Agora மாநாட்டில் நீங்கள் பேச பல வழிகள் உள்ளன, ஆனால் Agora-வுடன் (உறுப்பினர்களாக அல்லது ஸ்பான்சர்களாக) தீவிரமாக ஈடுபடும் நபர்களை நாங்கள் மிகவும் ஆதரிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க.
முக்கிய பேச்சாளர்கள்
முக்கிய பேச்சாளர்கள் முக்கிய டிராக்கில் பேசுவார்கள், இவர்கள் உறுப்பினர்களுக்கு அற்புதமான மதிப்புள்ள சொற்பொழிவுகளை வழங்குவார்கள்.
ஒரு முக்கிய பேச்சாளராக இருக்க, நீங்கள் உங்கள் துறையில் ஒரு திறமையான நிபுணராக இருக்க வேண்டும் மற்றும் ஆங்கில மொழியை சிறப்பாக பேசுபவராக வேண்டும்.
முக்கிய சொற்பொழிவுகளானது:
- மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் ஆர்வமுள்ளதாக இருக்க வேண்டும்.
- Agora-வின் மைய கோட்பாடுகள் மற்றும் துணை விதிகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
- இயல்பாக கல்வி ரீதியானதாக இருக்க வேண்டும்.
- Agora Speakers International ஃபவுண்டேஷனின் முக்கிய பணி மற்றும் விழுமியங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
- உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த பயன்படுத்தக்கூடிய செயல் படுத்தக்கூடிய அறிவுரைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும் (விளக்கக்காட்சி மெட்டீரியல்கள் அனைத்தும் உட்பட).
- சொற்பொழிவில் பரிந்துரைக்கப்படும் எந்த ஆலோசனையும், பரிந்துரையும் அல்லது நுட்பமும் சக-மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியால் ஆதரிக்கப்பட வேண்டும்.
- தயாரிப்புகள், சேவைகள் அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்களை விளம்பரப்படுத்தக்கூடாது.
- குறிப்பிட்ட சித்தாந்தங்கள் அல்லது அரசியல், தார்மீக அல்லது மதக் கருத்துக்களை ஊக்குவிக்கக்கூடாது.
விண்ணப்பிக்க, தயவுசெய்து உங்களது முன்மொழிவை [email protected] என்ற முகவரிக்கு பின்வரும் தகவலுடன் சமர்ப்பிக்கவும்:
- உங்களது முழு பெயர்.
- உங்களது சுயவிவரம், நீங்கள் பேச விரும்பும் துறையில் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தை விவரிக்க வேண்டும்.
- நீங்கள் முன்வைக்க விரும்பும் சொற்பொழிவின் சுருக்கம் மற்றும் அதன் காலம்.
- நீங்கள் பேசப்போகும் விஷயத்தை ஆதரிக்கும் ஆராய்ச்சி குறிப்புகள்
- பின்வரும் கேள்விக்கு ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்ட பதில்: "மாநாட்டிற்கு வருபவர்கள் உங்கள் விளக்கக்காட்சியை கேட்டபின் அவர்களின் வாழ்க்கையில் எதனை சிறப்பாக செய்ய முடியும்?"
பயிற்சிபட்டறையின் தலைவர்கள்
பயிற்சிபட்டறையின் பேச்சாளர்கள் துணை டிராக்குகளின் போது பேசுவார்கள், மேலும் அவர்கள் நடைமுறை பயிற்சிபட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை வழிநடத்துகிறார்கள்.
பயிற்சிபட்டறைத் தலைவராக இருக்க, நீங்கள் உங்கள் துறையில் ஒரு திறமையான நிபுணராக இருக்க வேண்டும் மற்றும் பயிற்சிபட்டறை வழங்கப்படும் மொழியை சிறப்பாக பேசுபவராக இருக்க வேண்டும்.
பயிற்சிபட்டறைகளானது:
- மாநாட்டிற்கு வருகை தரும் மக்களில் கணிசமானவர்களுக்கு ஆர்வமுள்ளதாக இருக்க வேண்டும்.
- Agora-வின் மைய கோட்பாடுகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.
- இயல்பாக, கல்வி ரீதியானதாக இருக்க வேண்டும்.
- Agora Speakers International ஃபவுண்டேஷனின் முக்கிய பணி மற்றும் விழுமியங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
- உறுப்பினர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த பயன்படுத்தக்கூடிய செயல்படுத்தக்கூடிய அறிவுரைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- மாநாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றில் வழங்கப்பட வேண்டும் (இந்த தேவை அனைத்து விளக்கக்காட்சி மெட்டீரியல்களுக்கும் பொருந்தும்).
- சொற்பொழிவில் பரிந்துரைக்கப்படும் எந்த ஆலோசனையும், பரிந்துரையும் அல்லது நுட்பமும் சக-மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியால் ஆதரிக்கப்பட வேண்டும்.
- தயாரிப்புகள், சேவைகள் அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்களை விளம்பரப்படுத்தக்கூடாது.
விண்ணப்பிக்க, தயவுசெய்து உங்களது முன்மொழிவை [email protected] என்ற முகவரிக்கு பின்வரும் தகவலுடன் சமர்ப்பிக்கவும்:
- உங்களது முழு பெயர்.
- உங்களது சுயவிவரம், நீங்கள் பேச விரும்பும் துறையில் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தை விவரிக்க வேண்டும்.
- நீங்கள் முன்வைக்க விரும்பும் சொற்பொழிவின் சுருக்கம் மற்றும் அதன் காலம்.
- நீங்கள் பேசப்போகும் விஷயத்தை ஆதரிக்கும் ஆராய்ச்சி குறிப்புகள்
- பின்வரும் கேள்விக்கு ஒரு வாக்கியத்தில் குறிப்பிட்ட பதில்: "மாநாட்டிற்கு வருபவர்கள் உங்களது பயிற்சிபட்டறையில் கலந்துக் கொண்டபின் அவர்களின் வாழ்க்கையில் எதனை சிறப்பாக செய்ய முடியும்?"
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள்/Agora அலுவலர்கள்
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பின்வருபவர்களுக்கு முக்கிய டிராக்கில் பேசுவதற்கான நேரத்தை வழங்கலாம்:
- மாநாட்டு அமைப்பு குழுவின் உறுப்பினர்கள்
- Agora தூதர்கள் மற்றும் பிற Agora அலுவலர்கள்
- Agora கிளப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள்
போட்டியாளர்கள்
கீழ்-நிலை போட்டிகளில் நீங்கள் உங்களை வகைப்படுத்தியிருந்தால் நீங்கள் மாநாட்டு நிகழ்ச்சியிலும் சொற்பொழிவாற்றலாம்.
பொதுவான பாத்திரங்கள் மற்றும் பிற மாநாட்டு பேச்சாளர்கள்
MC உடைய பொதுவான பாத்திரங்கள்/சந்திப்பின் தலைவர், நேரம் கண்காணிப்பாளர், உடனடித் தலைப்பு பேச்சாளர் மற்றும் இதே போன்ற வேறு ஏதேனும் பாத்திரங்கள் Agora கிளப்புகளின் செயலில் உள்ள உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
Agora மற்றும் மாநாட்டு ஸ்பான்சர்கள்
Agora Speakers International ஃபவுண்டேஷன் அல்லது Agora Speakers மாநாட்டின் ஸ்பான்சர்கள் தங்கள் குறிப்பிட்ட சேவை அல்லது தயாரிப்பு சலுகைகள் தொடர்பான பயிற்சிபட்டறைகளை நடத்தலாம். அவர்களுக்கும் கூடுதல் பிராண்டிங் மற்றும் நிலைப்படுத்தல் நன்மைகள் கிடைக்கும். விவரங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு எங்களுக்கு செய்தி அனுப்பவும்.
பொதுவான தேவைகள்
TEDx உள்ளடக்க வழிகாட்டுதல்களை (குறிப்பாக "பேட் சயின்ஸ்" பிரிவு) வெளிப்புற பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் பயிற்சிபட்டறைகளின் உள்ளடக்கத்தை சரிபார்க்க நாங்கள் பயன்படுத்துகிறோம். TEDx இன் இந்த சமூகக் கடிதம் மோசமான அறிவியலைக் கண்டறிவதற்கான பல அளவுகோல்களை விரிவாக விவாதிக்கிறது.
Agora Speakers International ஃபவுண்டேஷனுக்கு நிரந்தரமான, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத உரிமத்தை வழங்குவதற்கு அனைத்து பேச்சாளர்களும் (கையொப்பமிட்ட விடுதலை படிவத்தின் மூலம்) ஒப்புக் கொள்ள வேண்டும், இது எந்த விதத்திலும், வடிவத்திலும், வரையறை இல்லாமல் விநியோகிக்க அனுமதிக்கிறது.
குறிப்பாக, அனைத்து பேச்சாளர்களும் பின்வரும் விஷயங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்:
- அவர்களின் சொற்பொழிவு மற்றும் விளக்கக்காட்சி மெட்டீரியல்கள் உலகளவில் உள்ள அனைத்து Agora உறுப்பினர்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
- அவர்களின் சொற்பொழிவு பதிவு மற்றும் அவர்களின் விளக்கக்காட்சி மெட்டீரியல்களின் நகல் உலகளவில் உள்ள அனைத்து Agora உறுப்பினர்களுக்கும் கிடைக்கும்.
- மேலே உள்ளவை DRM மூலம் லாக் செய்யப்படாது.