பொது சொற்பொழிவாற்றுதல் மற்றும் தலைமைத்துவம் குறித்து பயிற்சி அளிப்பது ஒன்றும் புதியதல்ல. "பொது சொற்பொழிவாற்றுவது" என்ற சொல் மட்டுமே ஒப்பீட்டளவில் நவீனமானது, அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து "சொல்லாட்சிக் கலை" என்று அறியப்பட்ட சொல்லின் நவீன சொல்தான் இது.

நாம் பயன்படுத்தும் முக்கிய முன்மாதிரி - 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிற, உண்மையில் சொல்லப்போனால் பிற பல பொது சொற்பொழிவாற்றும் நிறுவனங்கள், பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் கிளப்புகள் ஆகியவற்றால் பகிரப்பட்ட கூடுதல் சிக்கல் உடைய குறிப்பிட்ட, குறிக்கோள் சார்ந்த, அல்லது சூழ்நிலை அடிப்படையிலான செயல்திட்டங்களில் பணியாற்றுவதன் மூலம் கற்றுக்கொள்வது, மேலும் அவை ஒவ்வொன்றையும் பற்றிய கருத்து மற்றும் மதிப்பீட்டைப் பெறுவது.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரோமன் வகுப்பறையில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய இந்த விளக்கத்தைப் பாருங்கள்.

தொடக்க நிலையில் இருப்பவர்கள் தொடர் வரிசை முறையில் அறிமுகப் பயிற்சிகளில் பணியாற்றினார், இது ஒரு முழுமையான சொற்பொழிவில் (உதாரணமாக, கதை ஒன்றைச் சொல்வது, ஒரு கதையின் நம்பகத்தன்மை குறித்து விமர்சிப்பது அல்லது பரிந்துப் பேசுவது, ஒரு பொதுவான ஆய்வறிக்கை குறித்து வாதம் செய்வது) இணைக்கப்பட வேண்டிய பல நுட்பங்களை அவர்களுக்கு பழக்கப்படுத்தியது .  மாணவர்கள் பின்னர் மிகவும் மேம்பட்ட பயிற்சிக்கு முன்னேறிச் செல்வார்கள் அதில் அவர்களுக்கு ஒரு கற்பனையான சூழ்நிலை வழங்கப்பட்டு, அதனால் எழக்கூடிய நியாயமான அல்லது விவாத சர்ச்சையின் ஒரு புறம் அல்லது மற்றொரு புறம் பேசும்படி கேட்கப்பட்டது.

 

எரிகா பெய்லி (2019) பொது சொற்பொழிவாற்றும் கல்வி முறையின் வரலாறு ரீதியான பார்வை,
குரல் மற்றும் சொற்பொழிவு குறித்த விமர்சனம், 13:1, 31-42, DOI: 10.1080/23268263.2018.1537218

 

இது நமது தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் உடனடித் தலைப்பு சொற்பொழிவுகள் போல இருக்கிறதல்லவா? நிச்சயமாக, ரோமானியர்கள் செய்ததைப் போல நாம் பயன்படுத்துவதில்லை, தேர்களை நாம் இப்போது பயன்படுத்தாதது போல. நாம் முக்கிய கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மேம்படுத்தி வருகிறோம். நமது நிறுவனத்தையும் மாதிரியையும் தனித்துவமாகவும், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியும் காட்டும் சில விஷயங்கள் இதோ இங்கே:

கல்வி ரீதியாக

  • Agora-வுக்கு தொடர்பில்லாத சமூகத்தில் கிளப்புக்கு வெளியே நிறைய பணி செய்ய வேண்டியிருக்கும், உண்மையான செயல்திட்டங்களின் தலைமைத்துவத்தில் ஈடுபட வேண்டியிருக்கும், மேலும் இதனை நாங்கள் ஊக்குவிக்கவும் செய்கிறோம். நாங்கள் பயிற்சியளிக்கும் பொதுப் பேச்சாளர்கள் தீவிரமாகச் சென்று பேசுவதை நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் பயிற்சி அளிக்கும் தலைவர்கள் உண்மையில் அவர்களைச் சுற்றியுள்ள உலகில் உண்மையான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
  • மேற்கூறியவற்றிற்காக, கிளப்புகளில் சமூகத் தலைமைத்துவத்தின் சிறப்புத் துணைத் தலைவர் என்ற பாத்திரம் இருக்கும், இவை உறுப்பினர்களுக்கு சொற்பொழிவாற்றுவதற்கும், தலைமைத்துவ பங்காற்றுவதற்குமான வாய்ப்புகளைக் கண்டறிவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்.
  • பெரும்பாலான செயல்திட்டங்களுக்கு சொற்பொழிவு பகுப்பாய்வு பகுதி தேவைப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து சிறந்த சொற்பொழிவுகளை பகுப்பாய்வு செய்வதன் மீது கவனம் செலுத்துகிறது, மேலும் இதோ ஒரு கிளப் பல்வேறு விதத்திலான ஸ்டைலில் சொற்பொழிவாற்றுவதற்கு உதவி செய்கிறது.
  • எங்களிடம் சில தனித்துவமான வழக்கமான செயல்பாடுகள் உள்ளன:
    • நூதன சிந்தனையில் கவனம் செலுத்துவது.
    • ஒத்துழைப்பை ஊக்குவிக்கும், பிரச்சனைகளின் பல பக்க கண்ணோட்டத்தை அனுமதிக்கும் சிறப்பு விதிமுறையுடன் கூடிய விவாதங்கள்
    • பூர்வீக மொழி கிளப்புகளுக்கு மொழி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மொழி விளையாட்டுகள்
    • சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் செயல்திட்டங்கள்
  • Agora உலகிற்கு வெளியே கண்டிப்பாக செயல்படுத்தப்படும் சமூக செயல்திட்டங்கள் மூலம் நாங்கள் தலைமைத்துவம் குறித்து பயிற்சி அளிக்கிறோம்
  • அனைத்து வகையான எதிர்பாராத தோல்விகளைக் கையாளுவது குறித்தும், விரோதமான பார்வையாளர்களை எதிர்நோக்குவது குறித்தும் நாங்கள் பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
  • சிறந்த கல்வி ரீதியான சொற்பொழிவு, சிறந்த சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு அல்லது சிறந்த வகையில் கதை சொல்வது என்பதை மையமாக வைத்து பல போட்டிகளை உலகளாவிய அளவில் நாங்கள் நடத்துகிறோம்.
  • எங்களுக்கு வலுவான சமூக நோக்குநிலை ஒன்று உள்ளது, நாங்கள் உண்மையான தலைவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறோம், எதிர்காலத்தின் சொற்பொழிவு ஆலோசகர்களுக்கு அல்ல.
  • கல்வி ரீதியான செயல்பாடுகளுக்கு புதிய யோசனைகளை முயற்சி செய்துப் பார்த்துப் பார்க்க நாங்கள் கிளப்புகளை ஊக்குவிக்கிறோம், அவை நன்கு பலனளிக்கக்கூடியதாக இருந்தால், அவற்றை அனைத்து கிளப்புகளிலும் தரநிலைப்படுத்தி செயல்படுத்துகிறோம்.
  • ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துக்களைக் கொண்டு நாங்கள் எங்கள் கல்வி மெட்டீரியல்கள் மற்றும் விதிமுறை புத்தகங்களை உருவாக்குகிறோம்.
  • எங்கள் கல்வி மெட்டீரியல்கள் சாத்தியமான அனைத்து மொழிகளிலும் கிடைக்கச் செய்வதற்கு நாங்கள் தீவிரமாகத் தேடி, அது குறித்து பணியாற்றி வருகிறோம்.
  • எங்களது கல்வி ரீதியான வெளியீடு அனைத்தும் உறுப்பினர்களுக்கு இலவசம்.

நிறுவன ரீதியாக

  • எங்களது கிளப்பில் இலவசமாக சேரலாம். கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை, எதனையும் வாங்க வேண்டிய தேவையும் இல்லை. உங்கள் கிளப் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் என்றால், கிளப் சாசன கட்டணம், அந்த கிளப்பை அமைப்பதற்கான கட்டணம், உறுப்பினருரிமை கட்டணம் அல்லது பதிவுபெறும் கட்டணம் எதுவும் இல்லை.
  • உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வழங்குனரிடம் அனைத்து கிளப் மெட்டீரியல்களை உள்நாட்டில் தயார் செய்யலாம்/அச்சிடலாம். தொலைதூர இடத்திலிருந்து அவற்றை ஆர்டர் செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஷிப்பிங் கட்டணங்களைச் செலுத்த தேவையில்லை.
  • கிளப் ஒன்றைத் தொடங்க 8 உறுப்பினர்கள் மட்டுமே தேவை.
  • எந்தவித தாள் வேலையும் இல்லாமல், ஒரே நாளில் கிளப்பை சாசனம் செய்யலாம் - ஆன்லைன் படிவத்தை நிரப்பினால் போதும்.
  • எங்கள் நிறுவன மற்றும் போட்டி அமைப்பு அரசியல் மற்றும் நிர்வாக எல்லைகளுடன் பொருந்துகிறது. எனவே, நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், நீங்கள் "ஸ்பெயினின் சிறந்த கல்வி பேச்சாளர்" (உதாரணமாக), "பிரிவு 43, ​​அத்தியாயம் 93 இன் சிறந்த கல்வி பேச்சாளரோ" அல்லது சில ஏதேனும் நிறுவன அமைப்பின் பேச்சாளரோ அல்ல. முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது தொழில்முறை விண்ணப்பச் சாரத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
  • உறுப்பினர்கள் எதுவும் செலுத்தாததால், உறுப்பினர் வளர்ச்சியில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று (இருக்கும் உறுப்பினர்களை புறக்கணித்துவிட்டு) அல்லது கல்வித் திட்டத்தை உறுப்பினர்கள் விரைந்து முடிக்க வேண்டுமென்று நாங்கள் கிளப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. எங்கள் வளர்ச்சி முற்றிலும் இயற்கையானது, மேலும் ஒவ்வொரு கிளப்பையும் தனித்தனியாக கவனித்துக்கொள்கிறோம்.
  • எங்களுடன் இணைந்து பணியாற்ற அனுமதித்து, Agora உடைய அனைத்து சலுகைகளையும் வழங்கி, அதே நேரத்தில் அவர்களின் அடையாளத்தையும் பாதுகாத்து, நாங்கள் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுடனும் கூட்டாளிகளாக உள்ளோம்.
  • கிளப்புகள் சேகரிக்கும் அனைத்து நிதிகளையும், அவர்களே வைத்துக்கொண்டு தங்கள் சொந்த செயல்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு நாங்கள் அவர்களை அனுமதிக்கிறோம்.
  • நிதி சரியாக பயன்படுத்தப்படுவதையும்,  செலவுகள் அனைவராலும் குறுக்கு தணிக்கை செய்யப்படுவதையும் உறுதி செய்ய அனைத்து மட்டங்களிலும் நிதி வெளிப்படைத்தன்மைக்கான கடுமையான விதிகளை நாங்கள் அமல்படுத்துகிறோம்.
  • நாங்கள் சட்டப்பூர்வமாக பொது நல அறக்கட்டளையாக பதிவு செய்துள்ளோம், இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தீவிரமாக இயங்கி வரும் தொண்டு நிறுவனம். கிளப் செயல்பாடுகள் மற்றும் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ள முறையில் முறையான ஆதரவை நாங்கள் வழங்குவோம் என்பதே இதன் பொருள்.
  • நாங்கள் உறுப்பினர்களை தணிக்கை செய்யவோ அல்லது அவர்கள் நிறுவனத்தை பகிரங்கமாக விமர்சிக்க தடை விதிக்கவோ இல்லை.

தொழில்நுட்பம் ரீதியாக

  • எங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் உலகளாவிய அளவில் நிகழ்நேர உரையாடல் தளத்தை நாங்கள் வழங்குகிறோம், இது மூன்றாம் தரப்பு தளங்கள் அல்லது நெட்வொர்க்குகளில் பதிவு செய்யாமல் உறுப்பினர்கள் தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கிறது.
  • நாங்கள் உலகளாவிய அளவில் மன்ற அமைப்பை பணிக்குழுக்களுடன் வழங்குகிறோம், அதில் நாங்கள் கருத்துக்களை பெற்று, எங்களுடைய விதிமுறை புத்தகங்கள், கல்விப் மெட்டீரியல்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் ஒத்துழைப்புடன் உருவாக்குகிறோம்.
  • எங்களது கல்வி மெட்டீரியல்கள் விக்கியில் தொகுக்கத்து வழங்கப்பட்டுள்ளன, அதில் யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம், அதனை விரிவுப்படுத்தலாம் மற்றும் மொழிபெயர்க்கலாம்.
  • எங்கள் சர்வர்கள் மற்றும் உள்கட்டமைப்பு அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (குறிப்பாக ஜெர்மனியில்) உள்ளன, அதாவது உங்கள் தரவு கடுமையான தனியுரிமை தரநிலைகளால் (EU GDPR) பாதுகாக்கப்படுகின்றன.
  • இன்னும் பற்பல வரவிருக்கின்றன.