முதல் சந்திப்பு
புதிதாக பயில்பவர் (வழிகாட்டுதல் பெறுபவர்) ஒருவருடன் உங்கள் பயணத்தைத் தொடங்கும் போது, நீங்கள் முதலில் "ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளும்" சந்திப்பிற்கு திட்டமிட வேண்டும். உங்களால் முடிந்தால், அந்த நபரை நேரில் சந்திக்க முயற்சி செய்யுங்கள் - அந்தச் சந்திப்பு காபி ஷாப்பில் நடக்கலாம், பூங்காவில் அல்லது கூட்டாக வேலை செய்யும் இடத்தில் நடக்கலாம். சந்திப்பிற்கு முன்னும் பின்னும் நீங்கள் கிளப் அரங்கில் கூட சந்திக்கலாம்.
அது சாத்தியமில்லை என்றால், ஆன்லைன் சந்திப்புகளுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்பத்தை கூட நீங்கள் பயன்படுத்தலாம் - முகநூல் அல்லது வாட்ஸ்அப் அழைப்புகள், ஸ்கைப் போன்றவை. நீங்கள் இதில் அடிப்படையாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் நேரில் பேசி விஷயங்களை உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இவை இருக்க வேண்டும் என்பதுதான்.
பயில்பவரின் (வழிகாட்டுதல் பெறுபவரின்) நலன்களைப் பற்றி விசாரிக்கவும். பெரும்பாலான மக்கள் Agora திட்டத்தின் பெருந் "தூண்களில்" ஒன்றை விரும்புகிறார்கள் - அது தலைமைத்துவமாக இருக்கலாம், விவாத ரீதியான/ விமர்சன ரீதியான சிந்தனையாக இருக்கலாம், பொது சொற்பொழிவாக இருக்கலாம். அவரது எதிர்பார்ப்புகள், இதுவரை அவர் கொண்டிருக்கும் அனுபவம் பற்றி கேளுங்கள். அந்தப் பிரிவுகளில் உங்களுக்கு இருக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் - அந்த அனுபவத்தை நீங்கள் Agora -வில் பெற்றிருந்தாலும் சரி அல்லது வேறு எங்கிருந்தேனும் பெற்றிருந்தாலும் சரி.
முதல் சந்திப்பிலேயே நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- பயில்பவரின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவரது குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
- எத்தனை முறை, எப்போது நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் அல்லது வழிகாட்டுதல் அமர்வுகள் (அதாவது, ஒரு வழக்கமான) போன்றவை உட்பட முன்னோக்கி செல்லும் பாதையின் தெளிவான விதிகளை அமைக்கலாம்.
- ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள நீங்கள் எந்த தகவல் தொடர்பு சேனலைப் பயன்படுத்துவீர்கள் என்பதற்கான ஒப்பந்தம். ஒரு சேனலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை - அது மின்னஞ்சல், வாட்ஸ்அப், தொலைபேசி, ஃபேஸ்புக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் (யாரேனும் இணைப்பு அல்லது வீடியோ பதிவை அனுப்ப வேண்டும் என்றால்) கோப்பு பரிமாற்ற சேவை அல்லது மின்னஞ்சல் போன்ற கூடுதல் விருப்பங்களை நீங்கள் முடிவு செய்யலாம்.
- அடுத்த சந்திப்புக்கான குறுகிய கால உடனடி இலக்கை அமைக்கலாம்.
- பணிக்கு வழிகாட்டுதல் பெறுபவர் அர்ப்பணிக்கவிருக்கும் நேரத்தைப் பற்றிய அவரின் உறுதிப்பாட்டை அறிந்துக் கொள்ளலாம்.
பொது சொற்பொழிவாற்றுவதற்கு வழிகாட்டுதல் செயல்முறைகள்
பொது சொற்பொழிவாற்றுவதற்கு வழிகாட்டுதல் செயல்முறைகள் பொதுவாக இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது:
- சொற்பொழிவு உள்ளடக்கம்
- சொற்பொழிவு வழங்குவது
சொற்பொழிவு உள்ளடக்கத்திற்கு, வழக்கமாக நீங்கள் சொற்பொழிவின் வரைவை முன்கூட்டியே பார்க்க வேண்டும். அனைத்து அடிப்படைகளையும் சரிபார்க்கவும் - அமைப்பு, வாதம், மொழி, துவக்க உரை, முடிவுரை, முதலியன. பின்னர் அவற்றை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசனைகளை வழங்கலாம். சொற்பொழிவுக்கு தயாராகும் வரை இந்த செயல்முறையை பல முறை மீண்டும் மீண்டும் செய்யலாம். இங்கே உங்கள் குறிக்கோள் என்னவென்றால், அவர்களுக்கான பிரச்சினைகளை நீங்கள் சரிசெய்வதை விட, அவர்களின் சொந்த சொற்பொழிவு உரை எழுதும் அணுகுமுறை, ஸ்டைல் மற்றும் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ள உதவுவதே என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிக்கல்களைச் சுட்டிக்காட்டி பரிந்துரைகளை வழங்கவும், ஆனால் அவர்களுக்கான சொற்பொழிவு உரையை நீங்கள் எழுத வேண்டாம்.
சொற்பொழிவு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதலுக்கு, நேரில் அல்லது வீடியோ அழைப்பின் போது உரையாடலை நேரடியாக வழங்குமாறு கேட்பது நல்லது. பதிவுசெய்யப்பட்ட சொற்பொழிவுகள் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது, ஏனென்றால் பதிவு செய்வதற்கு எத்தனை முறைகள் ஆனது என்பது உங்களுக்குத் தெரியாது, அது எடிட் செய்யப்பட்டதா என்பதும் உங்களுக்குத் தெரியாது, அல்லது யாரோ ஒருவர் முன் சொற்பொழிவு வழங்குவதை விட வெப்கேமுக்கு முன்னால் பேசுவது வசதியாக அவருக்கு வசதியாக இருக்கலாம்.
குறிப்பாக கல்வி வரிசைஅமைப்பின் செயல்திட்டங்களை பொறுத்தவரையில், ஒவ்வொரு செயல்திட்டத்தின் குறிக்கோள்களையும் பயில்பவர் புரிந்து வைத்துள்ளார் மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களை அவர் அறிந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அவர் தனது மதிப்பீட்டாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட செயல்திட்டம் உடல் பாவனையைப் பற்றியதாக இருந்தாலும், பேச்சாளர் மதிப்பீட்டாளரிடம் சொல்லாட்சி சாதனங்களைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும்படி கேட்கலாம்.
வழக்கமாக இருக்கும் பிரச்சனை என்னவென்றால், என்ன பேசுவது என்ற எந்த யோசனையும் பயில்பவருக்கு இருக்காது. தங்களுக்கு முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச வேண்டுமென்றே எப்போதும் அவர்களை ஊக்குவிக்கவும் அல்லது அவர்கள் உறுதியாக நம்பும் விஷயங்களைப் பற்றி பேச சொல்லுங்கள், இவை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அல்லது பிறருக்கு ஆரவமற்றதாக இருக்கும் என்று தோன்றினாலும் கூட. உண்மையில், ஒரு வழிகாட்டிக்கு ஏற்படக்கூடிய சுவாரஸ்யமான சவாலானது என்னவென்றால், பார்வையாளர்களை அந்நியப்படுத்தாத அல்லது எதிர்த்துக் கொள்ளாத வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை எப்படி முன்வைப்பது அல்லது மந்தமான தலைப்பை எவ்வாறு பிறரைக் கவரும் வகையில் மற்றும் மகிழ்விக்கும் வகையில் முன்வைப்பது என்று துல்லியமாக ஒருவருக்கு அறிவுறுத்துவதே.
ஒரு வழிகாட்டியாக, பயில்பவர் தனது செயல்திட்டத்தை முன்வைக்கும் சந்திப்பில் நீங்கள் இருக்க வேண்டும். இது எதிர்மறையான-உள்ளுணர்வாகத் தோன்றினாலும், முன் வரிசையில் உட்கார வேண்டாம்-தனிப்பட்ட அமர்வுகளில் நீங்கள் ஏற்கனவே "முதல் வரிசை" அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள். எனவே அதற்கு மாறாக, பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பார்வையாளர்களின் கண்ணோட்டத்தில் இருந்து, சொற்பொழிவை அனுபவிக்கலாம். அப்போது, வெளிப்படையாகத் தெரியாத சிக்கல்களை உங்களால் உடனடியாக கவனிக்க முடியும், அதாவது உபகரணங்கள் ஓரளவு மட்டுமே தெரிகிறது, குரல் போதுமான அளவு புரஜெக்ட் செய்யப்படவில்லை, பார்வையாளர்களின் ஒரு பகுதியை பார்த்து பேசவே இல்லை போன்ற விஷயங்களை உங்களால் கவனிக்க முடியும்.
சொற்பொழிவை வழங்கிய பிறகு உங்கள் வழிகாட்டுதலை பெறுபவருடன் (பயில்பவருடன்) தனிப்பட்ட முறையில் பேச முயற்சி செய்யுங்கள். அவர் எப்படி உணர்ந்தார், அவர் சொற்பொழிவு வழங்கிய விதம் குறித்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பன போன்ற விஷயங்களை ஆராயுங்கள்.
சமூக செயல்திட்டங்களுக்கான வழிகாட்டுதல்
சமூக திட்டங்களுக்கான வழிகாட்டுதல் என்பது அடிப்படையில், செயல்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனை சந்திப்புகள் நடத்துவதை உள்ளடக்கியது ஆகும்.
- முந்தைய பரிசோதனைச் சந்திப்பில், உங்களிடம் வழிகாட்டுதல் பெறுபவரை நீங்கள் ஆராய்ச்சி செய்வீர்கள்.
- செயல்படுத்தப்பட இருக்கும் அடுத்த கட்டத்திற்கு அவர் முழுமையாக தயாராக இருக்கிறாரா என்று பார்ப்பீர்கள்,
- அது சரியாக திட்டமிடப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பீர்கள் மற்றும்
- எதிர்பார்ப்புகள் யதார்த்தமானதாக இருக்கிறதா மற்றும் அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிப்பீர்கள்.
தற்போதுள்ள திட்டத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குங்கள், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் - குறிப்பிடப்பட்டவரின் வேலையைச் செய்யாதீர்கள். மேலும், இது ஒரு வழிகாட்டி (ஆசான்) மற்றும் வழிகாட்டியாக திகழுபவர் (பயில்பவர்) இடையேயான உறவே தவிர, பங்குதாரர்களுக்கு இடையேயான உறவு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோல, "நமது செயல்திட்டம்" என்ற மனநிலைக்குச் செல்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், அத்தகைய மனநிலையில் நீங்கள் இருந்தால், பயில்பவருக்கு சமமான பங்கேற்பாளராகி, அவர்களை மூளைச்சலவை செய்யும் அமர்வுகளை நடத்தி, உங்கள் யோசனையை அதில் செயல்படுத்த முனைவீர்கள். நீங்கள் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை மட்டுமே வழங்க வேண்டும், அந்த செயல்திட்டம் பயில்பவரின் திட்டமாகவே இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு செயல்திட்டத்தில் "நிதி திரட்டும்" கட்டம் இருக்கலாம். நிதி திரட்டும் செயல்பாடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பு உங்கள் வழிகாட்டுதலை பெறும் நபரை சந்தித்து பின்வரும் விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- குறிப்பிட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டுமா, அவற்றுக்குப் பொறுப்பான குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்பட வேண்டுமா மற்றும் இந்தச் செயல்பாட்டிற்காக குறிப்பிட்ட தரப்புகள் தொடர்பு கொள்ளப்பட வேண்டுமா?
- தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரும் நன்கொடை அளிப்பது எளிதாக இருக்குமா?
- ஏதேனும் நிலையான தொகை குறிப்பிடப்பட்டுள்ளதா?
- எதிர்பார்ப்புகள் யதார்த்தமானதாக இருக்கிறதா?
- என்னென்ன தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது? ஏற்படக்கூடிய ஆபத்துகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா? அவற்றைக் கையாள என்னென்ன உத்திகள் உள்ளன?
· முதலியன.…
இந்தக் கட்டம் நிறைவடைந்த பிறகு, உங்கள் வழிகாட்டுதலை பெறுபவருடன் சேர்ந்து முடிவுகளை ஆராயுங்கள். ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா? எதிர்பார்த்த, எதிர்பாராத பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டதா? இன்னும் சிறப்பாக என்னென்ன விஷயங்கள் செய்யலாம்?
குறிப்பிட்ட சமூக செயல்திட்டத்தின் கட்டம் நீண்டதாக இருந்தால் (ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால்), விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதைச் சரிபார்க்க பல செயலாக்கக் சந்திப்புகளை திட்டமிடுவது நல்லது.
சந்திப்பு பாத்திரங்களுக்கான வழிகாட்டுதல்
குறிப்பிட்ட பாத்திரத்திற்கான வழிகாட்டுதலுக்கு பொதுவாக ஒரு முறை சந்திப்பு நடைபெறும்:
அந்த பங்கு பற்றிய கேள்விகளை தெளிவுபடுத்துதல் வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் பாத்திரத்தை விளக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்க. பயில்பவர்களே ஆராய்ந்து தெரிந்துக் கொண்டு செய்ய வேண்டும் என்ற விதியை நினைவில் கொள்ளுங்கள். பாத்திரம் பற்றிய ஆவணங்களைப் படிப்பது மற்றும் பொருத்தமான வீடியோக்களைப் பார்ப்பது இதில் அடங்கும். ஆவணத்தில் தெளிவாகப் பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும்.
அந்தப் பாத்திரத்தை சிறிது ஒத்திகை செய்துப் பார்த்து, அது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான கருத்துக்களை வழங்க வேண்டும்.
பயில்பவர் Agora ஆன்லைன் இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கும் மற்றும்/அல்லது கிளப் அலுவலர்களுடனான உரையாடலின்போது வருங்கால சந்திப்பில் அந்தப் பாத்திரத்தைப் பெறுவதற்கும் அவருக்கு உதவ வேண்டும்.