எப்போதும் விவாத மதிப்பீட்டாளரே அணியின் உறுப்பினர், நீதிபதி அல்லது பார்வையாளர்களில் இருக்கும் ஒரு நபருக்கு பேசுவதற்கான வாய்ப்பை அளிப்பார். பேச்சாளர் ஆரம்பித்தவுடன், விவாத நடுநிலையாளர் அல்லது நேரம் கண்காணிப்பாளர் உத்தரவிடும்போது மட்டுமே அவர் தனது மேடையை விட்டுக்கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்.
சொற்பொழிவாற்றும்போது எழுந்து நிற்க வேண்டும் - அவர்கள் தயார் செய்த சொற்பொழிவுகளை வழங்கினாலும், POI / POA போன்றவற்றை வழங்கினாலும் அல்லது கேள்வி கேட்டாலும் கூட எழுந்து நிற்க வேண்டும். நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்க, அவர்கள் அந்த இடத்தின் மையப்பகுதிக்கு நடந்துச் செல்வதை விட அவர்களின் இடத்தில் இருந்தே பேசுவது பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள், மூன்றாம் நபர் மேற்கோள்கள் அல்லது பிற தரப்பு வாதங்களைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து, முன் எழுதப்பட்ட சொற்பொழிவுகளை வாசிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
விவாதத்தைத் தனிப்பயனாக்குவதைத் தவிர்க்க, அனைத்து பேச்சாளர்களும் ("நீங்கள்" அல்லது "ஜான், அது தவறானது") என பேசுவதற்குப் பதிலாக மற்ற குழுக்களை மூன்றாவது நபராக ("மற்ற அணி", "இரண்டாம் அணியிலிருந்து பேசியவர்", "எங்களது எதிர் தரப்பினர்") குறிப்பிட வேண்டும். இருப்பினும், முறைப்பாடு தேவையில்லை.
தகவலின் புள்ளிகள் பெரும்பாலான விவாத பாணிகளில் நன்கு பரவலாக இருக்கும், இவை எதிர் வாதங்களை வழங்க மற்ற அணிகளின் உறுப்பினர்களாக இருக்கும் பேச்சாளரின் சுருக்கமான குறுக்கீடுகள் ஆகும்.
பேசும் அணியைத் தவிர மற்ற அணிகளின் உறுப்பினர்கள் மட்டுமே POI களைக் கோர முடியும். அவ்வாறு கோருவதற்கு, மற்ற அணியின் உறுப்பினர் கையை உயர்த்துவர். POI சொற்பொழிவாற்றிய பேச்சாளர் வழங்கப்பட்ட POI ஐ ஏற்கலாமா வேண்டாமா என்பதை தேர்வு செய்யலாம். முதல் வழக்கில், அவர் "ஆம்?" என்று சொல்லி, தற்காலிகமாக எதிர் தரப்புக்கு பேசுவதற்கான மேடையை வழங்குவார். இரண்டாவது வழக்கில், அவர் "இல்லை, நன்றி" என்று சொல்லலாம் அல்லது வேண்டுகோளை நிராகரித்து கையால் சைகை காட்டி, பேச்சை தொடரலாம்.
POI 15 வினாடிகளுக்கு மேல் நீடிக்காது.
வழக்கமாக, பெரும்பாலான விவாத அமைப்புகள் சொற்பொழிவின் "பாதுகாக்கப்பட்ட நேரத்தை" வரையறுக்கின்றன, இதன் போது POI களை மேற்கொள்ள முடியாது. நமது சுற்றுகளின் நீளத்தைக் கருத்தில் கொண்டு, இந்தப் பாதுகாக்கப்பட்ட நேரம் ஆனது சொற்பொழிவின் முதல் மற்றும் கடைசி 45 வினாடிகளாக இருக்கும்.
விவாத விதிகள் மீறப்பட்டதாக நம்பும் எந்தவொரு அணியின் உறுப்பினரும் ஒழுங்குமுறை குறித்த பாயிண்ட்டுகளை எழுப்பலாம், மேலும் விவாத விதிமீறல் கவனிக்கப்படும்போது இதை உடனடியாகச் செய்ய வேண்டும்.
ஒழுங்குமுறை குறித்த பாயிண்ட்டுகளை எழுப்புவதற்கான செயல்முறை பின்வருமாறு:
- POO எழுப்ப விரும்பும் விவாதி எழுந்து நின்று, "ஒழுங்குமுறை குறித்த பாயிண்ட்டுகள்" என்பார்.
- பேச்சாளர் பேசுவதை நிறுத்துவார்.
- POO உடைய விவாதிப்பவர் விவாத நடுநிலையாளரிடம் அவரது வழக்கை விளக்குகிறார். அப்போது, நேரம் கண்காணிப்பு நிறுத்தப்படும்.
- வழக்கைக் கேட்ட பிறகு, விவாத நடுநிலையாளர் ஒரு முடிவை எடுப்பார்.
பொதுவாக, ஒழுங்குமுறை குறித்த பாயிண்ட்டுகள்:
- பேச்சாளரை குறுக்கிடும்.
- விவாதத்திற்குரியவை அல்ல.
- திருத்தவோ மறுபரிசீலனை செய்யவோ முடியாது.
- விவாத மதிப்பீட்டாளரால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அத்தகைய முடிவு இறுதியானது.
ஒப்புதல் புள்ளிகளின் ஒருமித்த கருத்தை நோக்கி திசைமாற்றி விவாதங்களை கொண்டு செல்வது Agora விவாதங்களின் புதுமையான அம்சமாகும். POA இன் நோக்கம், வேறு ஒரு அணியால் முன்மொழியப்பட்ட ஒரு வாதத்தை இன்னொரு அணி ஏற்றுக்கொள்வதாகக் கூறுவதாகும். இந்த ஒப்புதலை பின்னர் திரும்பப் பெற முடியாது. POA ஐ எழுப்ப, அந்த அணியின் அனைத்து உறுப்பினர்களும் அவ்வாறு செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும் (ஒருமித்த கருத்து இருக்க வேண்டும்).
"ஆம், ஆனால் ..." என உடன்பாட்டைக் காட்டிலும் கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும் சூழல்களைத் தடுக்க, POA என்பதில் எதிரணி அணி ஆரம்பத்தில் கூறிய வாதத்தை போலவே மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதை சிதைக்கவோ, அலங்கரிக்கவோ, நுணுக்கமாக்கவோ அல்லது எந்த வகையிலும் மேலும் விரிவாக்கவோ முடியாது. உதாரணமாக, "உயர் கல்விக்கு மானியம் வழங்கப்படுவதில் மிதமான மோசடி நடக்கிறது என்ற நிலைப்பாட்டை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் ...." என்று அணியானது கூறக்கூடாது. எதிர் அணியினர் கூறிய விஷயத்தை அது கூறியது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது அதில் POA இருக்க முடியாது.
ஒப்புதல் புள்ளிக்கான செயல்முறை பின்வருமாறு:
- அவர்கள் சொற்பொழிவாற்றும்போது, POA ஐ முன்மொழியும் அணியின் ஒரு உறுப்பினர், "எங்கள் அணி XXXX அணியின் நிலைப்பாடு/அறிக்கையான _ என்பதை எங்கள் அணி ஒப்புக்கொள்கிறது", என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
- அந்த அறிக்கையானது மற்ற அணி செய்த வாதம் அல்லது நிலைப்பாட்டு அறிக்கைக்கு துல்லியமாக இருக்க வேண்டும்.
- இலக்கு அணி "ஏற்றுக்கொள்ளப்பட்டது" (மேலே கூறியது போல எதிர் அணியின் அறிக்கை உண்மையில் அவர்களின் நிலைப்பாட்டை பிரதிபலித்தது என்றால்) அல்லது "நிராகரிக்கப்பட்டது" (இல்லையென்றால்) என்று பதிலளிக்கலாம். பிந்தையது என்றால், சிறிய விளக்கம் சேர்க்கப்பட வேண்டியிருக்கலாம்.
அணிகளின் இணைவு என்பது ஒருமித்த கருத்தை அடைய முயற்சிக்கும் Agora Speakers விவாதங்களின் தனித்துவமான பண்பாகும்.
விவாதத்தின் எந்த நேரத்திலும், இரண்டு அணிகள் ஒரு உடன்பாட்டை எட்டி, ஒரு அணியாக ஒன்றிணைந்து, பொதுவான ஒருமித்த நிலைப்பாட்டை வாதம் செய்யலாம். மேலே உள்ள எடுத்துக்காட்டில், என் மற்றும் டி அணிகள் ஒப்புக்கொண்டு ஒன்றிணைந்து, "மக்கள் தங்கள் சொந்த கல்விக்கு பணம் செலுத்த வேண்டும், மற்றும் அவர்களின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே இருந்தால் அந்தத் தொகை சிம்பாலிக்காக இருக்க வேண்டும்" என்ற பொதுவான நிலைப்பாட்டை வாதம் செய்யலாம்:
இரண்டு அணிகள் தங்கள் நிலைப்பாட்டை இணைத்து ஒரு அணியாக மாறும்போது, அதன் விளைவாக இணைந்த அணியின் பொருத்தமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் நியாயத்தையும் அனைத்து அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியையும் பராமரிக்க அணியிலிருந்து வெளியேற வேண்டும்.
இணைவதற்கு இரு அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருமித்த உடன்பாடு தேவை மற்றும் அவை பின்வருமாறு:
- முன்மொழியப்பட்ட அணி மற்றொரு அணிக்கு ஒருமித்த நிலைப்பாட்டை வழங்க முடிவு செய்கிறது. முன்மொழியப்பட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டின் வார்த்தைகளுக்கு உடன்பட வேண்டும். மேலும், அந்த ஆஃபர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வெளியேறும் அணி உறுப்பினர்களை முன்மொழியும் அணி முன்கூட்டியே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
- முன்மொழியும் அணியின் பேசும் தருணத்தின்போது, பேச்சாளர் இலக்கு அணியை அறிமுகப்படுத்தி, "XXXX அணிக்கு பின்வரும் ஒருமித்த நிலையை நாங்கள் வழங்க விரும்புகிறோம்: ", என்றவாறு ஏதாவது கூறலாம். எந்த ஃபார்முலா தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இது நிலைப்பாடுகளை இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும், அந்த முன்மொழிவு தெளிவாக சொல்லப்பட வேண்டும், மேலும் அது ஒரு குறிப்பிட்ட இலக்கு அணிக்கு அனுப்பப்பட வேண்டும்.
- ஆஃபர் வழங்கப்பட்ட பிறகு, பேச்சாளர் தனது வழக்கமான சொற்பொழிவைத் தொடர்வார்.
- முன்மொழியப்பட்ட அணியின் முறை முடிந்ததும், இலக்கு அணி முடிவு செய்வதற்கு விவாதத்தின் நடுநிலையாளர் 1 நிமிட இடைவேளை வழங்குவார். இடைவேளையின்போது, இலக்கு அணி விவாதித்து ஒரு முடிவை எடுக்கும், அந்த அணியால் தெரிவிக்கப்பட்ட ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்க அல்லது நிராகரிக்க மட்டுமே முடியும். ஏற்றுக்கொள்வது ஒருமனதாக இருக்க வேண்டும், மேலும் இணைந்த அணியில் சமநிலையை பராமரிக்க ஏற்றுக்கொள்ளும் அணியின் எந்த அணி உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
- இடைவேளைக்குப் பிறகு, யாருடைய முறை பேசுவது என்பதைப் பொருட்படுத்தாமல், மதிப்பீட்டாளர் இலக்கு அணியை குறிப்பிட்டு, அவர்கள் தெரிவிக்கப்பட்ட நிலைப்பாட்டை ஏற்கிறாரா அல்லது நிராகரிக்கிறாரா என்று கேட்பார். இலக்கு அணி ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பதன் மூலம் மட்டுமே பதிலளிக்க முடியும்; இந்தக் கட்டத்தில் ஏதேனும் வாதங்கள் அல்லது சொற்பொழிவுகள் அனுமதிக்கப்படாது.
- இலக்கு அணி நிராகரித்தால், விவாதம் சாதாரணமாகத் தொடரும், நடுநிலையாளர் அடுத்த அணிக்கு மேடையை வழங்குவார்.
- இலக்கு அணி ஒப்புக்கொண்டால், முன் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி உறுப்பினர்கள் வெளியேறுவார்கள், மேலும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இணைந்த அணி தொடரும். இந்தச் சுற்றில் இந்தப் புதிய அணி பேச முடியாது, ஏனெனில் இது ஏற்கனவே புள்ளி 3 இல் அதன் முறையை பயன்படுத்தியதாக கருதப்படும்.
இணைந்த அணிகள் மீண்டும் பிரிவது அனுமதிக்கப்படாது.
இணைந்த அணிகள் அது இணைந்த கட்டத்திலிருந்து ஒரே அணியாகக் கருதப்படும், ஒரு சாதாரண சொற்பொழிவு மற்றும் குறுக்கு கேள்வி போன்ற சுற்றை எதிர்கொள்ளும், சாதாரண அணிக்கு உள்ள நிலையான நேரம் இதற்கும் பொருந்தும்.
இணைவுக்கு பிறகு வேறு ஏதேனும் அணி இல்லாவிட்டால், விவாதம் தானாகவே "ஒருமித்த கருத்து" உடன் முடிவடையும்.
அது ஒரு விவாதப் போட்டியாக இருந்தால், அனைத்து அணிகளும் இறுதியாக இணைந்து, கடைசியாக "ஒருமித்த கருத்துடனான வெற்றியாளர்கள்" என்று அறிவிக்கப்படும். இந்த மாதிரியான முடிவுகளை போட்டிகள் ஊக்குவிக்க வேண்டும்.
ஏதேனும் விதமான தனிப்பட்ட விருதுகள் இருந்தால், அணி சமநிலையை பராமரிக்க இணைவின் போது அவர்கள் விவாதத்தில் இருந்து வெளியேறியவர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், இணைக்கப்பட்ட அணிகளின் அனைத்து ஆரம்பக்கட்ட உறுப்பினர்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான விவாதம் மற்றும் கிளப் சூழலுக்கு ஏதேனும் விதமான அவமதிப்புகள், தனிப்பட்ட வாதங்கள், அவமரியாதை பேச்சு அல்லது தொனியை உயர்த்தி பேசுவது அல்லது கத்துவது போன்றவற்றைத் தடுக்க வேண்டியது அவசியம். இத்தகைய நடத்தை எதுவும் அனுமதிக்கப்படாது, இத்தகைய நடவடிக்கைகளுக்காக அணி உறுப்பினர் அல்லது அணியின் தகுதி நீக்கம் செய்யப்படலாம். அவமதிப்புகள் சொற்களற்றதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டாக, சைகைகளின் வடிவத்தில் இருக்கலாம்), அவற்றுக்கு இன்னும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
தனிப்பட்ட வாதம் என்பது எதிர் அணியில் உள்ள ஒரு நபரின் பண்புகள் அல்லது தன்மைகளை இலக்கு வைத்து பேசும் அல்லது விவாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பேசும் ஏதேனும் வாதம் ஆகும், இவற்றுள் அடங்குவன (ஆனால் இவை மட்டுமல்ல):
- வயது, பாலினம், பாலியல் நோக்குநிலை அல்லது அடையாளம், தேசியம், இனம், நிறம், மதம், சித்தாந்தம், மருத்துவ நிலைமைகள் குறித்த விவாதங்கள்.
- கல்வி அல்லது தொழில்முறை ரீதியான பின்னணி குறித்த விவாதங்கள்.
- வாழ்க்கை முறை, விருப்பத்தேர்வுகள், பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் குறித்த விவாதங்கள்.
- விவாதத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் அல்லது அறிக்கைகள். (விவாதங்கள் தன்னிறைவு பெற்றவை, மற்றும் விவாதத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட வாதங்களை மட்டுமே எதிர்க்க முடியும்).
மேற்கூறிய அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மக்களை பொதுமைப்படுத்தி பேசும் வாதங்களும் தனிப்பட்ட வாதங்கள்தான், குறிப்பிடப்பட்டவர்கள் அந்த அணியைச் சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் கூட. உதாரணமாக, "அனைத்து ஸ்பானியர்களும் சோம்பேறிகள்" என்பதும் நபர் சார்ந்த வாதமே, விவாதத்தில் யாரும் ஸ்பெயினிலிருந்து வரவில்லை என்றாலும் கூட. எவ்வாறாயினும், மக்கள் குழுக்கள் தொடர்பான புறநிலை தீர்ப்பு அல்லாத ஆராய்ச்சி ஆதாரங்களை வழங்க அனுமதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. உதாரணமாக, "பிரான்சில் உள்ளவர்களை போல வாரத்தில் 37.4 மணிநேரம் வேலை செய்வதற்கு மாறாக, எல்போனியாவில் உள்ளவர்கள் வாரத்திற்கு 12.6 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்" என்று கூறுவது அனுமதிக்கப்படும் கூற்றாகும்.
தனிநபர் வாதத்தைக் கேட்டவுடன் விவாத நடுநிலையாளர் உடனடியாக செயல்பட வேண்டும். அவ்வாறு நடுநிலையாளர் செயல்படாவிடில், யாரைப்பற்றி தனிப்பட்ட முறையில் வாதம் செய்யப்படுகிறதோ அவர் தனது கையை உயர்த்தி, "இது தனிநபர் வாதம்" என்று கூறி, நடுநிலையாளர் செயல்படும்படி கட்டாயப்படுத்தலாம், அதற்கு நடுநிலையாளர் "உடன்படவில்லை" அல்லது "ஒப்புக்கொள்கிறேன்" என்று பதிலளிக்க வேண்டும். மதிப்பீட்டாளர் தனிநபர் வாதம் பயன்படுத்தப்பட்டதாக நம்பினால், அவர் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
- எதிர்காலத்தில் இதே போன்ற வாதங்களை தவிர்க்க அணி உறுப்பினரை தனிநபர் வாதங்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு எச்சரிக்கவும்.
- பேச்சாளர் பேசுவதை நிறுத்தி, அவ்வாறு புண்படுத்தி பேசிய அணியை ஒரு சுற்றில் பேசக்கூடிய வாய்ப்பை இழக்கச் செய்யலாம்.
- புண்படுத்தி பேசிய அணி உறுப்பினரை தகுதி நீக்கம் செய்து அவரை புண்படுத்தி பேசிய அணியில் இருந்து நீக்கலாம்.
- அணியின் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களில் ஒருவர் அந்த காரணத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் தனிப்பட்ட வாதங்களைப் பயன்படுத்தினால் அந்த அணியைத் தகுதி நீக்கம் செய்யலாம்.
- அது ஒரு தனிநபர் வாத போட்டியாக மாறியிருப்பதைப் பார்த்தால் அந்த விவாதத்தையே நிறுத்தலாம்.
வேறொரு விதமான லேசான கடுமையான ஆனால் சமமாக ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையாவது:
- போலியான POI கள் அல்லது போலி POA களுடன் மற்ற பேச்சாளர்களை தொடர்ந்து குறுக்கிடுவது.
- ஏதாவது பேசி மற்ற அணியினரின் நேரத்தை "வீணாக்குவது", குறிப்பாக குறுக்கு கேள்வி சுற்றுகளில் வீணாக்குவது.
- தொடர்ந்து அதிக நேரம் எடுப்பது.
- விதிகளை மீறுவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது.
ஆதாரங்கள் என்பது பேச்சாளரின் வாதத்தை ஆதரிக்கும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள், தரவு, மேற்கோள்கள் போன்றவை ஆகும்.
ஆதாரங்களுக்கு பின்வரும் விதிகள் பொருந்தும்:
- ஒவ்வொரு ஆதாரமும் பேச்சாளரின் சொந்தக் கருத்திலிருந்தும் மற்ற ஆதாரங்களிலிருந்தும் தெளிவாக தனித்து இருக்க வேண்டும்..
- அனைத்து ஆதாரங்களும் அடையாளம் காணப்பட வேண்டும், ஆதாரமாக இருக்க வேண்டும் மற்றும் சுயாதீனமாக சரிபார்க்கப்பட கூடியதாக இருக்க வேண்டும். "ஆராய்ச்சி காட்டுகிறது...." என்பது போன்ற அறிக்கைகளாக இது "சுருக்கமான அல்லது தெளிவற்ற ஆதாரங்களை" வெளிப்படையாக அனுமதிக்காது. அதற்கு பதிலாக, இத்தகைய அறிக்கைகள் "மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியானது கூறுவதாவது..." என மறுசீரமைக்கப்பட வேண்டும்.
- சான்றுகள் சிதைக்கப்படவோ, தவறாக மேற்கோள் காட்டப்படவோ, பகுதியளவு மேற்கோள் காட்டப்படவோ அல்லது சூழலுக்கு வெளியே மேற்கோள் காட்டப்படவோ கூடாது. இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாததாக கருதப்படுகிறது.
- பயன்படுத்தப்படும் அனைத்து ஆதாரங்களும் மற்ற அணிகளுக்கும், பார்வையாளர்களுக்கும், நீதிபதிகளுக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும், இதனால் அவர்களில் யாராவது பேசும் போது அதைப் பயன்படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு விஷயத்தை சொல்ல அச்சிடப்பட்ட விளக்கப்படத்தைப் பயன்படுத்தினால், அச்சிடப்பட்ட விளக்கப்படம் அறையின் உள்ளே ஒரு இடத்தில் வைக்கப்பட வேண்டும், அப்போதுதான் மற்றவர்களும் அதைப் பயன்படுத்த எடுத்துக்கொள்ளலாம்.
- வேறு ஏதேனும் அணி அல்லது நீதிபதிகளின் வேண்டுகோளின் பேரில், பயன்படுத்தப்படும் ஆதாரங்கள் விரிவான வடிவத்திலும் எழுத்துப்பூர்வமாகவும் வழங்கப்பட வேண்டும். ஆதாரம் மிக நீளமாக இருந்தால், அதில் குறைந்தது ஒரு பக்கமாவது கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு ஆதாரமும் குறைந்தது பின்வரும் தகவலை அளிக்க வேண்டும்:
- ஆசிரியரின் பெயர்
- கையில் உள்ள தலைப்புக்கு பொருத்தமான ஆசிரியரின் தகுதிகள்
- தேதி மற்றும் பக்க எண் உட்பட நூலின் முழுமையான ஆதார தகவல்
- இணைய ஆதாரங்கள் என்றால், முழு URL மற்றும் அணுகல் தேதி
- விவாதத்தின் போது அணி உறுப்பினர்கள் எந்த வெளிப்புற பயிற்சியையும் பெற கூடாது.
- பார்வையாளர்கள் அல்லது பிற குழு உறுப்பினர்களால் பேச்சாளர்களுக்கு குறுக்கீடு ஏற்படக்கூடாது மற்றும் இவை விவாத மதிப்பீட்டாளரால் கையாளப்பட வேண்டும். ஆரவாரம் அனுமதிக்கப்படுவதில்லை.