தகவல்தொடர்பு விருதுகள்
தகவல்தொடர்பு விருதுகள் ஒரு பொது பேச்சாளராக உங்கள் முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன.
தகுதிவாய்ந்த பேச்சாளர்
அடிப்படை தகவல்தொடர்பு வரிசை அமைப்பை நிறைவு செய்த பிறகு, உங்களுக்கு தகுதிவாய்ந்த பேச்சாளர் விருது சான்றிதழ் மற்றும் டிஜிட்டல் பேட்ஜ் வழங்கப்படும்.
மிகச்சிறந்த பேச்சாளர்
உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு மேம்பட்ட வரிசை அமைப்பையும் நிறைவு செய்த பிறகு, அந்த குறிப்பிட்ட வரிசை அமைப்புக்கு உங்களுக்கு மிகச்சிறந்த பேச்சாளர் விருது சான்றிதழ் மற்றும் டிஜிட்டல் பேட்ஜ் வழங்கப்படும். உதாரணமாக, நீங்கள் நகைச்சுவை சொற்பொழிவுகள் என்பவற்றின் வரிசை அமைப்பினை நிறைவு செய்தால், உங்களுக்கு "மிகச்சிறந்த நகைச்சுவை பேச்சாளர்" சான்றிதழ் வழங்கப்படும்.
மிகச்சிறந்த தொடர்பாளர்
உங்களுக்கு விருப்பமான ஏதேனும் நான்கு (வேறுபட்ட) மேம்பட்ட வரிசை அமைப்புகள் மற்றும் நூதன சிந்தனை வரிசை அமைப்பை நிறைவு செய்த பிறகு, உங்களுக்கு Agora Speakers வழங்கும் மிக உயர்ந்த தகவல்தொடர்பு தொடர்பான மிகச்சிறந்த தொடர்பாளர் விருது வழங்கப்படும்.
டிஜிட்டல் பேட்ஜ்கள் திறந்தநிலை பேட்ஜ்கள் தரத்திற்கு இணங்குகின்றன (openbadges.org ), இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திறந்த பேட்ஜ்களை உங்கள் தொழில்முறை சுயவிவரத்தில் (எ.கா., லிங்க்ட்இன், ஜிங் மற்றும் பிற சமூக ஊடகங்கள்), சுயவிவரங்கள், வணிக அட்டைகள் அல்லது பிற டிஜிட்டல் இருப்பிடங்களில் பதிக்கலாம். பேட்ஜ் படத்தில் மெட் டேட்டா உள்ளது, இது பேட்ஜ் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது, இதை வைத்து அந்த பேட்ஜை சுயாதீனமாக சரிபார்க்க முடியும். உதாரணமாக, முதலாளியானவர் பேட்ஜைக் கிளிக் செய்து, அது என்ன பேட்ஜ் என்பதைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெறலாம், மேலும் இதிலுள்ள நபர் எப்போது, எப்படி இதை பெற்றார் என்பதையும் பார்க்கலாம்.
அனைத்து சான்றிதழ்களும் தனிப்பட்ட சரிபார்ப்பு எண்ணைக் கொண்டுள்ளன, இது சான்றிதழின் நம்பகத்தன்மையை சரிபார்க்க யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
விருப்பத்தின் பேரில், அச்சிடப்பட்ட சான்றிதழ்கள் உங்களுக்கு அசல் வடிவத்தில் தேவைப்பட்டால், அதனை நாங்கள் மின்னஞ்சல் செய்யலாம். இந்தச் சேவை கட்டணத்திற்குரியது என்பதையும், உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, அச்சிடப்பட்ட சான்றிதழ் வருவதற்கு ஒரு மாதம் வரை ஆகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் சான்றிதழை எவ்வாறு பெறுவது
ஒரு வரிசை அமைப்பின் கடைசி செயல்திட்டத்தை நீங்கள் நிறைவு செய்தவுடன், உங்கள் கிளப் VPE அல்லது தலைவரை தொடர்பு கொள்ளவும், பிறகு அவர்கள் உங்களுக்கான சான்றிதழை கோருவார்கள்.
VPE அல்லது கிளப் தலைவரின் வேண்டுகோளின் பேரில் நாட்டின் தூதரால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அந்த நாட்டிற்கான தூதர் இல்லை என்றால், கிளப்பின் VPE அல்லது தலைவர், உறுப்பினர் விவரங்கள் மற்றும் தலைப்பு, தேதி, அச்செயல்திட்டம் எங்கு முன்வைக்கப்பட்டது என ஒவ்வொரு செயல்திட்டங்களின் விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்ப வேண்டும்.
தலைமைத்துவ விருதுகள்
கிளப் தலைவர்
கிளப் தலைவர் விருது தலைமைத்துவத்திற்கான உங்கள் முதல் அடியையும், குறிப்பாக நாங்கள் ஊக்குவிக்கும் தலைமைத்துவத்தின் வகையை குறிக்கிறது, நாங்கள் ஊக்குவிக்கும் தலைமைத்துவமானது, ஊழியர் தலைமைத்துவமும் உதாரணத்தால் வழிநடத்துவதுமாகும்: தலைவர்கள் தங்கள் செயல்களால் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களின் வார்த்தைகளால் அல்ல. இது அனைத்துத் தலைவர்களிடமும் இருக்கும் அடிப்படைத் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்வதை உறுதி செய்வதற்கான தேவைகள் சார்ந்தவை, குறிப்பாக முன்முயற்சி, சகிப்புத்தன்மை, கவனமாகக் கேட்பது, ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கும் திறன் மற்றும் பச்சாத்தாபம் என எல்லாவற்றுடன், கிளப்பில் முக்கியமான பாத்திரங்களுக்கான ஆதரவை வழங்குவது போன்ற பிரிவில் உங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கிளப் தலைவர் விருதைப் பெற, நீங்கள் செய்ய வேண்டியவை:
தகுதி வாய்ந்த தலைவர்
தகுதி வாய்ந்த தலைவர் விருது கிளப்பிற்கு வெளியே தலைமைத்துவ பங்காற்றும் உங்கள் ஆரம்ப படிநிலைகளைக் குறிக்கிறது. ஒரு கிளப் தலைவராக நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களின் அடிப்படையில் இத்தகைய தகுதி உங்களுக்கு கிடைக்கிறது, மேலும் உங்கள் தொலைநோக்குப் பார்வையை சரியாகவும் உறுதியுடனும் தொடர்புபடுத்தி உங்கள் திறமைகளை விரிவுப்படுத்தி, நிஜ உலகில் சிறிய செயல்திட்டங்களை முன்னெடுத்து அந்தத் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தச் செய்கிறது.
தகுதிவாய்ந்த தலைவர் விருதைப் பெற, நீங்கள் செய்ய வேண்டியவை:
- கிளப் தலைவர் விருதை வெல்ல வேண்டும்.
- அடிப்படை கல்வி வரிசை அமைப்பை நிறைவு செய்ய வேண்டும்.
- நூதன சிந்தனை மற்றும் தலைமைத்துவத்தில் மேம்பட்ட வரிசை அமைப்புகளை நிறைவு செய்ய வேண்டும்.
மிகச்சிறந்த தலைவர்
மிகச்சிறந்த தலைவர் விருது உங்கள் தலைமைத்துவ பயணத்தின் இடைநிலை படியாகும். மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டவும் ஊக்குவிக்கவும் முடிகிற திறன் மற்றும் செயல்திட்டங்களை வெற்றிகரமாக வடிவமைத்து நிர்வகித்து, முடிவுகளை வழங்குவதில் அனுபவம் என இரண்டிலும் நீங்கள் சிறந்து விளங்கும் தொடர்பாளராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இதன் தேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மிகச் சிறந்த தலைவர் பேட்ஜைப் பெற, நீங்கள் செய்ய வேண்டியவை:
- தகுதி வாய்ந்த தலைவர் பேட்ஜைப் பெற வேண்டும்
- குறைந்தது 6 மாதங்களுக்கு தனியாக ஒரு கிளப் அலுவலராக பணியாற்றவும். "தனியாக" என்றால் அந்தப் பாத்திரத்தை பிற நபர்களுடன் பகிந்துக் கொள்ளாமல், நீங்கள் மட்டுமே அப்பாத்திரத்தை வகித்திட வேண்டும். உதாரணமாக, நீங்கள் கல்வியின் துணைத் தலைவராக இருந்து, ஆனால் உங்கள் கிளப்பில் இரண்டு VPE கள் (கல்வியின் துணைத் தலைவர்கள்) இருந்தால், உங்களால் இந்த விருதுக்கு தகுதி பெற இயலாது.
- பின்வரும் கூடுதல் மேம்பட்ட வரிசை அமைப்புகளை நிறைவு செய்து, மிகச் சிறந்த தொடர்பாளர் பேட்ஜைப் பெற வேண்டும்:
- கதை சொல்வது
- சொல் வண்மையுள்ள சொற்பொழிவுகள்
- திட்ட மேலாண்மை
- தனிநபர் திறன்கள்
உங்களிடம் ஏற்கனவே மிகச் சிறந்த தலைவர் பேட்ஜ் இருந்தால், இரண்டாவது (அல்லது அடுத்தடுத்து) ஒன்றை பெற விரும்பினால், இரண்டாவது மிகச்சிறந்த தொடர்பாளர் பேட்ஜுக்கு, உங்களுக்கு விருப்பமான நான்கு மேம்பட்ட வரிசை அமைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
Agora ஜோதிவிளக்கு ஏந்துபவர்
ஜோதிவிளக்கு ஏந்துபவர் விருது என்பது Agora ஃபவுண்டேஷன் வழங்கும் மிக உயர்ந்த தலைமைத்துவ விருது ஆகும். இது உங்கள் தலைமைத்துவ திறன்களுக்கு சான்றளிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவுவதற்கான Agora உடைய இலட்சியங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை நீங்கள் உள்ளடக்கி ஊக்குவிப்பீர்கள்.
இந்த உச்சக்கட்ட Agora பேட்ஜை வெல்ல, நீங்கள் செய்ய வேண்டியவை:
- மிகச் சிறந்த தலைவர் பேட்ஜைப் பெற வேண்டும்.
- புதிய கிளப் ஒன்றை நிறுவ வேண்டும், விருது வழங்கும் நேரத்தில் அது செயல்பாட்டில் இருக்க வேண்டும். (செயல்பாட்டில் இருப்பது என்றால் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் தவறாமல் சந்தித்து, அனைத்து Agora வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது ஆகும்). கிளப் குறைந்தது 6 மாதங்கள் செயல்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அந்த கிளப்பில் அலுவலராக இருக்க தேவையில்லை.
- பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும்:
உங்கள் நாட்டில் Agora-வின் ஊடக பங்கெடுப்பை முன்னெடுத்துச் செல்லலாம். பங்கெடுப்பு என்பது நாம் யார், நாம் என்ன செய்கிறோம், நமது இலட்சியங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை, மற்றும் இணையதளம், விக்கி அல்லது மின்னஞ்சல் உடைய இணைப்பு ஆகியவற்றை விளக்க வேண்டும். பங்கெடுப்பு என்பது எந்த வடிவத்திலும் இருக்கலாம் - உங்களுடனான ஒரு நேர்காணல், நீங்கள் வெளியிடும் ஒரு கட்டுரை, நீங்கள் செய்த ஒரு செயல்திட்டத்தின் குறிப்பு, என ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பங்கெடுக்கும் ஊடகத்திற்கு நல்ல வரவேற்பு இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5.000 பார்வையாளர்கள் இருக்க வேண்டும்.
அல்லது
உள்ளூர் (அல்லது தேசிய) ஊடகங்களில் அறிக்கை செய்யப்படும் அல்லது குறிப்பிடப்படும் அளவுக்கு போதுமான முக்கியத்துவம் வாய்ந்த சமூக செயல்திட்டத்தை வழிநடத்துங்கள். அறிக்கையில் செயல்திட்டம் குறித்த குறிப்பு, நீங்கள் என்ன சாதித்தீர்கள் போன்றவை இடம்பெற வேண்டும், மேலும் Agora Speakers International ஃபவுண்டேஷன், நமது பாத்திரம் மற்றும் நாம் என்ன செய்கிறோம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். இது ஒரு தலைவராக உங்கள் திட்டம், ஃபவுண்டேஷன் உடைய திட்டம் அல்ல என்பது தெளிவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். (இதன் மூலம் கிடைக்கும் பாராட்டு உங்களுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமல்ல, நடுநிலை கொள்கை மீறப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தவும்). இது தோன்றும் ஊடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்க வேண்டும் அல்லது குறைந்தது 5.000 பார்வையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
பல விருதுகள்
விருதுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு விருதை பல முறை வெல்லலாம். உதாரணமாக, நீங்கள் இரண்டு முறை அடிப்படை கல்வி வரிசை அமைப்பை நிறைவு செய்தால் தகுதி வாய்ந்த பேச்சாளர் விருதை இரண்டு முறை பெறலாம்.
மிகச் சிறப்பாக திகழுவதற்கான விருதுகள்
கல்வி வரிசை அமைப்புகளை நிறைவு செய்ததற்கான விருதுகளைத் தவிர, Agora-வில், குறிப்பிட்ட மைல்கற்களை நிறைவு செய்தால், சிறந்து விளங்குவதற்கான வெவ்வேறு விருதுகளைப் பெறலாம். நான்கு வகையான விருதுகள் உள்ளன:
- செயல்பாட்டு விருதுகள் - ஒரு கிளப்பை நடத்துவதில் மைல்கற்களை அடைவதற்காக அல்லது அதாவது கிளப்பை 1 வருடம் தொடர்ந்து நடத்துவது போன்ற அற்புதமான செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது.
- சமூக விருதுகள் - புதிய கிளப்பை நிறுவுதல் அல்லது ஒரு மாநாட்டை நடத்துதல் என Agora சமூகத்தை வளர்ப்பது மற்றும் வலுப்படுத்துவது தொடர்பான சாதனைகளுக்கு வழங்கப்படுகிறது.
- கல்விக்கான விருதுகள் - மேற்கண்ட கல்வித் தலைப்புகள் போன்ற குறிப்பிட்ட கல்வி மைல்கற்களை அடைவதற்கு வழங்கப்படுகிறது.
- சமூக விருதுகள் - ஊடகம் வாயிலாக பரப்புவது அல்லது ஒரு சமூகத் செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது என உங்கள் சமூகத்திற்கு சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.