ஃபவுண்டேஷன் மற்றும் Agora Speakers கிளப்புகள் அனைத்தும் பின்பற்றும் அடிப்படைக் கொள்கைகள் பின்வருமாறு.
கிளப்பி உறுப்பினர்கள், தங்களது தனிப்பட்ட முயற்சியின் மூலம், கிளப்பின் கல்வித் திட்டங்களில் பங்கேற்க இயலும் வரை, அவர்களை இனம், நிறம், மதம், பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, வயது, வருமான நிலை, தேசியம், இனம், அல்லது மன அல்லது உடல் ரீதியான குறைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கிளப்பில் இருந்து விலக்க முடியாது.
வேண்டுகோளின் பேரிலும் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும், Agora Speakers International ஆனது உள்ளூர் சட்டங்கள் அல்லது சூழ்நிலைகளுக்கு (உதாரணமாக சிறைச்சாலை கிளப் போன்றவை) இணங்கி இருக்கும் விதமாக, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொருட்டு அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக, இந்தக் கொள்கையை கடைபிடிக்காத ஒரு கிளப்பை அமைத்திட அனுமதி வழங்கலாம். இந்த அனுமதி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்.
பாகுபாடு இன்மை என்றால் யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பிய கிளப்பில் சேருவதற்கு உரிமை உள்ளது என்று அர்த்தமில்லை. சில குழுக்கள் சேருவதைத் தடுக்கும் முறையான கொள்கை (வெளிப்படையான முறையில் அல்லது நடப்பின்படி) இருக்கும்போது மட்டுமே பாகுபாடு ஏற்படுகிறது. உறுப்பினர்களாக நிராகரிக்க கிளப்புகளுக்கு சுதந்திரம் உள்ளது - தனிநபர் மற்றும் ஒவ்வொரு சூழலின் அடிப்படையில் - கிளப்பிற்கு பிரச்சினை தரக்கூடியவர்கள் அல்லது கிளப்புக்கு சாதகமாக பங்களிக்காத நபர்கள் போன்றோரை நிராகரிப்பதற்கு கிளப்பிற்கு சுதந்திரம் உள்ளது.
கிளப் கட்டணம் - எத்தனை முறை மற்றும் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை தீர்மானிப்பது கிளப் ஒவ்வொன்றும்தான்.
கிளப்புகளால் வசூலிக்கும் நிதிகள் - அவற்றின் ஆதாரத்தைப் பொருட்படுத்தாமல் - கிளப்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், எந்தவொரு தனிநபருக்குமான பொருளாதார நன்மையாக ஒருபோதும் இருக்காது. கிளப் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில், நிதிகளின் சரியான பயன்பாடு மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
கிளப் நிதிக்கான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, கிளப் கட்டணம் பாரபட்சமாக இருக்காது.
கிளப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும், மரியாதையாகவும், சகிப்புத்தன்மையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும், சொற்பொழிவாளரின் சொற்பொழிவு தலைப்பு அல்லது கருத்து பெரும்பாலான மக்களின் கருத்துக்கு மிகவும் முரண்பட்டு இருந்தாலும் கூட.
இது குறிப்பாக பல்வேறு சந்திப்பு பிரிவுகளின் தலைவர்களுக்கு (சந்திப்பின் தலைவர், உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் தலைவர், விவாத நடுவர், முதலியன) மற்றும் கிளப் அலுவலர்களுக்கு பொருந்தும்.
கிளப்பிற்கான முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளிப்படையாக குறிப்பிடப்பட்ட சொற்பொழிவு உள்ளடக்க விதிகளுக்கு எதிராக சொற்பொழிவு வழங்கப்பட்டால் தவிர, பிரிவுத் தலைவர்களோ அல்லது கிளப் அலுவலர்களோ அவர்கள் உடன்படாத அல்லது அவர்களை புண்படுத்துவதாக உணரும் சொற்பொழிவைத்த தரும் பேச்சாளரை எந்த வகையிலும் தடுக்கவோ அல்லது இடையூறு செய்யவோ கூடாது.
அனைவருக்கும் அவர்கள் அக்கறை காட்டும் விஷயங்களைப் பற்றி மிக ஆர்வத்துடனும், தைரியத்துடனும் பேச நாங்கள் வெளிப்படையாக ஊக்குவிக்கிறோம். நாங்கள் விமர்சனம், நகைச்சுவை மற்றும் நையாண்டியை வெளிப்படையாக பாதுகாக்கிறோம்.
மிகவும் இலக்கு வைத்து ஒரு தனிப்பட்ட நபரை பற்றி எதிர்மறையாக பேசும் (வெளிப்படையாக ஒரு குறிப்பிட்ட உறுப்பினரை நோக்கி) உள்ளடக்கம் கொண்ட சொற்பொழிவுகளைத் தவிர, Agora கிளப்புகளிலோ அல்லது ஃபவுண்டேஷனிலோ "புண்படுத்துவதற்கு உரிமை இல்லை" என்று எதுவுமில்லை.
மேலும், ஒரு கிளப் சந்திப்பில் "பதிலளிக்கவும் உரிமை" இல்லை. ஒருவரின் பேச்சால் நீங்கள் மிகவும் புண்படுத்தப்பட்டிருந்தால், வழக்கமான கிளப் பாத்திரத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி, கல்வித் திட்டம் அல்லது பாத்திரத்திற்குள் அதற்கு எதிர் சொற்பொழிவு கொடுப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே வழி.
இறுதியாக, கிளப்களில் "ஒரு தலைப்பை நியாயமாகவும், சமமான முறையில் நடத்த வேண்டுமென்ற உரிமையும்" இல்லை. உதாரணமாக, யாராவது ஒரு தலைப்பை பற்றி 15 நிமிடங்கள் பேசியிருந்து, ஏனெனில் அதுதான் செயல்திட்டத்தின் கால அளவு என்றால், மேலும் அதனால் நீங்கள் புண்படுத்தப்பட்டதாக உணர்ந்தால், உங்கள் கல்வித் திட்டத்தின் கால அளவு எதுவாக இருந்தாலும் உங்கள் எதிர்-பதில் நேரக் கட்டுப்பாடு உடையதாக வேண்டும்.
Agora கிளப்புகளை எந்த மத, சித்தாந்த அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது உலகக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவோ அல்லது பிற சங்கங்கள், நிறுவனங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தவோ பயன்படாது. நாங்கள் செயல்முனைவில் ஈடுபடவில்லை.
இந்தக் கொள்கை ஒட்டுமொத்த ஃபவுண்டேசனுக்கும், அனைத்து Agora கிளப்புகள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும் என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். உதாரணமாக, கிளப் கிறிஸ்தவத்தையோ அல்லது சம உடைமையையோ அல்லது பெண்களின் உரிமைகளையோ அல்லது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையையோ தீவிரமாக ஊக்குவிக்காது.
இருப்பினும், இது உறுப்பினர்களுக்கு பொருந்தாது. தனது சார்பாக செயல்படும் அல்லது பேசும் ஒரு தனிப்பட்ட உறுப்பினர், அவர்களுக்கு முக்கியமான விஷயங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் செய்யலாம். உண்மையில் சொல்லப்போனால், எங்கள் உறுப்பினர்கள் தைரியமாகப் பேசவும், பொருத்தமான விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் ஊக்குவிக்கிறோம், அவை எதுவாக இருந்தாலும் சரி.
மேலும், கிளப்புகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கலாம், ஏனெனில் இவை புறநிலை சார்ந்தது, கருத்தியல் அல்லாத தன்மையினைக் கொண்டது மற்றும் ஃபவுண்டேஷன் துணைச்சட்டங்களின் அங்கமாக இருக்கிறது.
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, கலந்து கொள்வது
இந்த கொள்கையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால், கிளப்புகள் எந்த வகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம் அல்லது பங்கேற்கலாம் என்பதே.
நடுநிலைக் கொள்கையின் அடித்தளமாக இருக்கும் அடிப்படைக் கருத்து என்னவென்றால், மக்கள் வசிக்கும் இடத்தில் நிலவும் ஆட்சியின் தன்மை மற்றும் வடிவத்தைப் பொருட்படுத்தாமல், எங்களது ஃபவுண்டேஷன் எல்லா இடங்களிலும் உள்ள மக்களைச் சென்று உதவ விரும்புகிறது. Agora-வோ அல்லது அதன் கிளப்புகளோ எந்தவிதமான செயல்பாட்டிலும் ஈடுபடுவதில்லை என்பதிலோ, அதன் துணைவிதிகளில் வெளிப்படையாகக் கூறப்பட்ட இலக்குகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் (அரசியல், கருத்தியல், தார்மீக ரீதியிலானவை, முதலியன) அவர்களிடம் இல்லை என்பதிலோ எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.
ஏற்கெனவே நம்பிய மக்கள் குழுவிற்கு ஒரு காரணத்தை பிரசங்கிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலின் காரணமாக தடுக்கப்படுவதை விட எல்லா இடங்களையும் சென்றடைவது நல்லது என்று நாங்கள் நம்புகிறோம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு குறிப்பிட்ட பிரிவில் (மனித உரிமைகள், ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம், கருக்கலைப்பு, மத சுதந்திரம் போன்றவை) காரணம் அல்லது யோசனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், Agora கிளப்புகள் அதனை ஊக்குவிக்கவோ அல்லது அதற்கு ஆதரவளிக்கவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது, இவ்வாறு ஆதரவளிப்பது மற்ற நாடுகளில் உள்ள அதிகாரிகளை Agora-வின் செயல்பாடுகளைப் பார்த்து முகம் சுளிக்க வைக்கும் மற்றும் அந்த நாடுகளில் உள்ள உறுப்பினர்களுக்கு கடுமையான, உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் ஏற்படலாம்.
சாத்தியமான சூழ்நிலைகள் அனைத்தையும் தெளிவாக உள்ளடக்கும் விதிகளின் தொகுப்பை வரையறுக்க இயலாது என்றாலும், கிளப் பங்கேற்பு அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகளின் சில உதாரணங்கள் இதோ இங்கே:
- முக்கிய அமைப்பாளர் தெளிவான கருத்தியல் சார்புடன் மூன்றாம் தரப்பாக இருக்கும் ஏதேனும் நிகழ்ச்சி (உதாரணம்: மத கொண்டாட்டங்கள், PAC கள் மற்றும் சிந்தனை-தொட்டிகள், புரோ லைஃப் அல்லது புரோ சாய்ஸ் நிகழ்வுகள் போன்றவை).
- நிகழ்வின் கருப்பொருள் அல்லது குறிக்கோள் ஒரு தெளிவான கருத்தியல் சார்பு, நிகழ்ச்சி நிரல் அல்லது செயல்முனைவு இலக்கைக் கொண்டுள்ள ஏதேனும் கருப்பொருள் நிகழ்வு, உதாரணமாக, காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை கோருவதற்கான நிகழ்வு, மனித உரிமைகள், LGBTQ உரிமைகள் போன்றவற்றுக்கு ஆதரவான நிகழ்ச்சி.
- பட்டியலிடப்பட்ட அமைப்பாளர்களில் எவரும் (அதன் பங்கேற்பின் அளவைப் பொருட்படுத்தாமல்) Agora Speakers ஃபவுண்டேஷன் உடைய விதிகள், இலட்சியங்கள் மற்றும் இலக்குகளுக்கு முரணான செயல்களில் ஈடுபடுகின்றன ஏதேனும் நிகழ்ச்சி - இதில் பாகுபாடு, வெறுப்பு, வன்முறை, போலி அறிவியல் போன்றவற்றை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் அடங்கும்.
மீண்டும் நாங்கள் சொல்லிக்கொள்ள வேண்டுவது, இந்த வரையறைகள் நிகழ்வில் ஒரு கூட்டு அமைப்பாக, Agora அல்லது கிளப் லோகோ இடம்பெறும் கிளப்பின் பங்கேற்புக்கு மட்டுமே என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். பொது நடத்தை விதிகளை மீறாத வரை தனிப்பட்ட உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்களின் குழுக்கள் அவர்கள் விரும்பும் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம்.
இறுதியாக, நடுநிலைக் கொள்கையானது Agora அல்லது அதன் கிளப்புகள் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் (இலவசமாகவோ அல்லது பணத்திற்காகவோ) சேவைகளை வழங்குவதைத் தடுக்காது என்பதை நினைவில் கொள்க, இத்தகைய தொடர்பானது அந்த மூன்றாம் தரப்பு அல்லது அவர்களின் யோசனைகளுக்கான ஒப்புதல் தெரிவிப்பது, ஆதரவு அளிப்பது அல்லது வக்காலத்து வாங்குவது போன்றவற்றைக் குறிக்காது என்பதை அது/அவர்கள் தெளிவாக தெளிவுபடுத்தும் வரை.
கிளப்பின் உறுப்பினர்கள் அறிவுப்பூர்வமாக நேர்மையாக இருக்க வேண்டும். அறிவியல் ரீதியான ஆராய்ச்சியாளர்களாக, அவர்கள் புதிய யோசனைகளுக்கு திறந்த மனதுடன் இருக்க வேண்டும், தொடர்ந்து அவர்களின் பார்வைகள் மற்றும் நம்பிக்கைகளை விமர்சன ரீதியாக ஆராய வேண்டும், மேலும் புதிய வற்புறுத்தும் ஆதாரங்கள் அல்லது வாதங்கள் வழங்கப்பட்டால் அவற்றை அவற்றின்பால் விட்டுவிட தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கோ அல்லது தங்கள் கருத்துக்களை வாதிடுவதற்கோ திரித்துப் பேசுவது அல்லது ஏமாற்றுவது போன்ற சூழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது. அவர்கள் தங்கள் சொந்த அறிவு வரம்புகளை ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் அவற்றை நிறைவு செய்ய தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
பாகுபாடின்மை என்பதற்கு யார் வேண்டுமானாலும் கிளப்பில் சேரலாம் என்ற அர்த்தமில்லை என்பதை போல, அறிவுசார் நேர்மை என்பது ஒரு விஷயத்தைப் பற்றிய ஒவ்வொரு சாத்தியமான கண்ணோட்டத்திற்கும் கிளப்பில் சம உரிமை அல்லது சமமான நேரத்திற்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கவில்லை. உதாரணமாக, அறிவுசார் நேர்மை என்பது பூமி தட்டையானது என்று நம்பும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வதே, ஆனால் அதற்காக தட்டை பூமி கோட்பாடு முக்கிய அறிவியல் ரீதியான அறிவுக்கு சமமான நிலைப்பாட்டைப் பெறுகிறது என்று அர்த்தமல்ல.