Agora Speakers-இல் ஐந்து வகையான கிளப்புகள் உள்ளன, அவற்றில் உறுப்பினராக சேருவதில் அவை எத்தனை கட்டுப்பாடுகளை முன்வைக்கின்றன, அவை Agora கல்வித் திட்டத்தை எவ்வளவு நெருக்கமாக பின்பற்றுகின்றன என்பதைப் பொறுத்தும் இது அமையும்.

  • பொது கிளப்புகள் என்பது மிகவும் பிரபலமானதும், குறைவான கட்டுப்பாடு உடைய கிளப்புமாகும், மேலும் கிளப் நிறுவனர்களை கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் மிகவும் ஊக்குவிப்பதும் இந்தக் கிளப்தான். கூடுதலாக, பொது கிளப்புகள் Agora Speakers International -க்கு எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
    • முன்னோடி கிளப்புகள் என்பது சிறப்பு வகை பொது கிளப்பாகும், இவை சிறப்பாக செயல்படுவதாக அங்கீகரிக்கப்பட்டவை, மேலும் Agora கல்வி மாதிரியை வலுவாக பின்பற்றுகின்ற கிளப்புகள். ஒரு சிறப்பான கிளப் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணமாக, முன்னோடியாக பயன்படுத்தப்பட வேண்டிய கிளப்புகள் இவை.
    • இளைஞர் கிளப்புகள் என்பது இன்னொரு சிறப்பு வகை பொதுக் கிளப்பாகும், இவை குறிப்பாக பிள்ளைகளுக்குத் துணையாக இருக்கின்றன. இவை எளிமையாக தொகுக்கப்பட்ட பாத்திரங்கள், அதிகாரிகளைக் கொண்டுள்ளன, மேலும் தழுவிய கல்வித் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. வழக்கமாக, வயது வரம்பு என்பது ஒவ்வொரு கிளப்பையும் பொறுத்தது என்றாலும், இந்தக் கிளப் 6 முதல் 14 வயது வரையான வயது வரம்பைக் கொண்டுள்ளது.
    • வெளி இணை கிளப்புகள் என்பது இன்னொரு நிறுவனத்திற்கு (பொதுவாக இலாப நோக்கற்றது) சொந்தமான கிளப்புகள், மேலும் இது Agora -வின் பொது கிளப்புகளாக செயல்படுகின்றன.
  • நிபந்தனைகள் உடைய கிளப்புகள் என்பது உறுப்பினர்களாக சேருவதற்கு சிறப்புத் தேவைகளைக் கொண்ட கிளப்புகள், பொதுவாக தொழில்முறை ரீதியாக அல்லது அனுபவத்தின் அடிப்படையில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட கிளப்புகள் இவை.
  • பொது நலன் கிளப்புகள் என்பது உறுப்பினருரிமை அடிப்படையில் கட்டுப்பாடுகளைக் கொண்ட கிளப்கள், ஆனால் பொது நலன் சேவை செய்யக்கூடியவை, மேலும் இவை எந்தவொரு கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகின்றன. ஃபவுண்டேஷன் ஆனது ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில், பொது நலன் கிளப் என்கிற அந்தஸ்தை வழங்குகிறது.
  • கார்ப்பரேட் கிளப்புகள் என்பது ஒரு நிறுவனத்திற்குள் செயல்புரியும் கிளப்கள், இந்த கிளப்புகள் அந்த அமைப்பில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமேயானது.

Agora Speakers -இல் உள்ள அனைத்து கிளப்களும் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் அனைத்து கிளப் உறுப்பினர்களும் அவர்கள் எந்த கிளப் வகையைச் சார்ந்திருந்தாலும் ஒரே மாதிரியான உரிமைகளையே அனுபவிக்கிறார்கள்.