Agora Speakers கிளப்பை ஆரம்பிப்பது என்பது மிகவும் எளிதான விஷயம்; மிகக் குறைவான விஷயங்களே தேவை, மேலும் இதற்கு கட்டணமோ அல்லது ஃபார்மாலிட்டிகளோ எதுவும் தேவையில்லை (சேருவதற்கான கட்டணமோ அல்லது கட்டாய கொள்முதலோ எதுவும் இல்லை).

 

வெற்றிக்கு வழிகோலும் ஒரு விதி: குறையற்ற தன்மைக்காக போராடாதீர்கள்

வெற்றிகரமாக செயல்படும் கிளப்புகளை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய காரணி என்னவென்றால், வெற்றிகரமாக செயல்படும் கிளப்புகள் குறைப்பாடற்றத் தன்மையை (பூரணத்துவத்தை) தேடுவதில்லை. முதல் சந்திப்புக்காக நீங்கள் திட்டமிடத் துவங்கும்போது, "அடுத்த வியாழக்கிழமை மழை பெய்யக்கூடும் என்பதால் நம்மால் சந்திக்க முடியாது. அதற்குப் பிறகு சாம்பியன் லீக் போட்டி உள்ளது, அதற்குப் பின்னர் பார்த்தால் நமது நாட்டில் தேர்தல்கள் உள்ளன", என்று உங்கள் எண்ணங்கள் எப்போதாவது இவ்வாறு ஓடக்கூடும். இந்த வகையில் யோசித்துப் பார்ப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் எந்த நாளைத் தேர்ந்தெடுத்தாலும், அந்த நாளில் ஏதாவது ஒரு விஷயம் நடக்கும். 

தொடங்குவதற்கான நல்ல தருணம் என்று எதுவும் இருப்பதில்லை. வெற்றிகரமான கிளப்பானது விஷயங்களை அப்போதே செய்து முடிக்கும், தவறுகள் செய்யும், அந்தத் தவறுகளில் இருந்து பாடத்தை விரைவாகக் கற்றும் கொள்ளும்.

தொடங்குவதற்கு சரியான தருணம் வரும் வரை அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். சரியான வளாகத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். திட்டமிடுவதற்கு அவர்களுக்கு பூரணத்துவமிக்க உறுப்பினர்கள் தேவை இல்லை. விஷயங்களை உடனே செய்து, விரைவாக தோல்வியை சந்தித்து, தங்களது தவறுகளில் இருந்து விரைவாக கற்றுக் கொண்டு, மீண்டும் செய்துப் பார்க்கும் மக்கள் எல்லாவற்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து பார்த்த பிறகே தொடங்கும் மக்களை விட அதிகம் வெற்றி காண்கிறார்கள் என்றும், மிக சிறப்பான விஷயங்களை வழங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.

எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்: உங்களது அடுத்த செயலை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக திட்டமிட்டிருந்தால், அது நீங்கள் செய்யவிருக்கும் ஒரு செயல் அல்ல - அது உங்களின் விருப்பத்திற்குரிய ஒரு கனவு.

 

 

 

கிளப் ஆரம்பிக்கும் காலவரிசை

பின்வரும் காலவரிசை ஒரு கிளப் ஆரம்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை கூறுகிறது. ஒவ்வொரு வழிமுறைகளிலும், அதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இதே போன்ற பிற அமைப்புகளில் அனுபவம் வாய்ந்த உறுப்பினராக இருந்தாலும், இந்த ஒவ்வொரு வழிமுறைகளையும் பின்பற்றி, அவற்றை முழுமையாகப் படிக்க வேண்டியது அவசியம், ஏனென்றால் இவை ஒவ்வொன்றிலும் முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

ஏன் கிளப் ஆரம்பிக்க வேண்டும்?

1 நாள்
மேலும் அறிய
 

நாங்கள் எவ்வாறு உதவ முடியும்

1 நாள்
மேலும் அறிய
 

Agora பற்றி அறிந்துக் கொள்ளுதல்

1-5 நாட்கள்
மேலும் அறிய
 

கிளப்பை வரையறுத்தல்

1 நாள்
மேலும் அறிய
 

குழுவை உருவாக்குவது

1-7 நாட்கள்
மேலும் அறிய
 

சந்திப்பு வளாகத்தை அறிவது

1-14 நாட்கள்
மேலும் அறிய
 

முதல் சந்திப்பை அட்டவணையிடுவது

1 நாள்
மேலும் அறிய
 

கிளப்பை பதிவு செய்தல்

1 நாள்
மேலும் அறிய
 

முதல் (சாசன உருவாக்க) சந்திப்பு

1 நாள்
மேலும் அறிய