பதிவு தகவல்

Agora Speakers International ஒரு இலாப நோக்கமற்ற பொது நல அறக்கட்டளையாக, பல்கேரிய வர்த்தகம் மற்றும் இலாப நோக்கற்ற பதிவேட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது (вскиовски регистър регистър на ЮЛНЦ,), இந்த அறக்கட்டளையின் பதிவு எண் (EIK): 205228771.

அறக்கட்டளையின் தற்போதைய நிலையை மேற்கண்ட எண்ணைப் பயன்படுத்தி பின்வரும் இடத்தில் சரிபார்க்கலாம்: https://portal.registryagency.bg/CR/reports/VerificationPersonOrg.

அறக்கட்டளையின் தலைமையகம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் உள்ளது

 

இலக்குகள்

Agora Speakers International ஃபவுண்டேஷன் உடைய பதிவுசெய்யப்பட்ட இலக்குகளாவன:

  • உள்ளூர் மட்டத்தில் ஃபவுண்டேஷன் உடைய குறிக்கோள்களைப் பகிரவும், வடிவமைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் உள்ளூர் கிளப்புகளின் சர்வதேச நெட்வொர்க்கை உருவாக்கி வலுப்படுத்துவது.
  • மக்களின் முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை, குறிப்பாக இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, சொற்பொழிவாற்றுவது, பொது தகவல் தொடர்பு, தலைமைத்துவம், விவாதம், நூதன சிந்தனை மற்றும் ஆக்கபூர்வமான கருத்து ஆகிய துறைகளில் ஊக்குவிப்பது.
  • சமூகம் மற்றும் சமூக ரீதியான பயனுள்ள செயல்திட்டங்கள், மேலும் இந்தப் பகுதிகள் குறித்து தொழில் முனைவோர் மீதான ஆர்வத்தைத் தூண்டுவது.
  • பொது நல செயல்திட்டங்களை வடிவமைக்கவும், திட்டமிடவும், நிர்வகிக்கவும் தேவையான திறமைகளை வளர்க்க உதவுவது.
  • பன்முக கலாச்சார பரிமாற்றம் மற்றும் முறைசாரா நெட்வொர்க்குகளின் உருவாக்கம், மேலும் அதன் வெவ்வேறு உறுப்பினர் சமூகங்களுக்கிடையிலான இணைப்புகளை ஊக்குவிப்பது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அறிவார்ந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிப்பது.
  • இளைஞர்கள் மத்தியில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் பிற புதுமையான செயல்பாடுகளைத் தூண்டுவது.
  • மக்களின் சூழ்ச்சியான செயல்பாடு மற்றும் பாகுபாடு பார்க்கும் ஸ்டீரியோடைப்பிங்கிற்கு எதிரான முக்கிய பாதுகாப்பு கருவியாக திகழும் நூதன சிந்தனை திறமைகளை வளர்ப்பதை ஊக்குவிப்பது.
  • ஒத்துழைப்பு, விவாதம் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனை மூலம் சகிப்புத்தன்மையையும் முரண்பாடுகளுக்கான அமைதியான தீர்வையும் ஊக்குவிப்பது.

 

செயல்பாடுகள்

Agora Speakers International ஃபவுண்டேஷன் அதன் இலக்குகளை அடைவதற்கு பின்வரும் பதிவு செய்யப்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறது:

  • ஃபவுண்டேஷன் உடைய பொதுவான மற்றும் குறிப்பிட்ட இலக்குகள் குறித்து கருத்தரங்குகள், மாநாடுகள், பாடப்பயிற்சிகள் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச நிகச்சிகளை ஏற்பாடு செய்வது மற்றும் பங்கேற்பது.
  • மாணவர்களின் தலைமைத்துவம் மற்றும் பொது தொடர்பு திறமைகளின் வளர்ச்சியுடன் தொடர்புடைய பாடப்பயிற்சிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் பிற பாடத்திட்டம் அல்லாத பள்ளி செயல்பாடுகளை ஏற்பாடு செய்வது.
  • பயிற்சித் திட்டங்களை வடிவமைப்பது, ஏற்பாடு செய்வது மற்றும் செயல்படுத்துவது.
  • எங்களது இலக்குகளுடன் தொடர்புடைய மெட்டீரியல்களை உருவாக்குவது மற்றும் வெளியிடுவது (அச்சு மற்றும் மின்னணு வடிவங்களில்).
  • ஃபவுண்டேஷன் உடைய இலக்குகளை அடைய தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள மற்ற நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் மக்களுடன் ஒத்துழைப்போடு செயல்படுதல்.
  • போட்டிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்வது.
  • ஃபவுண்டேஷனுக்குள் கூட்டாண்மை மற்றும் இணைப்பில் இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது.
  • ஃபவுண்டேஷன் இலக்குகளை அடைய உதவக்கூடிய மக்களின் உதவி மற்றும் பராமரிப்பிற்காக நிதி சேகரிப்பது.
  • தொண்டு பணிகள்
  • நிதி திரட்டும் நடவடிக்கைகள்

 

தொடர்பு தகவல்

[email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். இது மிக விரைவான வழி, நாங்கள் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு வணிக நாட்களில் உங்களுக்கு பதிலளிப்போம்.

பின்வரும் முகவரிக்கு தபால் அஞ்சல் மூலமும் அனுப்பலாம்:

Agora Speakers International
காலே லகுனா டி ஆன்டெலா 9
28980 பார்லா, மாட்ரிட்
ஸ்பெயின்

தபால் மூலமான அஞ்சலுக்கு பதிலளிக்க 15 வணிக நாட்கள் வரை ஆகலாம் என்பதை நினைவில் கொள்க. தற்போது, எங்களால் பார்வையாளர்களுக்கு சேவை செய்ய இயலாது.

நாங்கள் தொலைபேசி சேவையை வழங்குவதில்லை.

நன்கொடைகள்

பின்வரும் வங்கி கணக்கிற்கு நீங்கள் நன்கொடைகள் அனுப்பலாம்:

Agora Speakers International ஃபவுண்டேஷன்

IBAN: BG24BUIN95611000609882

BIC BUINBGSF

 

Paypal வழியாக அனுப்புவதற்கு:

{HTML()}

{HTML}