உறுப்பினருரிமையின் துணைத் தலைவராக, உங்களுக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ளன:

  • கிளப் உறுப்பினர்கள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்வது.
  • கிளப்பின் வளர்ச்சியை உறுதி செய்வது.

 

உங்களது முக்கிய பொறுப்புகள் இதோ இங்கே.

உறுப்பினருரிமையை அதிகரிப்பது

மார்க்கெட்டிங் துணைத் தலைவர் மற்றும் சமூக மேலாளருடன் (இத்தகைய பாத்திரம் ஒன்று இருந்தால்) கூட்டாக சேர்ந்து நிறைவேற்றப்படும் பணி இது.

அவர்களின் செயல்பாடுகளை நீங்கள் அதிகம் நம்பியிருந்தாலும், நீங்கள் சொந்தமாகச் செய்யக்கூடிய விஷயங்களும் சில உள்ளன:

  • "நண்பரை அழைத்து வாருங்கள்" - "நண்பரைக் அழைத்து வாருங்கள்" அமர்வுகளை நடத்துவதற்குத் திட்டமிடுங்கள், அப்போது ஒவ்வொரு பங்கேற்பாளரும் கிளப் குறித்து ஆர்வமுள்ள ஒரு நண்பரை அழைத்து வரும்படி நீங்கள் கூறலாம். 
  • கிளப் உறுப்பினர்கள் மத்தியில் உறுப்பினருரிமை கட்டமைப்பு போட்டிகள் நடத்துவது மற்றும் அதிக விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் அழைத்து வரும் மக்களுக்கு விருதுகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
  • பொது மக்களுக்கு "திறந்த நிலை" சந்திப்புகளையும், பிற உறுப்பினருரிமை மேம்பாட்டு பிரச்சாரங்களையும் திட்டமிடலாம்.
  • பொது சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பிற சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று, Agora பற்றியும், உங்கள் கிளப்பைப் பற்றியும் பேசவும் -  Meetup.com, Internations,  Airbnb, Couchsurfing, போன்ற தளங்களில் நிகழ்ச்சிகள் குறித்து நீங்கள் ஆராய்ந்து தெரிந்துக் கொள்ளலாம்.

கிளப்பில் மார்க்கெட்டிங் துறைக்கான துணைத் தலைவர் இல்லையென்றால், அந்த பாத்திரத்தின் பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் செய்ய வேண்டும்.

பகிர்ந்து செய்யக்கூடிய செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது

Agora சந்திப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கல்வி நோக்கத்தையும் பொது அமைப்பையும் பின்பற்ற வேண்டும் என்றாலும், இந்த விஷயங்களை மட்டுமே நீங்கள் ஒழுங்கமைத்து சீராக கொண்டு செல்ல வேண்டும் என்பது அர்த்தமல்ல.

கிளப்பின் சமூக ரீதியான கண்ணோட்டத்தை வலுப்படுத்துவதற்கான சில கூடுதல் யோசனைகள் இதோ இங்கே:

  • சுற்றுலாக்கள் மற்றும் பயணங்கள்
  • வெவ்வேறு விதமான விடுமுறைகளை கொண்டாடும் விருந்துகள்
  • தனித்த இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் "பொது சொற்பொழிவு", அநேகமாக சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர்கள் கலந்துக் கொள்வார்கள்
  • கருப்பொருள் இரவுகள்
  • அதிரடி சமூக செயல்திட்டங்கள்
கிளப்பின் VPM ஆக, கிளப்பின் உறுப்பினர் பட்டியலைப் பயன்படுத்தி, இந்தச் செயல்பாடுகள் உங்கள் மேற்பார்வையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதால், இவை கிளப்பின் மைய கொள்கைகள் அல்லது ஃபவுண்டேஷன் உடைய துணை விதிகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது.

உதாரணமாக, தாந்த்ரீக சிகிச்சைமுறை (போலி அறிவியல் ரீதியான விதி) குறித்து ஆராய உறுப்பினர்களுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அல்லது மனித உரிமைகளுக்கு பரிந்து சொற்பொழிவாற்றுவதற்காக கருப்பொருள் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அனுமதிக்கப்படாது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நீங்கள் ஒழுங்கமைக்கும்போது, மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஏராளமான மெட்டீரியல்களை தயார் செய்யும் வகையில் கிளப் பேனரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்:

 

 

விருந்தினர்கள் நல்ல முறையில் வரவேற்கப்பட்டு, கவனிக்கப்படுவதை உறுதிசெய்வது

உறுப்பினருரிமையின் துணைத் தலைவராக (VPM ஆக), Agora சந்திப்புகளுக்கு வரும் விருந்தினர்களும் பார்வையாளர்களும் நல்ல முறையில் வரவேற்கப்படுவதையும், கவனிக்கப்படுவதையும், அவர்கள் சேர விரும்புவதையும் உறுதிப்படுத்துவது உங்கள் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இது மிகவும் முக்கியமானது, எனவே சந்திப்புகளுக்கு வரும் விருந்தினர்களை முறையாக கவனிப்பது எப்படி என்பதற்கான பிரத்யேக தனி கட்டுரை எங்களிடம் உள்ளது.

உங்களால் விருந்தினர்களிடம் தனிப்பட்ட முறையில் முனைப்பு காட்ட இயலாத சூழலில், நீங்கள் இல்லாத நேரத்தில் அதைச் செய்யக்கூடிய ஒருவரிடம் அப்பணியை ஒப்படைத்து விடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விருந்தினர்களை கிளப்பில் பதிவு செய்யுமாறு எப்போதும் அழைக்கவும் அல்லது குறைந்தபட்சம் கிளப்பின் மின்னஞ்சல் பட்டியலில் சேர வேண்டுமென்றும் என்று கூறியதாவது அழைக்கவும்.

ஒருபோதும் அதிகப்படியாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் - ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மன போக்கின் படி முடிவெடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அது எதிர்மறையாக மாறுவதற்கு சாத்தியம் உள்ளது.
அவர்கள் விரும்பும்போதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்கள் இலவசமாக வரலாம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் முழு நன்மைகளையும் அனுபவிக்க (கல்வி ரீதியான முழுமையான மெட்டீரியல்களையும் அணுகுவது அல்லது முழுமையான சொற்பொழிவினை வழங்குவது போன்றவை), கிளப்பில் சேர வேண்டும் என்று அவர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

ஒவ்வொரு சந்திப்பின்போதும், உங்களிடம் போதுமான அளவு விருந்தினர் வரவேற்புப் பேக்குகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் கேட்கும் ஏதேனும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் நிலையில் இருங்கள், மேலும் கையொப்பமிடும் செயல்முறையின்போது அவர்கள் ஏதேனும் பகுதியில் குழப்பமடைந்தால் அது குறித்து அவர்களுக்கு உதவி செய்திடுங்கள்.

வழக்கமாக, ஒரு கிளப்பைச் சேர்ந்தவராக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மக்கள் கற்றுக் கொள்ளும் அனைத்து திறன்கள், மற்றும் கிளப்பில் சேருவது இலவசம் அல்லது கிளப்பில் சேருவதற்கு மிகக் குறைந்த கட்டணங்களே ஆகும் என்று கூறி வலியுறுத்துவதை விட கிளப்பில் சேருவதனால் நிறைய நபர்களுடன் பரிட்சயமாகலாம், நிறைய தொடர்புகள் கிடைக்கும் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது சிறந்தது.

ஏதாவது ஒன்று "இலவசமாக" கிடைத்தால், அது "மிகக் குறைந்த தரத்தில்" இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அதே போல பெருவாரியான மக்கள் ஏதாவது ஒன்று இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் கிடைத்தால் அதை நம்புவதில்லை, அதில் ஏதோ சூழ்ச்சி அல்லது தீய நோக்கம் இருப்பதாக கருதுகிறார்கள் - "நீங்கள் ஒரு தயாரிப்புக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நீங்களே தயாரிப்பாக ஆகி விடுவீர்கள்" என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இந்த ஆட்சேபனையை நீங்கள் எதிர்கொண்டால் அல்லது இதுவே பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைத்தால், வலுவான எதிர்-வாதம் செய்திட உங்களுக்கு சில சிறந்த உதாரணங்கள் இதோ இங்கே:

  • பூமியில் சிறந்த கலைக்களஞ்சியமாக திகழும் விக்கிபீடியா இலவசமே.
  • சிறந்த உலாவிகளில் ஒன்றான மொஸில்லா பயர்பாக்ஸ் இலவசமே.
  • மிகவும் சக்திவாய்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமான (இயக்க முறைமை) லினக்ஸ் இலவசமே.
  • சிறந்த உலக பல்கலைக்கழகங்களான MIT, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் போன்றவை தங்களது பல பாடப்பயிற்சிகளை இலவசமாக வெளியிடுகின்றன (MIT Open Courseware, Stanford Free Courses, போன்றவை).
  • Coursera அல்லது Khan Academy போன்ற சிறந்த கல்வி வலைத்தளங்கள் மானதே.
  • அப்பாச்சி சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் டஜன் கணக்கான மிக உயர்தர திறந்தநிலை மூல தயாரிப்புகளை இலவசமாக உருவாக்கியுள்ளது, இது உலகின் மிக அதிநவீன நிறுவனண்களின் சக்தியாக திகழுகிறது.
  • வீடியோ எடிட்டிங் முதல் கேம்கள் வரை எண்ணற்ற பிற திறந்தநிலை ஆதாரங்கள் உள்ளன, இவை முற்றிலும் இலவச புரோகிராம்களே.
  இவை கூறும் முக்கிய யோசனை என்னவென்றால், பல விஷயங்கள் இலவசமாக கிடைக்கின்றன, ஏனென்றால் இவை பலரின் ஆர்வத்தாலும் அன்பினாலும் உருவாக்கப்பட்ட படைப்பாகும், சில மோசமான தீய எண்ணங்கள் உடைய மேதைகளால் மட்டுமே இத்தகைய இலவசங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இல்லை.

 

விருந்தினர் புத்தகத்தை பராமரித்து, எப்போதும் தொடர்பு கொண்டு விசாரிக்கவும்

விருந்தினர்களிடம் அவர்களைத் தொடர்பு கொள்ளும் தகவலைப் பெறாததே பெரும்பாலோர் தவறவிடும் வாய்ப்புகளில் ஒன்றாகும், அதனால் சந்திப்பிற்கு பிறகு, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

முதல் சந்திப்புக்குப் பிறகு உடனடியாக கிளப்பில் பதிவு செய்துக்கொள்ள அனைவரும் தயாராக இருக்க மாட்டார்கள். சிலருக்கு கணிவாக நினைவூட்ட வேண்டியிருக்கும், இன்னும் சிலருக்கு கொஞ்சம் கணிவான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கும்.

சந்திப்பின் கடைசி வரையில் காத்திருப்பதை விட, சந்திப்பின் ஆரம்பத்திலேயே விருந்தினர்களிடம் பெயர் மற்றும் மின்னஞ்சலைக் கேளுங்கள். இல்லையெனில், சீக்கிரம் சென்று விடுபவர்கள் அல்லது அவசரமாக புறப்படுபவர்களிடம் இந்தத் தகவல்களை பெற முடியாமல் போகலாம்.

மேலும், பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் கிளப் குறித்து அவர்கள் எங்கே அறிந்துக் கொண்டார்கள் போன்ற விவரங்களைக் காட்டிலும் கூடுதலாக எந்தத் தகவல்களையும் கேட்க வேண்டாம், நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கூடுதல் தகவலும் எந்தத் தகவலையும் வழங்காமல் போவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

விருந்தினரின் தொடர்பு தகவல்களை நீங்கள் பெற்றதும், புதிய சந்திப்புகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க மறவாதீர்கள். கிளப்பில் சேர வேண்டுமென்று அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் - சந்திப்பு அழைப்புகள், அவ்வப்போது சுவாரஸ்யமான கட்டுரைகள் போன்றவற்றை அனுப்புவதன் மூலம் அவர்களிடம் லேசான, திறந்தநிலை தகவல் தொடர்பு சேனலைப் பராமரிக்கவும்.

 

உறுப்பினர்களைக் கவனித்துக் கொள்வது

புதிய உறுப்பினர்களைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துவதும், ஏற்கனவே உள்ளவர்களைக் கவனிக்காமல் மறந்துவிடுவதும் VPM விஷயத்தில் மிகவும் அடிக்கடி நிகழ்கிற விஷயமாக இருக்கிறது. இது ஒருபோதும் நன்றாக முடிவதில்லை.

  • உறுப்பினர்கள் கல்வி வரிசை அமைப்பை பின்பற்றிச் செல்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த VPE உடன் வழக்கமாகப் பேசுங்கள். யாராவது அவ்வாறு பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்குத் தீர்வு தேவைப்படும் சில சிக்கல்கள் இருக்கலாம்.
     
  • அனைத்து உறுப்பினர்களிடமும் அவர்கள் எப்படி உணருகிறார்கள், கிளப் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனவா, அவர்கள் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக வளர்ந்து வருகிறார்களா, அவர்கள் தீர்க்க விரும்பும் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று கேட்க அவ்வப்போது தனிப்பட்ட முறையில் பேச முயற்சிக்கவும்.
     
  • Agora எவ்வாறு செயல்படுகிறது, கிளப்பில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்கள், உறுப்பினர்கள் கிளப்பில் இருந்து எப்படி அதிகம் பலனடையலாம் போன்றவற்றை விளக்கும் உள் கிளப் மற்றும் Agora தலைப்புகளில் பயிற்சி பட்டறைகள் நடத்துவதற்குத் திட்டமிடுங்கள்.