பொதுவாக, பின்வரும் விலக்குகளுடன், நீங்கள் விரும்புகிற எந்த வகையிலும் உங்கள் கிளப்பிற்கு பெயர் வைக்கலாம்:
- Latin-1 (ISO 8859-1) எழுத்துக்குறி தொகுப்பைப் பயன்படுத்தி பெயர் எழுதப்பட வேண்டும்.
- உங்கள் மாநிலத்தில் நீங்கள் வைக்கும் பெயர் தனித்துவமாக இருக்க வேண்டும். பெயரானது புவியியல் பகுதியைக் குறிக்கிறது என்றால் (நகரம் போன்றவை), அது அந்த நாட்டிற்குள் தனித்துவமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நகரத்திற்குள் சந்திப்புகளை நேரடியாக நடத்தும் கிளப்புகள் மட்டுமே கிளப் பெயரின் ஒரு பகுதியாக அந்த நகரத்தின் பெயரை சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் கிளப் பாரிஸில் சந்தித்தால், "மாட்ரிட் ஸ்பீக்கர்ஸ்" என்று உங்கள் கிளப்பிற்கு பெயர் வைக்க முடியாது.
- பொது நலன் மற்றும் கார்ப்பரேட் கிளப்புகளின் பெயரில் அது எந்த நிறுவனத்தைச் சார்ந்து உள்ளது என்பதோ அல்லது அதன் குறிப்போ இடம்பெற வேண்டும்.
- IBM பாரிஸின் அட்வான்ஸ்ட் ஸ்பீக்கர்ஸ்
- 114 ஸ்கூல் Agora Speakers
- பாரிஸின் அட்வான்ஸ்ட் ஸ்பீக்கர்ஸ்
- பெயரில் பதிப்புரிமை பெற்ற சொற்கள் இடம்பெறக் கூடாது, அது உங்கள் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட கார்ப்பரேட் கிளப் என்றால் தவிர. பதிப்புரிமை பெற்ற சொல் என்பது நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சொல், அதைப் பயன்படுத்த நிர்வாகத்தால் உங்களுக்கு வெளிப்படையான அனுமதி உள்ளது. உதாரணமாக, IBM இடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி இல்லாவிட்டால் உங்கள் கிளப்பிற்கு "IBM வாஷிங்டன் ஸ்பீக்கர்கள்" என்று பெயரிடக்கூடாது.
- பெயரானது ஏதேனும் முறையில் முழு நிறுவனத்தின் பிரதிநிதித்துவம் அல்லது Agora Speakers International உடைய அதிகாரப்பூர்வ கிளை என்பதைக் குறிக்கக்கூடாது. உதாரணமாக, பின்வரும் பெயர்கள் அனுமதிக்கப்படாது:
- Agora Speakers சென்ட்ரல்
- Agora Speakers ஹெட்குவார்ட்டர்ஸ்
- Agora Leadership இன்ஸ்டிட்டியூட்
- Agora ஜெர்மன் ஸ்பீக்கர்ஸ்
- Agora Speakers International பாரிஸ்
- அஃபிஷியல் Agora கிளப் பாரிஸ்
- அதே காரணத்திற்காக, பெயர்களில் ஒரு நகரத்தை விட பெரிய புவியியல் பகுதிகளின் பெயர்கள் (எ.கா., "பிரான்ஸ்", அல்லது "ஐரோப்பா" அல்லது "சர்வதேசம்") இடம்பெறக்கூடாது. எவ்வாறாயினும், உங்கள் நகரத்தில் அதே பெயரில் வேறு எந்த கிளப்பும் இல்லாத வரை அந்த கிளப் செயல்படும் நகரத்தின் பெயரை நீங்கள் கிளப்பின் பெயரில் பயன்படுத்தலாம்.
- Agora Speakers பிரான்ஸ்
- Agora Speakers ஐரோப்பா
- ஸ்டூடண்ட்ஸ் Agora Speakers International
- அட்வான்ஸ்ட் ஸ்பீக்கர்ஸ் இன்டர்நெஷனல்
- அட்வான்ஸ்ட் ஸ்பீக்கர்ஸ் பிரான்ஸ்
- குளோப்டுரோட்டர்ஸ் இன்டர்நேஷனல்
- Agora Speakers பாரிஸ்
- பெயரில் ஏதேனும் விதமான ஆக்ரோஷமான சொற்களோ அல்லது பிற குழுக்களில் இருக்கும் மக்களைத் தாக்கும் வகையிலான சொற்களோ இடம்பெறக் கூடாது.
- பெயரில் அவமதிப்பாக சொற்கள் இடம்பெறக்கூடாது, சங்கங்கள் மற்றும் நிறுவனங்களில் பெயர் வைப்பதற்கான உள்ளூர் சட்டத்திற்கு இணங்கி இருக்க வேண்டும்.
- கிளப்பில் நிகழும் செயல்பாடுகள் அல்லது அவற்றின் அங்கீகாரம் அல்லது சான்றழிப்பினை குறித்து பெயரானது தவறாக வழிநடத்தும் வகையில் இருக்கக்கூடாது. குறிப்பாக, கிளப்பானது அது ஒரு பள்ளி, பல்கலைக்கழகம் அல்லது இதே போன்ற கல்வி நிறுவனம் என்று குறிக்கும் வகையில் பெயரினை கொண்டிருக்கக் கூடாது. எவ்வாறாயினும், கிளப் அத்தகைய நிறுவனத்திற்கு சொந்தமானது என்றால், அதன் பெயரை சேர்ப்பது செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க.
- ஸ்கூல் ஆஃப் லீடர்ஷிப்
- பாரிஸ் அகாடமி ஆஃப் பப்ளிக் ஸ்பீக்கிங்
- Agora டிபேட் யூனிவர்சிட்டி
- ஹார்வர்ட் யூனிவர்சிட்டி Agora கிளப்
- பெயரில் அரசியல், மதம் அல்லது கருத்தியல் ரீதியான உலகக் கண்ணோட்டத்தின் அறிக்கைச்சொற்கள் இடம்பெறக் கூடாது (இது கிளப் அந்த வகையான உறுப்பினரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்பதைக் குறிக்கும், இது நடுநிலைக் கொள்கையை மீறுகிறது). உதாரணமாக, பின்வரும் கிளப் பெயர்கள் அனுமதிக்கப்படவில்லை:
- பிலீவ் இன் காட் கிளப்
- வொர்க்கர்ஸ் ரைட்ஸ் Agora கிளப்
- கிளைமேட் சேஞ்ச் டெனியர்ஸ் கிளப்
- ரிபப்லிக்கன் ஸ்பீக்கர்ஸ்
- லெஃப்ட்-விங் ஸ்பீக்கர்ஸ்
- "Agora" என்ற வார்த்தை உங்கள் கிளப் பெயரில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பின்வருபவை அனைத்தும் அனுமதிக்கப்பட்ட பெயர்கள்:
- அட்வான்ஸ்ட் ஸ்பீக்கர்ஸ் ஆஃப் பாரிஸ்
- பாரிஸ் குளோப்டுரோட்டர்ஸ்
- பாரிஸ் ஸ்பிரிங் ஸ்பீக்கர்ஸ்
- சீன் ஸ்பீக்கர்ஸ்
- கிரீன் ஹில் ஒரேட்டர்ஸ்
- சயின்ஸ் திங்க்கர்ஸ்
- உங்கள் கிளப் பெயரில் Agora என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், அது எவ்வித வேறுபாடுகளும் இல்லாமல் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் பெயரை பன்மைப்படுத்தவோ அல்லது வேறு எந்த வகையிலும் மாற்றவோ கூடாது:
- Agora Speakers பாரிஸ்
- பாரிஸ் Agora Speakers
- Agora பாரிஸ்
- Agoras பாரிஸ்
- அகோரிடோஸ் டி மாட்ரிட்
- அகோரியன்ஸ் யுனைடெட்
ஏதேனும் சந்தேகம் இருந்தால், [email protected] என்கிற முகவரிக்கு அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
இங்கே குறிப்பிடப்படாத காரணங்களுக்காக, எப்போதாவது உங்கள் கிளப்பை பதிவு செய்யும்போது உங்களது கிளப் பெயரை நாங்கள் நிராகரிக்கலாம் என்பதை நினைவில் கொள்க, ஏனெனில் அப்பெயரானது ஃபவுண்டேஷனின் ஒட்டுமொத்த குறிக்கோள் மற்றும் பார்வைக்கு முரணாக இருக்கும் அல்லது நாம் முன்னறிவித்திராத வழிகளில் பொருத்தமற்றதாக இருக்கும்.