எங்களது கல்வி ரீதியான அமைப்பு ஐந்து தூண்களை (மைய விஷயங்களை) உள்ளடக்கியது:
கல்வித் திட்டம்
எங்களது கல்வித் திட்டம் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கியது, நீங்கள் திறமையான பேச்சாளராகவும், சிறந்த விவாதக்காரராகவும், நம்பிக்கையான தலைவராகவும் ஆவதற்கு உதவும் வகையில் தொழில் ரீதியான வல்லுநர்கள் இவற்றை எழுதியுள்ளனர். உங்களுக்கு இந்தத் துறைகளில் அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் அல்லது எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, வெளி உலகுடன் முற்றிலும் பழகாதவராக இருந்தாலும், மிகவும் எளிமையான விஷயங்களுடன் தொடங்கி, மெதுவாக, அதே நேரம் உறுதியாக அடுத்தடுத்த மேம்பட்ட செயல்திட்டங்களை உங்களை இட்டுச் செல்லும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் உடனேயே முன்னேற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள்.
இந்தக் கல்வித் திட்டமானது பொது சொற்பொழிவு, உளவியல், தலைமைதத்துவம், கதை எழுதுதல் மற்றும் பல துறைகளில் பல தசாப்தமாக அனுபவமுள்ள திறமையான மற்றும் வெற்றிகரமான வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது.
Agora உறுப்பினர்கள் அனைவர்க்கும் கல்வித் திட்டத்தின் அனைத்து மெட்டீரியல்களும் ஆன்லைனில், முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன.
அறிவியல் ஆராய்ச்சிக்கு வலுவான அடித்தளங்கள்..
துரதிருஷ்டவசமாக, சுய உதவி புத்தகங்கள் பல தவறான கருத்துகளையும், போலியான அல்லது பயனற்ற ஆலோசனைகளையும் பரப்புகின்ற, மேலும் மற்ற புத்தகங்கள் மற்றும் பாடப்பயிற்சிகளில் இருந்து நகலெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற பகுதிகளில் ஒன்றாக பொது சொற்பொழிவாற்றுவது (மற்றும் பொதுவாக நுண் திறமை பயிற்சி அனைத்தும்) இருக்கிறது.
பின்வரும் சோதனைப் பயிற்சியை நீங்கள் செய்துப் பார்க்கலாம்: இணங்கச் செய்வதைக் கற்பிக்கும் ஏதேனும் பொது சொற்பொழிவு நிகழ்ச்சியை தேர்வு செய்து, அவற்றில் மன்ரோவின் உற்சாகமூட்டும் வரிசைகள் இடம்பெற்றுள்ளதா என்று சோதிக்கவும். அநேகமாக அவர்கள் அவ்வாறு செய்வார்கள் - மேலும் "இதுதான்" நிறுவனத்தின் சொற்பொழிவு அமைப்பு முறை என்றும், நீங்கள் மக்களை இணங்கச் செய்ய வேண்டிய ஒவ்வொரு முறையும் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூட சொல்வார்கள். ஆனால், இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு அமைப்பு முறையானது ஓரளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பிற சொற்பொழிவைக் காட்டிலும் அதிகளவில் இணங்கச் செய்யும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், உண்மையில் சொல்லப்போனால், உற்சாகமூட்டும் வரிசையின் அனைத்துப் பிரிவுகளையும் நீங்கள் மாற்றி மாற்றியோ அல்லது தலைக்கீழாகவோ பயன்படுத்தலாம், இருப்பினும் அந்த இணங்கச் செய்யும் விளைவு அதே மாதிரியே இருக்கும்.
இதோ இங்கே இன்னொரு சோதனைப் பயிற்சி: பெரும்பாலான பொது சொற்பொழிவு பாடப்பயிற்சிகள் உங்கள் சொற்பொழிவில் உபரிச் சொற்கள் மற்றும் சொல் ஒட்டுண்ணிகள் இல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லும். ஆனால், உங்கள் சொற்பொழிவில் எந்த உபரி வார்த்தைகளும் இல்லாமல் இருந்தால், நீங்கள் செயற்கையாக பேசுவதாக உணரப்படுவீர்கள் என்றும், அது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.
எங்கள் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றும், குறிப்பாக நாம் பெருமை கொள்ளும் ஒன்றும் என்னவென்றால், இத்திட்டங்கள் அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருப்பதே. அறிவுரையானது அது செயல்படுவதை நிரூபிக்கும் ஆய்வுகளின் அடிப்படையிலானதே என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் படிக்கும் ஒவ்வொரு அறிவுரையும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் வழங்கும் ஒவ்வொரு செயல்திட்டமும் அறிவியல் இலக்கியத்தை பகுப்பாய்வு செய்ததன் பலனாகக் கிடைத்த விஷயங்கள்தான்.
உள்ளூர் கிளப்புகள்
Agora கிளப்புகள் என்பது வேடிக்கையான விஷயங்கள் அனைத்தும் நடைபெறும் இடம். அவை Agora உடன் இணைக்கப்பட்ட சுயாதீனமான நிறுவனங்கள், இவை தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. கிளப்புகள் வாராந்திர முறையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதாந்திர முறையில், நேரடியாகவோ, ஆன்லைனிலோ அல்லது இரண்டின் கலவையாகவோ வழக்கமான சந்திப்புகளை நடத்துகின்றன.
கல்வித் திட்டத்தைப் பயன்படுத்தி Agora உறுப்பினர்கள் சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் மற்றும் பயிற்சி செய்வதற்குமான இடங்களை கிளப்புகள் வழங்குகின்றன - பாதுகாப்பான, வேடிக்கையான மற்றும் ஆதரவான சூழல் இந்த கிளப், இங்கு நீங்கள் பயமின்றி பயிற்சி சோதனை செய்து, "கூட்டை விட்டு வெளியேற" தயாராகும் வரை உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.
அருகில் Agora கிளப் எதுவும் இல்லை என்றால், நீங்களே ஒன்றைத் தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் ஒரு கிளப்பைத் தொடங்கலாம். நேரம், ஆற்றல் மற்றும் குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் மட்டுமே தேவை. குறிப்பாக, கிளப் நிறுவனர்களுக்கு பல ஆதரவு மற்றும் பயிற்சிப் மெட்டீரியல்களை நாங்கள் வழங்குகிறோம், எனவே நீங்கள் ஆர்வமாக இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
கிளப்புகள் சுதந்திரமாக தங்கள் செயல்பாடுகளை வடிவமைக்கலாம். ஃபவுண்டேஷன் உடைய அனைத்து அணுகுமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் பொதுவாக அனைத்து கிளப்புகளும் பின்பற்றினாலும், அவை மிகவும் மாறுபட்ட ஆளுமைகள், சூழல்கள் மற்றும் உணர்வுகளைக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
கிளப் சந்திப்பு என்பது எப்படி இருக்கும் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? எங்கள் யூடியூப் சேனலில் உள்ள ஏதேனும் பதிவுகளை பார்வையிடவும்.
ஆசான்கள்
கிளப் ஆனது வழிகாட்டல் அமைப்பை கிளப் உறுப்பினர்களுக்கு வழங்குகிறது, இது Agora-வில் உங்கள் முதல் செயல்பாடுகளின்போது உங்களுக்கு உதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
உங்கள் ஆசான் அல்லது வழிகாட்டி உங்களுடைய முதல் செயல்திட்டங்களுக்கு உதவுவார், கிளப்பின் பழக்கவழக்கத்தோடு ஒருங்கிணைக்கவும், அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடவும் உங்களுக்கு உதவியாக இருப்பார், ஆன்லைன் அமைப்புகள் மற்றும் கருவிகள் குறித்து உங்களுக்கு வழிகாட்டுவார்.
உலகளவிலான சமூகம்
நமது உலகளாவிய சமூகம் என்பது விலைமதிப்பற்ற செல்வமாகும். எல்லா வகையிலும், அதில் ஈடுபடுங்கள் மற்றும் பங்காற்றுங்கள். மற்ற கிளப்புகளில் கலந்து கொள்ளுங்கள், கேள்விகள் கேளுங்கள், ஆலோசனை மற்றும் கருத்துக்களைக் கேளுங்கள். பல்வேறு பின்னணியிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மக்களை சந்திப்பது என்பது விலைமதிப்பற்ற விஷயமாகும்.
அவ்வப்போது நாங்கள் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகளை ஏற்பாடு செய்கிறோம். இந்த நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் வெவ்வேறு கற்றல் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், திறமையான பேச்சாளர்கள் சொல்வதைக் கேட்கலாம், எங்களது சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவ திறமையைச் சோதிக்கும் போட்டிகளில் கூட பங்கெடுத்து போட்டியிடலாம்.
கூடுதலாக, கிளப்புகள் எல்லா நேரங்களிலும் பார்ட்டிகள், நிகழ்ச்சிகள், பொது சொற்பொழிவு விருந்துகள், மராத்தான்கள், தலைமைத்துவ செயல்பாடுகள், சமூக செயல்திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்கின்றன. நாங்கள் ஒரு பெரிய Agora குடும்பமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
எங்கள் உள் அமைப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி எங்கள் சமூகத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்கலாம், பின்வரும் எங்கள் சமூக நெட்வொர்க்குகள் மூலமாக கூட:
ஆன்லைன் அமைப்புகள்
விக்கியைத் தவிர, Agora உடனான உங்கள் அனுபவத்தின் அனைத்து அம்சங்களுடனும் உங்களுக்கு உதவ, வடிவமைக்கப்பட்ட பற்பல அமைப்புகளை நாங்கள் அதிகளவில் பயன்படுத்துகிறோம். நிகழ்நேர உரையாடல் அமைப்புகள், மன்றங்கள், விரிவாக்கப்பட்ட பாடப்பயிற்சி மெட்டீரியல்கள், வெபினார்கள், நேர்காணல்கள் முதல் அதிநவீன அமைப்புகள் வரை என உங்கள் கிளப்பை இயக்க அல்லது நெட்வொர்க்கிங் வாய்ப்புகளைக் கண்டறிய உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த Agora தூணுக்கு எங்களிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன, எங்கள் தகவல்களுக்காக காத்திருங்கள்.