Agora Speakers International ஃபவுண்டேஷன் என்பது ஐரோப்பிய மதச்சார்பற்ற கல்வி ரீதியான தொண்டு நிறுவனமாகும், சிறந்த உலகத்தை தீவிரமாக உருவாக்குகிற வகையில் மக்களை திறன்மிக்க தகவல்தொடர்பாளர்களாகவும், நம்பிக்கை மிகுந்த தலைவர்களாகவும் இது ஆக்குகிறது.
தலைமைத்துவம், பொது சொற்பொழிவு, நூதன சிந்தனை மற்றும் விவாத திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் சிறப்பு கல்வித் திட்டத்தை நாங்கள் வழங்குகிறோம்.
எங்களது பயிற்சி முறையில் ஆசிரியர்கள் அல்லது வகுப்புகள் இடம்பெறுவதில்லை. கற்றுக்கொள்ளவும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், எங்கள் உறுப்பினர்கள் எங்களது ஆன்லைன் பயிற்சி மெட்டீரியல்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளூர் Agora கிளப்புகளில் இணைந்து, அங்கு அவர்கள் வழக்கமான முறையில் நட்பு மற்றும் ஆதரவான சூழலில் சந்தித்து, பயிற்சி செய்து, சக உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் தங்கள் சமூகங்களில் நீடித்த விளைவை ஏற்படுத்தும் நிஜ உலக செயல்திட்டங்களில் பங்கேற்று, அதனை வழிநடத்துகிறார்கள்.
2016 இல் நிறுவப்பட்டு, நாங்கள் தற்போது உலகெங்கிலும் உள்ள 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 150 க்கும் மேற்பட்ட கிளப்புகள் வாயிலாக செயல்பட்டு வருகிறோம்.
ஒரு உண்மையான தொண்டு நிறுவனமாக, அனைவருக்கும் திறந்திருக்கும் கிளப்புகளுக்கு எங்கள் செயல்பாடுகள் மற்றும் கல்வி மெட்டீரியல்கள் முற்றிலும் இலவசம், எந்தவிதமான பதிவோ, உறுப்பினர் உரிமையோ, சாசன செலவுகளோ, எதனையும் கட்டாயமாக வாங்க வேண்டிய அவசியமோ இல்லை. உள்ளூரில் கிளப் தொடங்குவதும் இலவசமே.