கிளப் அலுவலர்கள் என்றால் யார்?

மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் என்பது பொதுவாக கண்ணுக்குத் தெரியாத விஷயமாக இருக்கும், விஷயங்கள் சீராக செல்லும்போது எல்லோரும் இதனை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் இவை இரண்டும் இல்லையென்றால், விஷயங்கள் சிதறி போய்விடும்.

வெற்றிகரமாக ஒரு கிளப்பை நடத்துவதற்கு நிறைய நேரம் மற்றும் அர்ப்பணிப்பு, சந்திப்புகள் சரியான நேரத்தில் மற்றும் தவறாமல் நடப்பதை உறுதிசெய்ய கவனமாக திட்டமிடப்பட்ட குழுப்பணி தேவைப்படுகிறது, மேலும் இத்தகைய சந்திப்புகள் கல்வி நோக்கம் உடையதாக இருக்க வேண்டும், அவை சுருக்கமானதாகவும், நேரத்தை வீணடிக்காமலும், உறுப்பினர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு, மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான முறையிலும், பறந்து விரிந்திருக்கும் Agora சமூகத்தினால் கிளப் பலன் அடையும் வகையில் என பல விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய பல்வேறு பணிகள் பல்வேறு பொறுப்புகளுடன் கூடிய "அலுவலர் பாத்திரங்கள்" மத்தியில் பகிரப்பட வேண்டும்.

கிளப் அலுவலர்கள் தலைவர்களாகவும் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள். இவை இரண்டும் வேறுபட்ட கருத்தாக்கங்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தலைமைத்துவத்திற்கு விஷயங்களை எங்கே பெற விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தெளிவான யோசனை, யுக்தியினை வகுப்பது, விஷயங்களைப் பெரிய அளவில் சிந்திப்பது, உறுப்பினர்களுடன் உங்கள் கனவைப் பகிர்வது, அவர்களை ஊக்குவிப்பது மற்றும் அதனை அடைவதற்குச் சவால் செய்வது என்பது போன்ற விஷயங்களில் தொலைநோக்கு பார்வைத் தேவைப்படுகிறது. மறுபுறம், நிர்வாகமானது அந்தத் தொலைநோக்கு பார்வையை ஒரு குறிப்பிட்ட செயல் திட்டமாக மாற்றி ஒரு காலக்கெடுவுக்குள் செயல்படுத்தும்.

அனைவருக்கும் இதமான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் கிளப்பை நடத்துவது கிளப் அலுவலர்களின் பொறுப்பாகும். வெவ்வேறு பாத்திரங்கள் வகிக்கும் கிளப் அலுவலர்கள் அனைவரும் தானாக முன்வந்து பதவிகளை ஏற்றுக்கொண்டவர்கள், உண்மையில் சொல்லப்போனால், இவை ஒரு சிறிய சமூகத்தின் மத்தியில் தலைமைத்துவத்தை கடைப்பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.

வணிகங்கள் மற்றும் பெருநிறுவனங்களைப் போலல்லாமல், Agora Speakers போன்ற ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தில், உறுப்பினர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது. அவர்கள் எல்லாத்தையும் தானாக முன்வந்து செய்ய வேண்டும், அதிகபட்சம் அலுவலர் செய்யக்கூடியதெல்லாம் உறுப்பினர்களிடம் பணிவுடன் கேட்பதும், விளக்குவதுமே. உண்மையில் சொல்லப்போனால், ஒரு இலாப நோக்கற்ற சமூகத்தை வழிநடத்துவது வணிகத்தை வழிநடத்துவதை விட மிகவும் சவாலான காரியம், ஏனெனில் அலுவலர்கள் எந்தவொரு வணிகத்தையும் விட மக்கள் தொடர்பாக அதிகப்படியான விஷயங்களையும், ஊக்குவிப்பு திறன்களையும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

அலுவலர் பாத்திரங்களின் அடிப்படை பண்புகள்

ஒவ்வொரு கிளப்பிலும் (வழக்கமாக சட்ட ரீதியான காரணங்களுக்காக) தேவைக்கு ஏற்றாற்போல குறிப்பிட்ட அலுவலர் பாத்திரங்கள் உள்ளன, இவற்றுள் சில விருப்பத்திற்குரியவை ஆனால் சில பாத்திரங்கள் பரிந்துரைக்கப்படுபவை:

நாம் "பாத்திரங்கள்" குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம், "மக்கள்" குறித்து அல்ல என்பதை நினைவில் கொள்க. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களைக் கொண்டிருக்கலாம் (எடுத்துக்காட்டாக, மிகச் சிறிய கிளப்புகளில், பொருளாளர் மற்றும் செயலாளர் ஒரே நபராக இருக்கலாம்).

இதற்கு நேர்மாறானதும் சாத்தியமே: ஏதேனும் ஒரு பாத்திரம் - தலைவரைத் தவிர - பணிச்சுமை அதிகமாக இருக்கும்போது பல நபர்கள் மத்தியில் பகிரப்படலாம். மிகப் பெரிய கிளப்பைப் பொறுத்தவரை, கல்வியின் பொறுப்பில் இரண்டு துணைத் தலைவர்கள் இருக்கலாம். இந்தச் சூழலில், ஒவ்வொரு நபருக்கும் தனக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றது என்பது தெளிவாக விளக்கப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.

அலுவலர்கள் வகிக்கும் குறிப்பிட்ட பாத்திரங்களுக்கு கூடுதலாக, கிளப்பானது "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்" (சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது விருந்துகளுக்கு), "பிளாகர்" போன்ற கூடுதல் அதிகாரி பாத்திரங்களை வரையறுக்கலாம்.

  • அனைத்து அலுவலர் பாத்திரங்களும் தன்னார்வத்தின் பேரிலானது. எந்த உறுப்பினரையும் அலுவலராக இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கக்கூடாது. ஏதேனும் கல்வி ரீதியான செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு உறுப்பினரானவர் கிளப்பில் அலுவலராகவோ அல்லது அலுவலரின் ஏதேனும் கடமைகளைச் செய்திருக்கவோ வேண்டுமென்று எந்தக் கிளப்பும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
  • அலுவலர் பாத்திரங்களுக்கு 6 மாதங்கள் அல்லது 1 வருடம் என வரையறுக்கப்பட்ட காலமே உள்ளது.
  • அனைத்து அலுவலர்களும் தங்கள் பதவிக் காலம் முழுவதும் கிளப்பின் செயலில் உள்ள உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தயவுசெய்து "செயலில்" என்ற முக்கிய சொல்லைக் கவனியுங்கள், இதன் பொருள் அலுவலர்கள் என்றாலும், மற்ற உறுப்பினர்களைப் போல வழக்கமான கிளப் சந்திப்புகளில் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.
  • பாத்திரங்களை வகிக்கும் கிளப் அலுவலர்கள் ஒவ்வொருவரும் கட்டணமின்றி செயலாற்றுபவர்கள். பதவியில் இருக்கும் எந்தவொரு அலுவலரும் கிளப் அல்லது கிளப்பை நடத்தும் அமைப்பிலிருந்து எந்த ஈடாக்கமும் பெறக் கூடாது. இருப்பினும், அவர்கள் வகிக்கும் பதவியுடன் தொடர்புடைய அவர்களின் செயல்பாடு காரணமாக ஏற்படும் செலவுகளுக்கான தொகையை அவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம், செலவின வகையானது திருப்பிச் செலுத்தக்கூடியது என ஃபவுண்டேஷன் முன்னரே நியமித்திருக்கும் வரை.
  • அலுவலரின் பாத்திரங்கள் தனிப்பட்ட முறையிலானவை. பாத்திரத்தை வகிக்கும் நபர் அதை வேறு நபருக்கு (வெளிப்புற நிறுவனத்திற்கு மிகக் குறைவானது) "அவுட்சோர்ஸ்" செய்யவோ அல்லது "ஒப்படைக்கவோ" கூடாது . குறிப்பிட்ட பணிகளை ஒப்படைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை நினைவில் கொள்க.
  • இறுதியாக, அனைத்து பாத்திரங்களும் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவை - ஒரே பாத்திரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் இருந்தால், வாக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிளப்பும் 6 மாத கால அலுவலர் பதவிகளை விரும்புகிறதா அல்லது 12 மாத கால அலுவலர் பதவிகளை விரும்புகிறதா என்பதைத் தானே சுயாதீனமாக தீர்மானிக்கலாம், மேலும் அது ஆண்டுதோறும் மாறக்கூடும். இருப்பினும், அனைத்து அலுவலர் பதவிகளுக்கும் ஒரே கால அவகாசம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஒரு கிளப்பில் தலைவருக்கு 1 ஆண்டு காலமும், கல்வியின் துணைத் தலைவருக்கு 6 மாத காலமும் இருக்கக்கூடாது.

 

கிளப் அலுவலராவது

 

ஏன் அலுவலராக வேண்டும்

 

பல நிறுவனங்களில், நிர்வாக பதவிக்கு முன்னேறிச் செல்வதற்கு நிறைய நேரமும் (சில நேரங்களில் ஆண்டுகளும்) மற்றும் அர்ப்பணிப்பும் தேவை. அந்த பாத்திரத்தில் நீங்கள் செய்யும் எந்த தவறும் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு ஆபத்தானதாக மாறும்.

Agora கிளப்புகளானது பொதுச் சொற்பொழிவைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான சூழலையும், தங்கள் தொழில் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக புதிய விஷயங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும், தவறுகள் செய்வதற்கும், அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குமான சூழலையும் வழங்குகிறது என்பது நாம் ஏற்கனவே அறிந்த விஷயமே. இதேபோல், கிளப்புகளில் உள்ள அலுவலர் பாத்திரங்கள் தலைமைத்துவத்தையும், நிர்வாகத் திறன்களையும் பாதுகாப்பாகக் கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை வழங்குகிறது, மேலும் இதில் நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் தொழில் வாழ்க்கைக்குச் சிக்கலாக இருக்காது.

அலுவலர் பாத்திரங்கள் அனைவரும் வெவ்வேறு திறன்களைக் கற்பிக்கின்றார்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துணைத் தலைவராக, நீங்கள் மார்க்கெட்டிங் திட்டங்கள், பொது தொடர்புகள், ஊடகங்களுடனான தொடர்புகள், வெளிப்புற பிரச்சாரங்கள் போன்றவற்றை குறித்து கற்றுக்கொள்ளலாம். இருப்பினும், கல்வியின் துணைத் தலைவராக, நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் வேறொன்றாக இருக்கும். தலைவர் பதவி - இன்னும் வித்தியாசமானது.
எனவே, உங்கள் கிளப்பில் நீங்கள் எத்தனை அதிகம் அலுவலர் பாத்திரங்களை வகிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகம் சிறந்தது.

கிளப் அலுவலராக ஆவதால் பல தரமான நன்மைகள் உள்ளன:

  • புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் - பட்ஜெட்டில் இருந்து இடர் மேலாண்மை, திட்டமிடல், மார்க்கெட்டிங் வரை.
  • உங்கள் கிளப் செழித்து வளர்ச்சி அடைய உதவலாம்
  • உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்
  • நீங்கள் பணியமர்த்தப்படும் வாய்ப்புகளையும், பணியமர்த்தும் மேலாளர்களுக்கு நீங்கள் அனுப்பும் விண்ணப்பத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்தலாம்
  • கிளப் மற்றும் Agora நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.

தன்னார்வப் பணியானது (இன்னும் குறிப்பாக வேண்டுமென்றால் தலைமைத்துவ தன்னார்வப் பணியானது) உங்கள் தொழில்முறை தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு ஏராளமான ஆராய்ச்சி உள்ளது. உதாரணமாக, 2016 ஆம் ஆண்டில் டெலாய்ட் நடத்திய ஒரு ஆய்வில் தன்னார்வப் பணியானது தலைமைத்துவ திறமைகளைப் பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வேலை தேடுபவர்கள் மத்தியிலும் இது நேரடியான தாக்கத்தை அதிகப்படியாக ஏற்படுத்துகிறது என்பதாக கண்டறிந்தது:

  • பணியமர்த்தும் மேலாளர்களில் 82% பேர் தன்னார்வ அனுபவத்துடன் உள்ள விண்ணப்பதாரரைத் தேர்வு செய்ய அதிக விருப்பம் கொண்டிருந்தனர்
  • 85% பணியமர்த்தும் மேலாளர்கள் பணிக்கான சுயவிவரத்தில் உள்ள குறைபாடுகளை கவனிக்க அதில் தன்னார்வ அனுபவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா என்று பார்க்கின்றனர்.

 

டெலோயிட்டில், நாங்கள் தன்னார்வத்தின் முக்கியத்துவத்தை அனுபவித்து பார்த்திருக்கிறோம், மேலும் இது எங்கள் நிறுவனம் முழுவதும் மிகச் சிறப்பான தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கியமான திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்பதை புரிந்துக்கொண்டுள்ளோம்.
டக் மார்ஷல்
இயக்குநர், கார்ப்பரேட் குடியுரிமை
டெலாய்ட் சர்வீசஸ் எல்பி

இதேபோன்று, கேரியர்பில்டர் நடத்திய ஒரு ஆய்வில் 60% பணியமர்த்தும் மேலாளர்கள் தன்னார்வ அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களை அதிகம் மார்க்கெட்டிங் திறன் கொண்டவர்களாக கருதினர். ஃபோர்ப்ஸ் மேற்கோள் காட்டிய சி.என்.சி.எஸ் மேற்கொண்ட ஆய்வில், தன்னார்வப் பணி செய்த வேலையில்லாத நபர்கள் வேலையினைப் பெறுவதற்கு 27% அதிக வாய்ப்பைக் கொண்டிருப்பதாகக் காட்டியது.

தன்னார்வப் பணி செய்வதன் நன்மைகள் வேறு பல பகுதிகளிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது - ஆரோக்கியம் சார்ந்த பகுதிகளில் கூட இதன் நன்மைகள் உள்ளன. பெல்ஜியத்தில் உள்ள ஜென்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பின்வருபவை கண்டறியப்பட்டது: "தன்னார்வப் பணி செய்பவர்கள் தன்னார்வப் பணி செய்யாதவர்களைக் காட்டிலும் புள்ளிவிவர ரீதியாக கணிசமாக அதிக மதிப்பெண்களைக் கொண்டுள்ளனர். இதன் மொத்த தொடர்பு கணிசமானதாக மாறியது: இது அளவோடு ஒத்திருக்கிறது, எ.கா. ஐந்து வயது இளைய வயதினரின் ஆரோக்கிய பலன்கள். "

 

கிளப் அலுவலர்கள் தொழில் வல்லுநர்கள் அல்ல

கிளப் அலுவலர்களை தொழில்முறை ரீதியான தலைவர்களாக அல்லது மேலாளர்களாக எதிர்பார்க்கக்கூடாது என்பதை உறுப்பினர்கள் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். எல்லா சொற்பொழிவுத் திட்டங்களும் விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் திட்டங்களாகவே பார்க்கப்பட வேண்டும், ஒரு கிளப்பில் TED-அளவிலான சொற்பொழிவை யாரும் எதிர்பார்க்கக்கூடாது, அதேபோல, அலுவலர் பதவிகள் அனைத்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளே. கோரிக்கைகளுடன் தங்கள் பாத்திரங்களை அணுகுவதை விட ஒவ்வொருவரும் அலுவலர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் முயற்சிக்க வேண்டும்.

கிளப் அலுவலர்கள் "சிறப்பான முயற்சி" என்கிற அடிப்படையில் மட்டுமே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது (பொருள்: அவர்கள் தங்களால் இயன்றதை தங்கள் நேரம், அறிவு மற்றும் திறனுக்கு ஏற்றவாறு செய்வார்கள்).
யாருடைய தனிப்பட்ட எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய அவர்களுக்கு எந்தக் கடமையும் இல்லை, ஏதேனும் குறிப்பிட்ட அளவிலான சேவையை வழங்க அவர்களுக்கு மிகக் குறைவான கடமையே உள்ளது.

 

தகுதி

குறைந்தது 6 மாத கால Agora கிளப் அனுபவத்துடன் சந்திப்பில் தவறாமல் கலந்துகொள்ளும் எந்தவொரு உறுப்பினரும் ஒரு கிளப் அலுவலராக ஆவதற்கு தகுதி உடையவர் (புதிதாக நிறுவப்பட்ட கிளப்புகளைத் தவிர, அதற்கு அந்த விதிமுறைகள் கிடையாது). உறுப்பினர் அலுவலராக ஆக விரும்பும் கிளப்பில்தான் அவர் Agora அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

குறைந்தது 6 மாதங்கள் பணியாற்றிய உறுப்பினர்கள் மட்டுமே கிளப் அலுவலர்களாக ஆக தகுதியுடையவர்கள். நிச்சயமாக, எல்லா வகையான எதிர்பாரா விஷயங்களும் சிறந்த நோக்கங்களுடன் கூட நிகழலாம், ஆனால் உடனடி எதிர்காலத்திற்கு குறைந்த பட்ச தெளிவு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு உறுப்பினர் இரண்டு மாதங்களில் வேறு நகரத்திற்கு செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்தால், அந்த நேரத்தில் அவர் அலுவலராக பணியாற்றுவதில் அர்த்தமில்லை.

 

ஒன்றுக்கு மேற்பட்ட Agora கிளப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர், அவருக்கு நேரமும் அர்ப்பணிப்பும் இருந்தால், ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரண்டு அலுவலர் பதவிகளை வகிக்கலாம் - அவர் வெவ்வேறு கிளப்புகளில் இருக்கும் வரை.

ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் பதவிகளை வகிப்பது அனுமதிக்கப்படாது, ஏனெனில் இது கிளப்புக்கு வழங்கும் சேவைகளின் தரத்தை கடுமையாக பாதிக்கும்.

 

வாக்கெடுப்புகள் மற்றும் பதவிக்காலங்கள்

Agora உடைய கல்வி ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அலுவலர்களின் பதவிக்காலம் குறித்து கிளப் எடுக்கும் முடிவைப் பொறுத்து, பதவிக்காலம் மற்றும் வாக்கெடுப்பு தேதிகள் பின்வருமாறு:

வாக்கெடுப்புகள் மற்றும் பதவிக்காலங்கள்
பதவிக்கால அளவு வாக்கெடுப்புகள் பதவிக்கால தேதிகள்
1-ஆண்டு காலம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை ஜனவரி 1 - டிசம்பர் 31
6-மாத காலம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 15 வரை ஜனவரி 1 - ஜூன் 30
  ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை ஜூலை 1 - டிசம்பர் 31

 

நிலையான கிளப் அலுவலர்களின் பட்டியல்

நிலையான கிளப் அலுவலர்கள் பாத்திரங்களின் பட்டியல் இதோ இங்கே:

 

கிளப் நிர்வாகக் குழு

கிளப் ஒன்றில் அலுவலர் பதவிகளை கொண்டிருக்கும் நபர்கள் ஒன்றுச் சேர்ந்து கிளப்பின் நிர்வாகக் குழுவை உருவாக்குகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடையே பதவிகள்(பாத்திரங்கள்) பகிரப்படுவதால், கிளப்பின் நிர்வாகக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.

அனைத்து கட்டாய பாத்திரங்களும் (பதவிகளும்) நிரப்பப்பட்டு, குறைந்தது மூன்று பேருக்கு அலுவலர் பதவிகள் இருந்தால் மட்டுமே கிளப்பில் நிர்வாகக் குழு இருக்கும். எடுத்துக்காட்டாக, புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கிளப்பில் நிறுவனர் அனைத்து பாத்திரங்களையும் வகித்தால், அந்தக் கிளப்பில் நிர்வாகக் குழு இருப்பதாக கருதப்படாது. இதேபோல், ஒரு கிளப் சில காலமாக செயல்பட்டு வந்து, ஒரு கட்டத்தில் அதற்கு ஒரு தலைவர், கல்வியின் துணைத் தலைவர்கள் இரண்டு பேர்  மற்றும் உறுப்பினருரிமையின் துணைத் தலைவர் ஒருவர் இருந்தாலும், அதற்கு ஒரு நிர்வாகக் குழுவை அமைப்பதற்கு தேவையான அலுவலர்களைக் கொண்டிருக்கவில்லை.

நிர்வாகக் குழு இல்லாத கிளப்புகள் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு செயலையும் தொடரக்கூடாது (உதாரணமாக, ஒழுங்குமுறை நடவடிக்கைகள்)

கிளப் புதியதாக இருக்கும் காலகட்டத்தில், மேலும் அனைத்து அலுவலர் பாத்திரங்களும் ஒன்று அல்லது இரண்டு கிளப் நிறுவனர்களிடமே இருக்கும் காலகட்டத்தில், சர்வாதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கே மேற்கண்ட விதியாகும்.

நிர்வாகக் குழு சந்திப்புகள்

கிளப்பின் நிர்வாகக் குழுவானது கிளப்பின் பொதுவான விஷயங்களைப் பற்றி விவாதிக்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு கிளப் அலுவலரும் ஒரு ஆர்வமுள்ள விஷயத்தைப் பற்றி விவாதிக்க நிர்வாகக் குழுவின் சந்திப்பைக் கோரலாம். இத்தகைய கோரிக்கைகள் செயலாளர்  அல்லது கிளப்பின் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும், மேலும் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை குறித்த விரிவான விளக்கத்தையும் குறிப்பிட வேண்டும். அவற்றைப் பெற்றதும், செயலாளர் கோரிக்கை விடுத்த நாளிலிருந்து 7 முதல் 20 நாட்களுக்குள் சந்திப்பிற்கான ஒரு தேதியை திட்டமிட வேண்டும்.

குழுவின் சந்திப்பிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், செயலாளர் அனைத்து அதிகாரிகளுக்கும் சந்திப்பின் வருங்கால நிகழ்ச்சி நிரலை, சந்திப்பு நடக்கும் சரியான இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றுடன், நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அனுப்ப வேண்டும். அனைத்து கிளப் அலுவலர்களும் அந்த நிகழ்ச்சி நிரலில் தேவையானவற்றைச் சேர்க்கலாம்.