Agora-வில், ஒவ்வொரு சந்திப்பிற்குமான நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் வகையில் நிறைய வசதி உள்ளது. எங்களிடம் பல செயல்பாடுகள் உள்ளன, இவை அனைத்தையும் ஒரே சந்திப்பில் செய்துவிட முடியாது. Agora சந்திப்புகளை மிகவும் தனித்துவமாக்கும் காரணிகளில் இதுவும் ஒன்றாகும் - இவை எப்போதும் ஒரே மாதிரியான சலிப்பான முறையாக இருக்காது. இவை மிகவும் மாறுபட்டதாகவும், பொழுது போக்காகவும் இருக்கும், ஆனால் இந்தச் செயல்பாடுகள் கல்வியை மையப்படுத்தியே இருக்கும்.

 

சந்திப்பிற்குத் தேவையான பான்மைகள்

கிளப்புகள் இலவசமானது - ஃபவுண்டேஷனின் குறிக்கோள்கள், நோக்கம் மற்றும் இலட்சியங்களுடன் இணைந்திருக்கும் வரையிலும், அவை கல்வியை மையப்படுத்தி இருக்கும் வரையிலும், புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தவும், பிரிவுகளின் வரிசையை மாற்றவும், முற்றிலும் புதியவற்றை அறிமுகப்படுத்தவும் நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.

எவ்வாறாயினும், சந்திப்பின் முக்கிய செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு வழக்கமான கிளப் சந்திப்பிலும் இருக்க வேண்டிய மிகக் குறைந்த தேவையான சந்திப்பு கூறுகள் உள்ளன: குறிப்பிட்ட திறமைகள் குறித்து உறுப்பினர்களுக்கு கல்வி அளிப்பது மற்றும் Agora Speakers International உடைய கல்வித் திட்டத்தைப் பின்பற்றுவது ஆகியனவாகும். இது உலகளாவிய கிளப்புகளிடையே குறைந்தபட்ச அளவு நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது.

Agora கல்வி மாதிரியை எவ்வளவு நெருக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு வகையான கிளப்புகள் வெவ்வேறு தேவைகளைக் கொண்டுள்ளன. நீங்கள் நடத்தும் கிளப்பின் வகைக்கு குறிப்பிட்ட கட்டுரையைப் பார்க்கவும்.

நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கான ஒரு டெம்ப்ளேட்டாக நீங்கள் சந்திப்பு செயல்பாடுகள் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

இன்னும் குறிப்பாக, வழக்கமான சந்திப்பிற்கு குறைந்தபட்சம் தேவையான கூறுகள் பின்வருமாறு:

  • சந்திப்பு முழுவதும் ஒரே ஒரு சந்திப்பு தலைவர்தான் இருக்க வேண்டும்.
  • சந்திப்பின் அனைத்து பிரிவுகளும் பங்கேற்பாளர்களின் நேரமும் நேரம் கண்காணிப்பாளர் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும், அவர்களின் மொழி பயன்பாட்டை மொழி இலக்கணவாதி மதிப்பீடு செய்ய வேண்டும்.
  • கடந்த மாதத்தில் கிளப் சாசனம் செய்யப்பட்டால் தவிர, குறைந்தபட்சம் ஒரு செயல்திட்ட சொற்பொழிவாவது இருக்க வேண்டும் (ஒரு கல்வித் திட்ட செயல்திட்டத்தின் படி மேற்கொள்ளப்படும் சொற்பொழிவு).
  • அனைத்து சொற்பொழிவுகளும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
    • அவை செயல்திட்ட சொற்பொழிவுகளாக இருந்தால், செயல்திட்ட மதிப்பீட்டுத் தாள்களின்படி குறைந்தபட்சம் ஒரு மதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
    • அவை செயல்திட்டமில்லாத சொற்பொழிவுகளாக இருந்தால், பேச்சாளருக்கு நிர்ணயித்த குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஏற்ப அவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும், அதனை பேச்சாளர் முன்கூட்டியே அறிய வேண்டும். ஒரு கிளப் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் ஒரே சொற்பொழிவை மதிப்பீடு செய்ய வேண்டுமென தேர்வு செய்யலாம், இவை பொதுவாக "பேனல் மதிப்பீடுகள்" என்று அழைக்கப்படும்.
  • குறைந்தபட்சம் ஒரு மதிப்பீட்டாளர் சொற்பொழிவுக்கு முன் சொற்பொழிவின் நோக்கங்களை விளக்க வேண்டும், அப்போதுதான் இந்த சொற்பொழிவில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம், என்ன கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியும். குறிக்கோள்கள் முந்தைய சொற்பொழிவுக்கு இருந்த அதே விஷயம்தான் என்றால், அவை ஏற்கனவே விளக்கப்பட்டு விட்டால் இது தேவையில்லை (உதாரணமாக, ஒரு சந்திப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பேச்சாளர்கள் ஒரே செயல்திட்டத்தை வழங்கினால், ஒவ்வொன்றுக்கும் விளக்கத் தேவையில்லை)
  • ஒவ்வொரு செயல்திட்டத்தின் மதிப்பீடும் அதே சந்திப்பில் மதிப்பீட்டாளர் (களால்) வாய்மொழியாகவும் பகிரங்கமாகவும் வழங்கப்பட வேண்டும். செயல்திட்டத்திற்கான பொருத்தமான மதிப்பீட்டு படிவங்களைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
     
  • சொற்பொழிவுக்குப்  பிறகு 1-2 நிமிடங்கள் கால அவகாசம் கொடுத்து, பின்பு பேச்சாளர் குறித்து கருத்துக்களை வழங்குமாறு பார்வையாளர்களிடம் கேட்க வேண்டும்.
  • சந்திப்பை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யவும் குறிப்பிட்ட மதிப்பீட்டாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறாத பாத்திரங்களுக்கு கருத்துக்களை வழங்கவும் சந்திப்பு மதிப்பீட்டாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டும்.
வழக்கமாக நடக்கும் சந்திப்புகளுக்கான தேவைகள் இவை. சிறப்பு சந்தர்ப்பங்கள், விருந்துகள், ஒன்றுக்கூடல்கள், சிறப்பு அமர்வுகள், போட்டிகள், விவாதங்கள் போன்றவற்றுக்கு, இந்த வடிவில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இருப்பினும், இந்தச் சிறப்பு சந்திப்புகளின் எண்ணிக்கை, ஒரு மாதத்தில் நடைபெறும் வழக்கமான  சந்திப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காது.