களின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

கிளப்பானது நிதி திரட்டுவது அல்லது வெளிப்புற நன்கொடைகளை மட்டுமே நம்பியிருந்தாலும் இந்த விதிகள் பொருந்தும், ஆனால் உறுப்பினர்களிடமிருந்து எதையும் வசூலிக்காது என்பதை நினைவில் கொள்க.

 

வரையறைகள்

 

"கிளப் தளம்"  என்பது கிளப்பின் ஆன்லைன் இருப்பு என வரையறுக்கப்படுகிறது, இது ஒரு வலைத்தளம், சமூக ஊடக பக்கம் அல்லது குழு, மன்றம் போன்றவையாக இருக்கலாம்.

கிளப் ஜனநாயக பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்ட வாக்களிப்பு நடைமுறைகளின்படி "உறுப்பினர்களின் ஒப்புதல்" பயன்படுத்தப்படுகிறது. வாக்கெடுப்புக்கு உட்பட்ட அனைத்து செலவு திட்டங்களிலும் பின்வருபவை இடம்பெற வேண்டும்:

  • செயல்பாட்டின் சரியான நோக்கம்
  • அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகைகள்
  • ஒப்புதல் பெற்ற தேதியிலிருந்து செயல்படுத்த குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச காலக்கெடு, அதிகபட்ச காலக்கெடு என்பது ஒரு வருடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

"இயக்க (செயல்பாட்டு) செலவுகள்"  என்பது கிளப்பின் வழக்கமான செயல்பாட்டிற்கு தேவைப்படும் தவிர்க்க முடியாத செலவுகள் ஆகும், இவற்றுள் பின்வருபவை அடங்கும்:

  • சந்திப்பு நடைபெறும் காலத்திற்கான இட வாடகை.
  • சந்திப்பின்போது பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வாடகை: கணினிகள், மைக்ரோஃபோன்கள், புரஜெக்டர்கள் போன்றவை.
  • ஏற்கனவே இருக்கும் உபகரணங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள்.
  • சந்திப்பிற்கு தேவையானதை அமைப்பது மற்றும் சந்திப்பிற்கு பிந்தைய செலவுகள் (தயார் செய்வது, சுத்தம் செய்வது போன்றவை)
  • அலுவலக பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள் (காகிதம், பேனாக்கள், புகைப்பட நகல்கள், மதிப்பீட்டு படிவங்களை பிரிண்ட் செய்வதற்கான பிரிண்ட்டர் மை அல்லது டோனர் போன்றவை)
  • எழுதுபொருட்கள் (வணிக அட்டைகள், பேட்ஜ்கள், வரவேற்பு பேக்குகள், பின்கள், பேனர்கள் போன்றவை)
  • வங்கி பண பரிமாற்ற கட்டணம், கணக்கு பராமரிப்பு கட்டணம், வரி போன்ற நிதி ரீதியான செலவுகள்.
  • ஒரு கிளப்பின் உள்ளூர் சட்ட ரீதியான கடமைகளினால் ஏற்படும் செலவுகள் (காப்பீடுகள், சட்ட ரீதியான பதிவு, சட்ட ரீதியான புத்தக பராமரிப்பு போன்றவை)

செயல்பாட்டை சாராத செலவுகளுக்கான உதாரணங்கள்:

  • சாதனங்களின் நிரந்தர கொள்முதல் செலவுகள்.
  • சிறப்பு நிகழ்ச்சிகள், கட்சிகள் அல்லது பட்டறைகளை ஒழுங்கமைப்பதற்கான செலவுகள்.
  • கட்டணம் விதிக்கும் பேச்சாளர்கள் அல்லது பயிற்சியாளர்களை அழைப்பதற்கான செலவுகள்.
  • தொலைதூர போட்டிக்கு கிளப் போட்டி வெற்றியாளரை அனுப்புவதற்கான ஆதரவு செலவுகள்.

"Agora தொடர்பான நிகழ்ச்சிகள்" என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Agora கிளப்புகளால் ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது இணை ஸ்பான்சர் செய்யப்பட்ட, அனைத்து மைய கோட்பாடுகளுடன் (குறிப்பாக நடுநிலை கோட்பாட்டுடன்) இணைந்திருக்கின்ற, Agora உடைய நோக்கம் அல்லது இலக்குகளை முன்னேற்றுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஏதேனும் நிகழ்ச்சிகளாகும். இத்தகைய நிகழ்ச்சிகளின் சில எடுத்துக்காட்டுகள் இதோ இங்கே:

  • பொது சொற்பொழிவு, விவாதம் மற்றும் பிற ஒத்த போட்டிகள்.
  • வெவ்வேறு மட்டங்களில் Agora மாநாடுகள்.
  • Agora கிளப்புகளின் விளம்பரத்திற்கான திறந்த நிலை நிகழ்ச்சிகள்.
  • வருங்கால கிளப்புகளுக்கான ஒத்திகை சந்திப்புகள்.
  • பட்டறைகள், கருத்தரங்குகள், பயிற்சி அமர்வுகள் போன்றவை.
  • செல்லுபடியாகும் கிளப் சமூக செயல்திட்டங்கள்.
  • சந்தைப்படுத்துதல் மற்றும் உறுப்பினருரிமை வளர்ச்சி நோக்கங்களுக்காக கிளப்பின் இருப்பு பொருத்தமான இடங்களில் கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் அல்லது பிற ஒத்த மூன்றாம் தரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது.

கிளப் பங்கேற்பு அனுமதிக்கப்படாத நிகழ்ச்சி வகைகளின் உதாரணங்களுக்கு, தயவுசெய்து நடுநிலை கோட்பாட்டை சரிபார்க்கவும்.

"அதிகாரப்பூர்வ Agora நிகழ்ச்சிகள்" என்பது Agora Speakers International ஃபவுண்டேஷனால் உருவாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த அளவில் பொருந்தக்கூடிய ஏதேனும் நிகழ்ச்சிகளாகும். தற்போது, இதுபோன்ற இரண்டு வகையான நிகழ்ச்சிகள் உள்ளன:

  • அதிகாரப்பூர்வ விதி புத்தகங்களைப் பின்பற்றும் போட்டிகள் அனைத்தும்
  • அனைத்து புவியியல் மட்டங்களிலும் நடைபெறும் Agora மாநாடுகள்.

 

நிதி தொடர்பான விதிகள்

 

நிதி தொடர்பான சுதந்திரம்

FF01. கிளப்புகளானது தங்களுக்குத் தேவையான எந்தவொரு கால இடைவெளியிலும், தங்களுக்கு பொருத்தமானதாகக் கருதும் ஏதேனும் தொகையை வசூலிக்க கிளப்புகள் முடிவு செய்யலாம், மேலும் பின்வரும் அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்பட்டு ஏதேனும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து நிதியினைப் பெறலாம்.

FF02. உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கிளப் கட்டண தொகை, கால இடைவெளி என அனைத்தும் கிளப் தளங்களில் பொதுவில் காணும்படி இருக்க வேண்டும். அத்தகைய தகவல்களை அணுகுவதற்கு எந்தவொரு படிவத்தையும் நிரப்பவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ தேவையில்லை.

FF03. உறுப்பினர்களிடமிருந்து பாரபட்சமாக கட்டணம் வசூலிக்க கூடாது: அனைத்து உறுப்பினர்களும் ஒரே கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்வரும் விதிவிலக்குகள் அனுமதிக்கப்படுகின்றன:

  • மிகவும் குறைந்த வருமானம் அல்லது சிறுபான்மை குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு தள்ளுபடி அல்லது இலவச உறுப்பினருரிமை வழங்கப்படலாம். எ.கா., மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், வேலையில்லாதவர்கள், சிறுபான்மையினர், அகதிகள் போன்றவர்கள். இந்த சூழ்நிலைகளை ஆராய்வதற்கான உரிமையை நாங்கள் கொண்டிருக்கிறோம், ஒரு கிளப் இந்த வரையறையை தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதை பாரபட்சமான உறுப்பினர் கட்டணமாக மாற்றுவதாகவும் நாங்கள் அறிந்தால் அவற்றை நீக்குவதற்கு நாங்கள் கூறலாம் (எ.கா., 'வெள்ளை ஆண்களை' 'சிறுபான்மை குழு' என்று வரையறுக்கும் ஒரு கிளப்).
  • நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக இல்லாத மொழியில் செயல்படும் கிளப்புகளுக்கு (எ.கா: ஸ்பெயினில் இயங்கும் ஆங்கில சொற்பொழிவு நடைபெறும் ஒரு கிளப்), அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு தள்ளுபடி அல்லது இலவச உறுப்பினருரிமை வழங்கப்படலாம்.
  • பொது சொற்பொழிவு மற்றும் தலைமைத் துறைகளில் உள்ள ஏதேனும் தொழில் வல்லுநர்களுக்கும் தள்ளுபடி அல்லது இலவச உறுப்பினருரிமை வழங்கப்படலாம், அவர்கள் வழக்கமான முறையில் கிளப் சந்திப்புகளின்போது மதிப்பீடுகள், பட்டறைகள் அல்லது வழிகாட்டுதல்களை வழங்கினால்.

FF04. வழக்கமான அமர்வுகளின் போது விருந்தினர்கள் மற்றும் பிற Agora உறுப்பினர்கள் கிளப்பைப் பார்வையிட கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. சிறப்பு நிகழ்ச்சிகள், விருந்தினர்கள், பேச்சாளர்கள் உடனான சந்திப்புகள், பட்டறைகள் போன்ற வழக்கமல்லாத அமர்வுகளின் போது, முன்னதாகவே பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒரு முறை கட்டணம் அந்நிகழ்ச்சிக்கு வருகை புரியும்போது வசூலிக்கப்படலாம். வழக்கமல்லாத அமர்வு குறித்து அறிவிக்கும் அதே நேரத்திலேயே இந்த ஒரு முறை கட்டணம் குறித்து அறிவிக்க வேண்டும்.

FF05. Agora Speakers International உடைய இலட்சியங்கள், கொள்கைகள், இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராக இயங்கும் மூன்றாம் தரப்பினரின் அநாமதேய நன்கொடைகள் அல்லது நிதிகளை கிளப்புகள் ஏற்கக்கூடாது.

 

நிதிகளின் முறையான பயன்பாடு

 

VU01. ஏதேனும் உறுப்பினரின் தனிப்பட்ட லாபத்திற்காக அல்லது நன்மைக்காக கிளப்பின் நிதி பயன்படுத்தப்படக்கூடாது. நிதிகளின் பயன்பாடு எப்போதும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் உள்ளூர் சட்டத் தேவைகளுக்கு இணங்கியிருக்க வேண்டும். உள்ளூர் சட்டத்திற்கும் இந்த விதிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால், மிகவும் கட்டுப்பாடானது எதுவோ அதுவே பொருந்தும்.

VU02. கிளப் வாங்குகிற பொருட்கள் அல்லது சேவைகள் அனைத்தும் கிளப்பின் செயல்பாட்டிற்காக அல்லது போட்டிகள், மாநாடுகள் போன்ற Agora தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இருக்க வேண்டும். கிளப்பின் நிதியை அதிகரிப்பதையே ஒரே நோக்கமாக கொண்டிருக்கும் ஏதேனும் செயல்பாடுகளுக்கு கிளப்பின் நிதிகளை செலவழிக்கக் கூடாது. குறிப்பாக, பொதுவில் வர்த்தகம் செய்யப்படுகிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், பத்திரங்கள், பொருட்கள், அந்நிய செலாவணி, ஃபியூச்சர்கள், ஆப்ஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட ஏதேனும் முதலீட்டு செயல்பாடுகளில் கிளப்புகள் ஈடுபடக்கூடாது.

VU03. கிளப்புகள் பெறும் எந்தவொரு சொத்துகளும் கிளப்பிற்காகவும், Agora உடைய நோக்கம் மற்றும் இலக்குகளுக்கு இணங்கிய பிற Agora தொடர்பான செயல்பாடுகளுக்காகவும் கிளப் உறுப்பினர்கள், அந்நாட்டின் Agora பிரதிநிதிகள் அல்லது சந்திப்பு விருந்தினர்களால் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட வேண்டும். பெற்ற சொத்துகளின் இத்தகைய பயன்பாடு கூடுதல் கட்டணங்களுக்கு உட்பட்டதாக இருக்காது.

VU04. கிளப்பைக் கலைக்கும் சூழல் ஏற்பட்டால், மீதமுள்ள அனைத்து நிதிகளும் சாதாரண பெரும்பான்மையால் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும். எந்தவொரு உடண்பாடையும் எட்ட முடியாவிட்டால், அந்த நிதி Agora Speakers International-க்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும்.

VU05. கிளப்புகள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.

VU06. கிளப்புகள் எந்தவொரு முதலீட்டு கருவிகளையும் வைத்திருக்கக்கூடாது மற்றும் எந்தவொரு கடனும் பெறக்கூடாது.

VU07. கிளப் பயன்படுத்தும் அனைத்து கணக்குகளும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் திறக்கப்பட வேண்டும், அவை கிளப் பதிவுசெய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ளூரில் இயங்குகின்றன வங்கிகளாக இருக்க வேண்டும், மேலும் அவை நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயங்களில் ஒன்றை முக மதிப்பாக கொண்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, பிரான்சில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கிளப், பிரான்சில் இல்லாத கேமன் தீவுகளில் உள்ள ஒரு வங்கியில் கனக்குத் திறக்கக்கூடாது.
எந்த வங்கியைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், யூரோவைத் தவிர வேறு எந்த முக மதிப்பிலும் கணக்குத் திறக்கக்கூடாது.

 

பயன்பாடு குறித்த மேற்பார்வை

 

OV01. நிதி அல்லது கட்டணத்தை வசூலிக்கும் கிளப்களில் தலைவரைத் தவிர பொருளாளர் அதிகாரி இருக்க வேண்டும்.

OV02. கிளப்பானது அணைத்து கிளப் தளங்களிலும் கிளப் நிதிகள் குறித்த விரிவான, அவ்வப்போதைய தகவல்களை வெளியிட வேண்டும், மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ஃபவுண்டேஷனுக்கு விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள அனைத்து Agora உறுப்பினர்களுக்கும் கிடைக்க வேண்டும். இந்த நிதி அறிக்கையானது வருமானங்கள் மற்றும் செலவுகளை விவரிக்கும் எக்செல் கோப்பு போன்ற எளிமையானதாக இருக்கலாம் அல்லது முழுமையான கணக்கியல் அறிக்கையைப் போல சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உறுப்பினர் கட்டணம் குறிப்பாக எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்த வடிவமைப்பைத் தவிர, கிளப் செலவுகள் ஒருங்கிணைக்கப்படாத, விரிவான வடிவத்திலும் இடம்பெற வேண்டும். விரிவான வடிவமைப்பில் ஒவ்வொரு பரிவர்த்தனையும் குறைந்தது பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:

  • தேதி,
  • செலவழித்த அல்லது பெற்ற தொகை,
  • ஆதாரம் அல்லது மூலம் (கட்டணம் அல்லது நன்கொடைகளுக்கு) அல்லது வழங்குநர் (பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு).
  • பரிவர்த்தனை செய்ததற்கான நோக்கம் அல்லது காரணம். (பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு - வாங்கிய தயாரிப்பு அல்லது சேவை குறித்த விவரங்கள்)

OV03. பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மற்றும் குறிப்பிட்ட, பட்ஜெட் செய்யப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே, கிளப்கள் 2 வருட இயக்க செலவுகளுக்கு சமமான தொகையை விட அதிகமாக நிதி திரட்ட வேண்டும். இந்த ஒப்புதலானது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

OV04. செயல்பாடு அல்லாத நோக்கங்களுக்காக கிளப்பின் நிதிகளில் (நிதியாண்டின் தொடக்கத்தில் இருப்பில் இருக்கும் நிதிகளை அடிப்படை தொகையாக கணக்கில் எடுத்துக் கொண்டு) 1/3 க்கும் மேற்பட்ட எந்தவொரு பயன்பாட்டுக்கும் உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும், மூன்றில் ஒரு பங்கு (1/3)  என்ற அளவு ஒரு பரிவர்த்தனையாக அல்லது ஒட்டுமொத்தமாக எட்டப்பட்டாலும் கூட. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அந்த பரிவர்த்தனை முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், மற்றும் பரிவர்த்தனையின் அளவு ஒப்புதல் பெற்ற வரம்பிற்குள் இருந்தால் தவிர, நிதியாண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு தொடர்பில்லாத செலவுகளின் தொகையுடன் சேர்க்கப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனையும் கிளப்பின் தொடக்க நிதிகளில் 1/3 ஐத் தாண்டினால் அவற்றுக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.

சில உதாரணங்கள்.

  • ஒரு கிளப் நிதியாண்டை $1000 (1/3 = $333) உடன் தொடங்குகிறது. தலைவர் ஒரு ப்ரொஜெக்டரை $400 க்கு வாங்க விரும்புகிறார். $400> $333, எனவே அதனை வாங்குவதற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் பெற்ற பிறகு, தலைவர் மைக்ரோஃபோனை $15 க்கு வாங்க விரும்புகிறார். இப்போது கொள்முதலின் ஒட்டுமொத்த செலவு $400 + $15> $333 என்பதால், அந்த பரிவர்த்தனையும் ஒப்புதலை பெற வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், விதிமுறை என்னவென்றால், அனைத்து கிளப் நிதிகளில் 1/3 (மூன்றில் ஒரு பகுதி) செலவிடப்பட்ட பிறகு, செயல்பாட்டுக்கு தொடர்பில்லாத ஒவ்வொரு செலவினங்களும் உறுப்பினர்களின் ஒப்புதலை பெற வேண்டும்.
  • ஒரு கிளப் நிதியாண்டை $1000 (1/3 = $333) உடன் தொடங்குகிறது. கிளப்பின் தலைவர் 10 மைக்ரோஃபோன்களை ஒவ்வொன்றும் $30 என்ற விலையில் வாங்குகிறார் (ஒட்டுமொத்த செலவு: $300). பிறகு, அவர் சொற்பொழிவு வழங்க பயன்படுத்தும் சாய்வு மேசையை $50 வாங்க விரும்புகிறார். சொற்பொழிவு மேசையின் ஒட்டுமொத்த செலவு மற்றும் முந்தைய கொள்முதல் $350 ஆக இருப்பதால், அது 1/3 விதியை மீறுவதால் உறுப்பினர்கள் அந்தப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • ஒரு கிளப் நிதியாண்டை $1000 (1/3 = $333) உடன் தொடங்குகிறது. $600 பட்ஜெட்டுடன் ஒரு போட்டியை ஏற்பாடு செய்வதற்கான திட்டத்தை தலைவர் முன்வைத்து அதற்கான ஒப்புதல் பெறுகிறார். அவர் ஒரு புரஜெக்டரை $400 க்கும் 10 மைக்ரோஃபோன்களை ஒவ்வொன்றும் $10  என்ற கணக்கில் $100 க்கு வாங்குகிறார் - மொத்தம் $500. இந்தப் பரிவர்த்தனைகள் எதற்கும் ஒப்புதல் தேவையில்லை. பின்னர் அவர் கிளப்பிற்காக $50 மதிப்புள்ள புத்தக தொகுப்பை வாங்க விரும்புகிறார். மொத்த பரிவர்த்தனை செலவு $550 (>$ 333) என்பதால் இந்த பரிவர்த்தனைக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும், மேலும் இந்தப் பரிவர்த்தனை போட்டியுடன் தொடர்புடையதும் அல்ல.
  • ஒரு கிளப் நிதியாண்டை $1000 (1/3 = $333) உடன் தொடங்குகிறது. $600 பட்ஜெட்டுடன் ஒரு போட்டியை ஏற்பாடு செய்வதற்கான திட்டத்தை தலைவர் முன்வைத்து அதற்கான ஒப்புதல் பெறுகிறார். அவர் ஒரு புரஜெக்டரை $400 க்கு வாங்குகிறார், மேலும் 10 மைக்ரோஃபோன்களை ஒவ்வொன்றும் $25 என்ற கணக்கில் வாங்க விரும்புகிறார். மைக்ரோஃபோன்களை வாங்கினால் செயல்பாட்டுக்கு தொடர்பில்லாத செலவுகள் $650 ஆகிவிடும் - இது முன்னர் ஒப்புதல் பெற்ற பட்ஜெட்டுக்கு அதிகமானது - எனவே உறுப்பினர்கள் அந்தப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

OV05. கிளப் உறுப்பினர்கள் வழங்கக்கூடிய எந்தவொரு செலவு அல்லது நிதி ஒப்புதலும் அதிகபட்சம் ஒரு வருட காலம் வரையில் நீடிக்கும். ஆண்டு முடிந்ததும், அடுத்த ஆண்டு ஒப்புதலை நீட்டிக்க மற்றொரு வாக்கெடுப்பு தேவைப்படும்.

 

Agora தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு நிதியளிப்பது

Agora அமைப்பின் முக்கிய தூண்களில் ஒன்று, போட்டிகள், மாநாடுகள் என கிளப்புகளுக்கு இடையே நடைபெறும் Agora நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுப்பும், அத்துடன் பல கிளப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளுமே (நட்பு ரீதியான ஒன்றுகூடல்கள், அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள் போன்றவை). பொதுவாக இந்த செயல்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்த முன்கூட்டியே நிதியளிப்பு தேவைப்படும்.

AE01. Agora தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் (அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் இல்லை என்றாலும்) டிக்கெட் மற்றும் பொருட்கள் விற்பனை, ஸ்பான்சர்ஷிப், மானியங்கள் மற்றும் பிறவற்றின் மூலம் சுயநிதி திரட்டப்பட்ட வேண்டும்.

AE02. இதுபோன்ற அனைத்து நிகழ்ச்சிகளின் மொத்த வருமானத்தில் 10% (அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் இல்லை என்றாலும்) Agora Speakers International ஃபவுண்டேஷனுக்குச் செல்லும்

AE03. ஒரு குறிப்பிட்ட அளவு முன் நிதி தேவைப்படும் ஏதேனும் உத்தியோகபூர்வ Agora நிகழ்ச்சிகளின் செலவினங்களானது அந்தப் புவியியல் பகுதியில் உள்ள அனைத்து தனிப்பட்ட உறுப்பினர்களால் செலுத்தப்படும், மாநாடுகள் போன்ற சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளின் செலவினங்களுக்கு முழு நாட்டினதும் உள்ள உறுப்பினர்களால் செலுத்தப்படும். உறுப்பினர்கள் செலுத்தும் வேறு ஏதேனும் கட்டணங்களுக்கு கூடுதலாக, அந்தச் செலவுகளின் விகிதாசார தொகையை தொடர்புடைய பிராந்தியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வழங்குவார்கள். இந்த விகிதாசார தொகை என்பது பிராந்தியத்தில் உள்ள தனித்துவமான உறுப்பினர்களின் எண்ணிக்கையால் தேவையான நிதித் தொகையை வகுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையாக இருக்கும், மேலும் இந்தத் தொகை அவர்கள் எத்தனை கிளப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒவ்வொரு கிளப்பும் இந்தத் தேவையான பங்களிப்பை அதன் சொந்த நிதியில் இருந்து செலவிடுமா அல்லது அதனை உறுப்பினர்கள் வாயிலாக செலுத்துமா, அல்லது மேற்கூறியவற்றின் கலவையாக செலுத்துமா என்பதை சுதந்திரமாக தீர்மானிக்கலாம்.

AE04. நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் ஏதேனும் இலாபங்கள் அல்லது நஷ்டங்கள் கிளப் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரிக்கப்பட்டு, மீண்டும் கிளப்புகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். AE03 இன் படி உறுப்பினர்கள் செலுத்த வேண்டியிருந்த தொகை வரை, கிளப்புகள் அந்தப் பணத்தை தங்கள் உறுப்பினர்களுக்கு திருப்பி வழங்கலாம். இலாபத்தின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவதா இல்லையா என்ற முடிவினை எடுப்பது ஒவ்வொரு கிளப்பின் நிர்வாகக் குழுவிற்கும் விடப்படுகிறது. உறுப்பினர்களுக்கு திருப்பி அளிக்கப்படாத நிதித் தொகை கிளப் நிதியின் ஒரு பகுதியாக மாறும்.

கிளப்புகளானது தங்கள் உறுப்பினர்களிடம் இருந்து முதலில் சேகரித்த தொகையை விட அதிகமாக திருப்பி வழங்காது என்பதை நினைவில் கொள்க; இல்லையென்றால், இது ஒரு இலாப-பகிர்வு திட்டமாக கருதப்பட்டு, இலாப நோக்கற்ற அந்தஸ்துக்கு பொருந்தாமல் போய்விடும்.

AE05. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பைச் சுற்றியுள்ள அனைத்து கணக்கு வழக்குகளையும், அவை நிகழும் வேளையில், OV02 இல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களோடு, தலைமையகம் வழங்கி இருக்கும் கணக்கியல் மென்கருவிகளைப் பயன்படுத்தி, Agora Speakers International தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

 

உதாரணத்திற்கு:
ஒரு நாட்டில் அடுத்த ஆண்டு Agora சர்வதேச மாநாடு நடத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு $1050 முன் நிதி தேவை உள்ளது. அந்த நாட்டில் 14 கிளப்புகள் உள்ளன, மொத்தம் 180 உறுப்பினர்கள் (சில உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகளைச் சேர்ந்தவர்கள்) இருக்கிறார்கள். AE03 இன் படி, ஒவ்வொரு உறுப்பினரும் மாநாட்டை நடத்தும் அமைப்பை ஆதரிக்க $5.83 செலுத்த வேண்டும். "புராக்ரெஸ்ஸிவ் ஸ்பீக்கர்ஸ்" என்கிற ஒரு கிளப் அதன் உறுப்பினர்களிடம் $2.00 மட்டும் கேட்கலாம் என்றும், ஒவ்வொரு உறுப்பினரும் செலுத்த வேண்டிய மீதமுள்ள $3.83 தொகையை அதன் சொந்த நிதியில் இருந்து செலுத்தலாம் என்றும் முடிவு செய்கிறது.

டிக்கெட் விற்பனை, கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் மற்றும் மாநில மானியங்கள் மூலம் மாநாட்டிற்கு $12.850 நிதி கிடைக்கிறது. AE02 இன் படி, $1.285 Agora Speakers International உடைய செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக செல்லும், மீதமுள்ள $11.565 மாநாட்டு செலவுகளுக்கு வழங்கப்படும். 

மாநாடு முடிந்ததும், மொத்த செலவுகள் $8.440 ஆக மாறுகிறது, எனவே நிகர லாபம் $3.125. எனவே அந்தத் தொகை ஒவ்வொரு கிளப்பின் அளவைப் பொறுத்து 14 கிளப்புகளுக்கு மீண்டும் பகிர்ந்து வழங்கப்படுகிறது. 14 கிளப்களிலும் சம எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்தால், கிளப் ஒவ்வொன்றும் $223.21 பெறும். அந்தத் தொகையில், ஒவ்வொரு கிளப்பும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் $5.83 வரை திரும்பக் கொடுக்கலாம் - "புராக்ரெஸ்ஸிவ் ஸ்பீக்கர்ஸ்" எனும் கிளப்பைத் தவிர - இது $2.00 க்கு மேல் பணத்தை திருப்பி அளிக்கக் கூடாது, ஏனெனில் இது ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் முதலில் சேகரித்த தொகை $2.00 மட்டுமே.                                                                                                                                                                                                       
ஒன்றுக்கு மேற்பட்ட கிளப்புகளில் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு உறுப்பினரும் இந்தத் தொகையை ஒரு முறை மட்டுமே திரும்பப் பெறுவார்கள்.

 

மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கான நிதியுதவி (ஸ்பான்சர்ஷிப்)

 

CP01. நகர மட்டத்திற்கு மேலே நடக்கும் உத்தியோகபூர்வ Agora நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு மட்டுமே ஸ்பான்சர்ஷிப் தகுதியுடையது. 

CP02. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள கிளப்புகள் (தேசிய அளவில் நடப்பதும் அடங்கும்) மாநாட்டில் கலந்துக் கொள்ளும் பின்வரும் பங்கேற்பாளர்களின் செலவுகளுக்கு நிதியுதவி செய்ய தேர்வு செய்யலாம்.

  • போட்டியாளர்கள்.
  • கிளப்பின் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்ற, வாக்களிக்கும் தகுதி உடைய போட்டியிடாத கிளப் பிரதிநிதி.
  • தகுதி வாய்ந்த நிகழ்ச்சியில் பட்டறைகள், பயிற்சி அமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நேரடியாகத் தலைமைத் தாங்கும் நபர்கள்

    கிளப்கள் ஒரு வகையான பங்கேற்பிற்கு நிதியளிக்க முடிவு செய்யலாம், ஆனால் மற்றவைக்கு அல்ல.

CP03. ஸ்பான்சர்ஷிப் முடிவானது கிளப்புகளில் உள்ள தலைவர்களின் பெரும்பான்மை மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும், மேலும் வாக்களிப்பு பின்வருமாறு நடக்க வேண்டும்:

  • போட்டியாளர்களுக்கு: முதல் போட்டி சுற்றுக்கு முன் (கிளப் மட்டத்தில்)
  • பிற பங்கேற்பாளர்களுக்கு - நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு தாமதமாகாமல்.
வாக்களிப்பதற்கான இந்த குறிப்பிட்ட நேர வரம்புகள், பங்கேற்பாளர்கள் அந்த கிளப்பைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதற்கான அளவுகோல்களின் அடிப்படையில், கிளப்புகள் ஸ்பான்சர்ஷிப் செய்வதில் பக்கச்சார்பான முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்காகும். அவர் எந்த கிளப்பைச் சேர்ந்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல் "கொள்கை அடிப்படையில்" முடிவு எடுக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவருக்கு நிதியுதவி  (ஸ்பான்சர்ஷிப்) வழங்கப்படும்.

CP04. உள்ளூர் சட்டத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்படாவிட்டால், கிளப் நிதிகளின் பின்வரும் பயன்பாடு அனுமதிக்கப்பட்டதாகும்:

  • மிகவும் பொருத்தமான போக்குவரத்து வசதியில் பொருளாதார-வகுப்பு சுற்று-பயண செலவுகள்.
  • நிகழ்ச்சிக்கான மிக முழுமையான டிக்கெட் வகையின் விலை.
  • நிகழ்ச்சி நடைபெறும் காலம் (நாட்கள்), கூடுதலாக 2 இரவுகளுக்கான தங்குமிட செலவுகள் (நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு முன்பான வருகையையும், நிகழ்ச்சி முடிந்த மறுநாள் புறப்படுவதை அனுமதித்து)
  • உணவு மற்றும் போக்குவரத்துக்கு நியாயமான தினசரி படி செலவுகள்

CP05. குறிப்பிட்ட கொள்முதல் திட்டங்களுக்கு எதிராக மட்டுமே ஸ்பான்சர்ஷிப் செய்யப்படும். ஸ்பான்சர் செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பணத்திற்காக பரிமாறிக்கொள்வது அனுமதிக்கப்படாது. ஸ்பான்சர் செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைத்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைப்பட்டியல்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அவர்கள் பெறும்போது, வாங்கிய இரண்டு வாரங்களுக்கு மிகாமல் மின்னணு முறையில் தங்கள் கிளப்பின் பொருளாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

உதாரணமாக, பரிந்துரைக்கப்பட்ட ஹோட்டலின் கட்டணம் ஒரு இரவுக்கு 75 டாலர் என்றால், நிதியுதவி பெற்ற (ஸ்பான்சர் செய்யப்பட்ட) பங்கேற்பாளர் இரவு ஒன்றுக்கு $50 கட்டணம் உடைய ஹோட்டலை புக் செய்துவிட்டு, மீதமுள்ள தொகையை தான் வைத்திருக்கக்கூடாது.

இருப்பினும் இதற்கு நேர்மாறானது சாத்தியமாகும் - ஸ்பான்சர் செய்யப்பட்ட பங்கேற்பாளர் ஸ்பான்சர் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக தனது சொந்த பாக்கெட்டிலிருந்து செலவு செய்து ஒரு இரவுக்கு $100 கட்டணம் செலுத்தி ஹோட்டலை புக் செய்யலாம்.

 

விதி மாற்றங்கள்


RC01. இந்த விதிகள் அவ்வப்போது மாறக்கூடும். விதிகள் மாறிய ஆறு மாதங்களுக்குள் கிளப்புகள் புதிய விதிகளுக்கு இணங்க வேண்டும்.