எங்களது நோக்கம்
Agora Speakers International என்பது உலகளாவிய அளவில் இருக்கும் இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும், இது மக்கள் தங்கள் பொது சொற்பொழிவாற்றும் திறமை, பிறரை தொடர்பு கொள்ளும் திறன், நூதன சிந்தனை, விவாதம் செய்வது மற்றும் தலைமைத்துவம் வகிக்கும் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
எங்களது நோக்கம் குறித்த அறிக்கை
தலைச்சிறந்த உலகத்தை தீவிரமாக உருவாக்கும் சிறந்த தகவல்தொடர்பாளராகவும் நம்பிக்கையுள்ள தலைவராகவும் நீங்கள் ஆவதற்கு Agora உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது
நுண் திறன்கள் குறித்த பயிற்சி
தலைமைத்துவத்தை மையமாகக் கொண்ட முக்கிய திறன்களை வளர்க்க நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம்:
Agora-வில் நீங்கள் கற்றுக் கொள்ளும் மற்றும் மேம்படுத்திக் கொள்ளும் சில திறன்கள் இதோ இங்கே:
நுண் திறன்களின் பயிற்சி |
---|
பழகும் அல்லது தொடர்பு கொள்ளும் திறன்கள் |
---|
பொது சொற்பொழிவாற்றுவது |
சொற்பொழிவு எழுதுவது |
மொழியின் வளம் |
அந்நிய மொழி |
வாய்மொழி அல்லாத தொடர்பு |
கதைசொல்வது |
விளக்கம் அல்லது முன்வைப்பது |
மேடை கவனம் |
காட்சி ரீதியான தொடர்பு |
மொழியின் தெளிவு |
|
|
|
|
|
தலைமைத்துவ திறன்கள் |
---|
ஆக்கபூர்வமான கருத்து |
வழிகாட்டுவது |
தொலைநோக்குப் பார்வை |
கவனம் மற்றும் ஈடுபாடு கொண்டிருப்பது |
இணங்கச் செய்வது |
சவாலை கையிலெடுப்பது |
நுண்ணறிவு |
பேச்சுவார்த்தை |
மற்றவர்களுக்கு ஊக்கமூட்டுவது |
பயிற்சி அளிப்பது |
|
|
|
|
|
நூதன சிந்தனை |
---|
விவாதம் |
வாதம் |
ஆராய்ச்சி |
அறிவார்ந்த நேர்மை |
பிரச்சனை குறித்த பகுப்பாய்வு |
அறிவியல் அறிவு |
ஆர்வம் |
தருக்க ரீதியான சிந்தனை |
படைப்பாற்றல் |
பகுத்தறிவு சார்ந்த நெகிழ்வுத்தன்மை |
|
|
|
|
|
தனிப்பட்ட திறன்கள் |
---|
பச்சாத்தாபம் |
செவியேற்பது |
சமூக அறிவு |
உணர்திறன் |
இரக்கம் |
உறவு மேலாண்மை |
மத்தியஸ்தம் |
உறவை ஏற்படுத்திக்கொள்வது |
|
|
|
|
|
|
|
தனிநபர் குணாதிசயங்கள் |
---|
தன்னம்பிக்கை |
சுய கட்டுப்பாடு |
சகிப்புத்தன்மை |
நம்பகத்தன்மை |
ஆக்கப்பூர்வமான சிந்தனை |
விடாமுயற்சி |
நம்பிக்கை |
நேர்மை |
நேரம் கடைபிடிப்பது |
நெகிழ்ச்சி |
தைரியம் |
தாழ்மை |
உறுதி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
நிர்வாக திறமைகள் |
---|
அட்டவணையிடுவது மற்றும் திட்டமிடுவது |
அதிகாரம் அளிப்பது |
இடர் மதிப்பீடு |
இடர் மேலாண்மை |
நிதி திரட்டுவது |
நேர நிர்வாகம் |
பட்ஜெட் நிர்வாகம் |
மார்க்கெட்டிங் |
பொது தொடர்புகள் |
இலக்கு அமைத்து, கண்காணிப்பது |
நிகழ்ச்சி ஏற்பாடு |
தொழில் முனையும் திறமை |
மூலோபாய சிந்தனை |
மாற்றம் குறித்த மேலாண்மை |
ஆட்சேர்ப்பது |
|
|
|
|
|
|
|
|
|
|
குழுப்பணி மற்றும் குழு உருவாக்கம் |
---|
வழிகாட்டுதல் |
எடுத்துரைத்தல் |
முரண்பாட்டுக்கான தீர்வு |
குழு ஒருங்கிணைப்பு |
பல கலாச்சார குழுக்கள் |
பன்முகத்தன்மை விழிப்புணர்வு |
நெட்வொர்க்கிங் |
கலாச்சாரத்திற்கு இடையேயான ஈடுபாடு |
ஈடுபாடு |
ஒன்றிப்போவது |
எனக்கு இதில் என்ன இருக்கிறது?
Agora Speakers International -இல் சேருவது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறை வாழ்க்கை என அனைத்து நிலைகளிலும் பல பயன்களைத் தரும்.
எங்களது ஃபவுண்டேஷனில் சேருவதனால் நீங்கள் பெறும் பயன்கள் அனைத்தும் இதோ இங்கே:
- நீங்கள் மிகவும் சிறப்பான முறையில் பிறரிடம் பழகுவதற்கு அல்லது பிறரை தொடர்பு கொள்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.
- உங்கள் சொற்பொழிவுகள் மேலோங்கி, தாக்கத்தை ஏற்படுத்த கதைகள், நிகழ்வுகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி போன்ற அனைத்து வகையான கருவிகளையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
- மக்களை நடவடிக்கையில் ஈடுபடச் செய்து, சிறிய மற்றும் பெரிய அணிகளை வழிநடத்த கற்றுக்கொள்வீர்கள்.
- உங்கள் தன்னம்பிக்கை, உங்கள் உறுதிப்பாடு மற்றும் உங்கள் ஆர்வங்களைப் பாதுகாக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
- தோல்விகளைச் சமாளித்து, சொந்தமாக சிந்திப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக் கொள்வீர்கள், மேலும் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்காதபோது அதனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
- நீங்கள் மிகவும் கூர்மையான நூதன சிந்தனையாளராக மாறுவீர்கள், மேலும் உங்கள் ஆர்வங்களுக்கு முரணான ஒரு முடிவுக்கு யாராவது உங்களை சூழ்ச்சி செய்ய முயற்சிக்கும்போது உங்களால் அதை எளிதாகக் கண்டறிய முடியும்.
- நீங்கள் அற்புதமான உலகளாவிய அளவில் இருக்கக்கூடிய, ஆதரவான மற்றும் மிக நெருக்கமான சமூகத்தின் உறுப்பினராகிவிடுவீர்கள்.
- தடையின்றி அதிகரிக்கும் சேவைகளின் தொகுப்பை நீங்கள் பெறுவீர்கள்.
- உங்கள் கண்ணோட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்காக வாதிடும் திறனை நீங்கள் பெறுவீர்கள்.
- நீங்கள் சிறந்த, மிகவும் பச்சாதாபம் உடைய செவியேற்பவராக மாறுவீர்கள்.
- உங்கள் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் நீடித்த பலனளிக்கக் கூடிய பாரிய தாக்கத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்.
நான் பார்வையாளர்களுக்கு முன்னால் பேசாமல் இருந்தால் என்னவாகும்?
பார்வையாளர்களுக்கு முன்னால் பேசும் போது மட்டுமே பொது சொற்பொழிவாற்றும் நுட்பங்கள் மற்றும் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்பது பொதுவாக நிலவும் தவறான கருத்து. உண்மையில் சொல்லப்போனால், உண்மையிலிருந்து எதுவினாலும் விலகி இருக்க முடியாது. எங்கள் திட்டத்தின் மூலம் நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, உங்களுடைய பழகும் அல்லது தொடர்பு கொள்ளும் ஸ்டைல் தொழில்முறை ரீதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் மேம்பட்டு இருப்பதை நீங்கள் காண்பீர்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதிலும் முன்னேற்றம் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் யோசனைகளை வெளிப்படுத்துவதிலும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதிலும், அவர்களின் காரணத்தில் உள்ள தவறுகளையும் சிக்கல்களையும் கண்டறிவதிலும், ஒப்பந்தங்களை எட்டுவதிலும், பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் மிகவும் சிறந்த, பிறரை இணங்கச் செய்யும் சொற்பொழிவுகளைக் கொண்டிருப்பதில் நீங்கள் மிகவும் சிறந்தவராக இருப்பீர்கள்.
நாம் எடுத்துரைக்கும் மற்றும் பயிற்றுவிக்கும் திறன்கள் ...
- … மக்கள் தங்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட கனவுகளை அடைவதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது.
- ... அவர்களின் சூழலில் உண்மையான பயனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களை உருவாக்குவது.
- ... எளிதில் சூழ்ச்சி செய்ய முடியாத தகவலறிந்த குடிமக்களை உருவாக்குவது, இதன் விளைவாக வலுவான மற்றும் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
உங்கள் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களிலும் நீங்கள் மக்களுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் முன்னேற்றம் அடைந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் முக்கியமாக - நீங்கள் பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். மேலும் என்னவென்றால் - அந்த பலன்கள் விரைவாக கிடைக்கும். ஒரு மாதத்திற்கு இரண்டு முறை கிளப் சந்திப்புகளில் பங்கேற்று, பாத்திரத்தில் பங்கெடுப்பதற்கு போதுமான நேரத்தை நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் வெறும் 3-4 மாதங்களில் எவ்வளவு முன்னேறியுள்ளீர்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
ஏன் இது முக்கியம்?
நீங்கள் மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் நுணுக்கமான திறன்கள் பொதுவாக பணியிடத்திலும் வாழ்க்கையிலும் வெற்றிக்கு முக்கியமானவை, மேலும் இந்தக் கூற்றை ஆதரிக்கும் ஏராளமான ஆராய்ச்சி ஆய்வுகள் உள்ளன:
- "நுணுக்கமான திறன்கள் மீது கடினமான சான்றுகள்", என்பவற்றில், ஹெக்மேன் மற்றும் கவுட்ஸ் உங்கள் தொழில்முறை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பல காரணிகள் நேரடியாக நுணுக்கமான திறன்களுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "நுணுக்கமான திறன்கள் வாழ்க்கையில் வெற்றியை முன்னறிவிக்கின்றன".
- வேலைக்காக விண்ணப்பிக்கும் எவருக்கும் விரும்பத்தக்க திறன்களாக முதலாளிகள் நுணுக்கமான திறன்களை (மற்றும், குறிப்பாக, பிறருடன் பழகும் திறனை) தொடர்ந்து பட்டியலிடுகின்றனர்.
- Indeed.com நடத்திய ஒரு குறிப்பிட்ட ஆய்வில், முதலாளிகளால் தேடப்படும் முதல் இரண்டு திறன்கள் தொடர்பு மற்றும் தலைமைத்துவ திறன்கள்.
- அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியின் ஆய்வின்படி, சமூகம் என்ன சொல்லுமோ என்ற வடிவத்தில் இருக்கும் பொது சொற்பொழிவாற்றும் பயமானது:
- கல்லூரியில் வெற்றிகரமாக பட்டம் பெறுவதற்கான உங்கள் நிகழ்தகவை 10% குறைக்கிறது.
- உங்கள் சாத்தியமான ஊதியத்தை 10% குறைக்கிறது.
- தொழில்நுட்ப, தொழில்முறை அல்லது நிர்வாக ரீதியான பணியை பெறும் உங்கள் நிகழ்தகவை 14% குறைக்கிறது.
- நீங்கள் தனியாக இல்லை - பொது சொற்பொழிவாற்றுவது, 89.4% உடன் சமூக கவலை மற்றும் சமூக பயத்தின் மிகப்பெரிய இயக்கியாக இருக்கிறது.
நான் தலைவர் அல்ல!
"பிறக்கும்போதே" தலைவராக பிறக்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு "வேண்டியது" உங்களிடம் இல்லை என்றும், நீங்கள் எப்போதும் வெட்கப்படுகிறீர்கள் என்றும், மக்களை இணங்கச் செய்ய முடியவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம்.
பெரும்பாலான தலைவர்கள் உங்களைப் போலவே இருந்தார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள், பிறக்கும்போதே அத்திறமைகள் அவர்களிடம் இருப்பதில்லை. இது நீங்கள் விரும்பும் வெற்று யோசனை மட்டுமல்ல - தலைமைத்துவம் என்பது கற்றுக் கொள்ளவும் பயிற்சி பெறவும் கூடிய ஒன்று என்று கூறும் ஆராய்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று கூறுவதன் மூலம் எளிமையாகவோ, நேரடியாகவோ தலைவர்களாக ஆகிவிட முடியாது. அதற்கு விடா முயற்சி, மன உறுதி மற்றும் ஒழுக்கம் தேவை. நீங்களே நேரத்தை முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும், தொடர்ந்து மற்றும் இடைவிடாமல் நீங்கள் சௌகரியமாக உணரும் எல்லைகளைத் தாண்டி செல்ல வேண்டும், முதல் தடையை சந்தித்தவுடனேயே உங்கள் இலக்கை கைவிட்டு விடாதீர்கள்.
தலைமைத்துவம் என்பது பல்வேறு வடிவங்களிலும் இருக்கலாம்:
- ஜெஃப் பெசோஸ் அல்லது ஜாக் மா போல, உங்கள் தொழில் திறன்களின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சாம் ஹாரிஸ், ஜோர்டான் பீட்டர்சன் அல்லது நீல் டெக்ராஸ் டைசன் போல, உங்கள் அறிவார்ந்த சக்தியின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- தாமஸ் ஏ. எடிசன் போல உங்கள் பணியின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- ஜான் எஃப் கென்னடி போல, உங்கள் கரிஷ்மா மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- நெல்சன் மண்டேலா போல, உங்கள் தியாகத்தின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- போப் ஜான் பால் II அல்லது மகாத்மா காந்தி போல உங்கள் கொள்கைகளின் மீதான நம்பிக்கை மற்றும் உங்கள் பக்தியின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- கல்கத்தாவின் அன்னை தெரசா அல்லது வேல்ஸ் இளவரசி லேடி டயானா போல இரக்கத்தின் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- மார்ட்டின் லூதர் கிங்கைப் போல நீங்கள் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு தலைவராக இருக்கலாம்.
- ரோசா பார்க்ஸ் அல்லது கிரெட்டா தன்பெர்க் போல உங்கள் உரிமைகளுக்காக ஒரு நிலைப்பாட்டை உருவாக்குவதன் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம்.
- நிச்சயமாக, நெப்போலியன் பொனபார்டே போல உங்கள் இராணுவ சூத்திரம் மூலம் நீங்கள் ஒரு தலைவராக இருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் அந்த திறன்களை சிக்கல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு விரும்புகிறோம்.
நீங்கள் அனைத்து "தலைமைப் பண்புகளையும்" கொண்டிருக்க வேண்டியதில்லை. தலைமைத்துவத்தை அடைவதற்கு பல பாதைகள் உள்ளன.
நீங்கள் ரொனால்ட் ரீகன் அல்லது பராக் ஒபாமா போல் பேச விரும்புகிறீர்களா? மார்ட்டின் லூதர் கிங்கைப் போல வழிநடத்த விரும்புகிறீர்களா?
அப்படியானால், உங்களுக்காக ஒரு நல்ல மற்றும் கெட்ட செய்தி எங்களிடம் உள்ளன. மோசமான செய்தி என்னவென்றால், உங்களால் ரொனால்ட் ரீகனைப் போல பேச முடியாது. வரலாற்றில் ஒரே ஒரு ரொனால்ட் ரீகன் மட்டுமே இருந்தார், நீங்கள் அவராக இருக்க முடியாது. மன்னிக்கவும். நீங்கள் பராக் ஒபாமாவாக இருக்க முடியாது. அவ்வாறு புகழ்பெற்ற பேச்சாளரோ, தலைவரோ இல்லை. அது நல்லதுதான் ஏனென்றால், அனைத்து பொது பேச்சாளர்களும் ரோமன் சொற்பொழிவாளர் மார்கஸ் துலியஸ் சிசெரோவைப் போல் பேசினால், உலகம் எவ்வளவு அற்பமானது, ஒரே வண்ணங்களை உடையது மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். லிங்கன், சர்ச்சில், ரீகன், ஒபாமா, லூதர் கிங் மற்றும் பலருக்கு பதிலாக, சிசரோவின் நூற்றுக்கணக்கான பிரதிகள் எங்களிடம் இருக்கும்.
நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உலக வரலாற்றில் உங்களைப் போல் யாரும் இருந்ததில்லை, உங்களைப் போன்ற ஒருவர் இனி இருக்க மாட்டார். உங்கள் சொந்த ஆளுமையுடன், உங்கள் சொந்த கரிஷ்மாவுடன் உங்களுக்கென சொந்தமாக பொது சொற்பொழிவாற்றும் மற்றும் தலைமைத்துவம் வகிக்கும் ஸ்டைலை நீங்கள் உருவாக்கலாம். அதுதான் உங்களை தனித்துவமாக்கும்.
Agora-வில், வேறொருவரைப் பின்பற்ற முயற்சிக்காமல் உங்கள் சொந்த ஸ்டைலைக் கண்டுபிடித்து வளர்த்துக் கொள்வதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். நீங்கள் விரும்பும் பல சிறந்த மக்களின் சொற்பொழிவாற்றும், தலைமைத்துவம் வகிக்கும் ஸ்டைல்களை படித்து, நீங்கள் விரும்பும் யோசனைகளையும் அணுகுமுறைகளையும் எடுத்துக் கொள்வீர்கள். சொல்லாட்சி, வாதம், மேலாண்மை, வற்புறுத்தல் ஆகியவற்றின் முக்கிய கருவிகளைப் படிப்பீர்கள். இந்த அனைத்து துண்டுகளாலும், நீங்கள் உங்களுக்கென சொந்தமான தனித்துவமான ஸ்டைலை உருவாக்குவீர்கள்.
என்னால் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியவில்லை!
உங்களால் உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கக்கூடிய அளவுக்கு இந்த உலகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சிக்கல்கள் பெரிதாகவும், தீர்க்க முடியாதது போலவும் தோன்றுகின்றன. அடக்குமுறை, வன்முறை, காலநிலை மாற்றம், வறுமை, பாகுபாடு, போர் என பல விஷயங்கள் நிகழுகிறது. அதிகாரம், அறிவு, செல்வாக்கு அல்லது திறமைகள் இல்லாதபோது யாராலும் எப்படி வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்?
ஆனாலும், நீங்கள் உலகின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையில்லை. யாருக்காவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த நீங்கள் ஒரு சிறிய பிரச்சனையை மட்டுமே தீர்க்க வேண்டும்.
சில சமயங்களில், ஒரு பிரச்சனையைப் பற்றி பேசுவதை விட அது குறித்து உண்மையில் செயல்படத் தொடங்கினால், நீங்கள் நம்ப முடியாதவற்றை அனுபவிப்பீர்கள்.
தி ஸ்டார் த்ரோவர்
(லோரன் ஐஸ்லீயின் அசல் கதையை தழுவி சுருக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது)
கோஸ்டபெலின் கடற்கரைகள் வாழ்வின் குப்பைகளால் சிதறிக்கிடக்கின்றன. சிப்பிக்களின் குவியல்கள் இருக்கின்றன. அலைகள் ஒரு புதிய வீட்டிற்காக ஆழத்தில் அலைந்து திரிந்த நண்டுகளை கரையின்மீது வீசுகின்றன, அங்கு காத்திருக்கும் கடற்பறவைகள் அதைத் துண்டாக்குகின்றன.
நம்பமுடியாத அழகான மற்றும் அற்புதமான வானவில் எனக்கு முன் பிரகாசித்தது. அதன் அடியில் ஒரு மனித உருவம் நிற்பதை நான் பார்த்தேன், அவர் நிலை அறியாமல் வானவில் உள்ளே நிற்பதை போல எனக்குத் தோன்றியது, அவர் மணலில் எதையோ நிலையாக பார்த்துக்கொண்டிருந்தார்.
இறுதியில் அவர் குனிந்து கரையில் மோதிய அலைகளிலிருந்து ஒரு பொருளை எடுத்து வீசினார். நான் நிச்சயமற்ற முறையில் அவரை நோக்கி அரை மைல் நடந்தேன்.
நான் அவரை அடையும் நேரத்தில், வானவில் எங்கள் இருவரையும் கடந்து சென்றது, ஆனால் வானவில் நிறங்களின் எச்சங்கள் பல மாறும் விளக்குகளாக அவரது அம்சங்களில் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தன. அவர் மீண்டும் வணங்கினார்.
மணல் மற்றும் சேற்றின் குளத்தில், ஒரு நட்சத்திர மீன் கைகளை இறுக்கிக் கொண்டு மறைக்கும் சேற்றிலிருந்து தனது உடலைக் காப்பாற்ற முயன்றது.
"அது இன்னும் உயிருடன் இருக்கிறது," என்று நான் தைரியமாகச் சொன்னேன்.
"ஆமாம்," என்று கூறிய அவர், வேகமாக ஆனால் கண்ணியமான முறையில் நட்சத்திர மீனை எடுத்து, என் தலைக்கு மேல் சுழற்றி, கடலுக்குள் வீசி எறிந்தார். அது நுரைச் சுழலில் மூழ்கியது, அலைகள் மீண்டும் அலறத் தொடங்கின.
"ஒருவேளை அது உயிருடன் இருக்கலாம், கரையின் இழுவிசை அந்தளவுக்கு வலுவாக இருந்தால்", என்றார் அவர். அவர் மென்மையாக பேசினார். அவரது வெண்கல நிற முகத்தில் ஒளியின் நிறம் இன்னும் மாறிக்கொண்டிருந்தது.
"சொற்கள் திடீரென குறைந்துவிட்டதால் "சிலரே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வருகிறார்கள்", "நீங்கள் சிப்பிகளை சேகரிக்க வருகிறீர்களா?", என்றேன்.
""இது மாதிரி மட்டும்தான்," என்று கூறிய அவர் மெதுவாக கடற்கரையின் இடிபாடுகளை சுட்டிக்காட்டினார். "அதுவும் உயிருடன் இருப்பவற்றை மட்டுமே." எனது ஆர்வத்திற்கு இடையூறாக, அவர் மீண்டும் கீழே குனிந்து, மற்றொரு நட்சத்திர மீனை மீண்டும் தண்ணீரில் விட்டார்.
"நட்சத்திர மீன்களே," என்ற அவர், "நன்றாக எறியுங்கள். யாராவது அவைகளுக்கு உதவ முடியும்", என்றார்.
"பல நட்சத்திர மீன்கள் கரையில் இறந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு நட்சத்திர மீனை காப்பாற்றுவதில் என்ன வித்தியாசம் ஏற்படப்போகிறது?"
""அந்த நட்சத்திர மீனுக்கு, அது ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்கியது."
கரையில் ஒரு வளைவுக்கு அருகில் சென்றதால் நான் திரும்பியபோது, கொந்தளிப்பான நீரின் மேல் அவர் மற்றொரு நட்சத்திர மீனை திறமையாக வீசுவதைப் பார்த்தேன். ஒரு கணம், மாறும் அந்த ஒளியில், நட்சத்திரங்களை வீசுகிறவர் பெரியதாகத் தோன்றினார், அவர் பெரிய நட்சத்திரங்களை ஒரு பெரிய கடலில் வீசுவது போல் இருந்தது. எப்படியிருந்தாலும், அந்த நேரத்தில் அவருக்கு ஒரு கடவுளின் மகிமை இருந்தது.
(...)
நமக்கு அப்பால் உள்ள வேறொரு உலகில் நட்சத்திர மீன் எறிபவரை நான் பார்த்தது போல் இருந்தது. அந்த மழை பொழியும் காலை வேளையில், ஏழு வண்ண ராட்சத வானவில் அவரது பின்னணியில் பதுங்கி, கையசைத்துக் கொண்டிருந்தது. அமைதியாக நான் உயிருடன் இருக்கும் நட்சத்திர மீனைத் தேடி எடுத்தேன். அதன் வெற்று கரங்கள் என் விரல்களில் மெதுவாக அசைந்து, நிஜமான நட்சத்திரத்தைப் போல, அதன் வாழ்வுக்காக அமைதியாக அழுது கொண்டிருந்தது. நான் அதை அசாதாரண தெளிவுடன் பார்த்தேன், அதை தொலைதூர அலைகளில் தூக்கி எறிந்தேன். "எனக்கு புரிகிறது," என்று சுருக்கமாக கூறினேன். "என்னை மற்றொரு நட்சத்திர மீன் வீசுபவர் என்று அழைக்கவும்." அப்போதுதான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். அவர் இனி தனியாள் அல்ல. எங்களுக்குப் பிறகு, மற்றவர்கள் இதனை தொடருவார்கள்.
பார்வையாளர்களின் வியக்க வைக்கும் கண்களுக்கு முன்னால் முதல் நட்சத்திர மீனை எடுத்து கடலில் எறிய தைரியம் தேவை. அது அபத்தமாகத் தோன்றலாம், ஆனால் அந்த நட்சத்திர மீனுக்கு நீங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருந்தீர்கள். "நீங்கள் என்ன செய்தாலும் பிரயோஜனம் இல்லை" என்று சொல்லி உங்களை மன ரீதியாக தடுப்பவர்களை நீங்கள் கடந்துவிட்டீர்கள், மேலும் உதாசீனத்தை செயலாக மாற்றியுள்ளீர்கள். நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்தவுடன், உங்கள் உதாரணத்தைப் பார்க்கும் மற்றவர்கள் உங்களுடன் சேருவார்கள். அவர்கள் உடனடியாக சேர்ந்து விடமாட்டார்கள். ஏனென்றால் பலர் முதல் தடையிலேயே எதையும் எளிதாக கைவிட்டுவிடுகிறார்கள். ஆனால் நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், நீங்கள் அர்த்தமுள்ள ஒன்றைச் செய்கிறீர்கள் என்று நீங்கள் நம்பினால், அதிகமான மக்கள் தவிர்க்க முடியாமல் உங்களுடன் சேருவார்கள். நீங்கள் தள்ளும் சிறிய பந்து பெரியதாக ஆகிக்கொண்டே இருக்கும், மேலும் அது மாற்றத்தின் தடையற்ற அலையாக மாறும் வரை வேகத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டே இருக்கும்.
இது நல்ல உணர்வுகளைத் தூண்டும் கதை மட்டுமல்ல. இது நிஜ வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் மீண்டும் மீண்டும் நடக்கிற ஒரு விஷயம். ஆனால் நீங்கள்தான் முதல் படியை எடுத்து வைக்க வேண்டும், நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், அதில் உறுதியாக இருங்கள்.
மும்பையில் வெர்சோவா கடற்கரை மாற்றம்
(CNN வழங்கிய அசல் அறிக்கையிலிருந்து)
"நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரையில் உள்ள எனது புதிய குடியிருப்புக்கு சென்றேன். கடற்கரையில் 5.5 அடி உயரம் அளவுக்கு பிளாஸ்டிக் குவிந்திருப்பதை நான் பார்த்தேன், அதில் முழு மனிதனும் மறைந்துவிடலாம் போல இருந்தது", என்று ஷா CNN இடம் கூறினார். "நான் களத்தில் இறங்கி ஏதாவது செய்வேன் என்று கூறினேன். நான் எனது சுற்றுசூழலை காப்பாற்ற வேண்டும், அதற்கு அடிப்படை நடவடிக்கை தேவை", என்றார்.
33 வயதான ஷா, 2015 ஆம் ஆண்டில், தனது அண்டை வீட்டாரின் உதவியுடன் கடற்கரையை சுத்தம் செய்யத் தொடங்கினார். காலப்போக்கில், உள்ளூர் வெர்சோவாவாசிகள், குடிசைவாசிகள், அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அவருடன் இணைந்து பணியாற்றினர்.
தன்னார்வலர்கள் கடற்கரையில் 52 பொதுக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்து 50 தென்னை மரங்களையும் நட்டனர். ஷா அங்கு 5,000 தென்னை மரங்களை நட்டு "முன்பு போல் தென்னை மரத்தால் சூழப்பட்ட கடலோர உப்பங்கழியாக மாற்ற வேண்டும்" என்கிறார்.
அஃப்ரோஸ் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், தன்னார்வலர்கள் 21 மாத காலப்பகுதியில் 2.5 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையிலிருந்து 5.3 மில்லியன் கிலோகிராம் அழுகிய குப்பை மற்றும் பிளாஸ்டிக்கை சேகரித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை இதை "உலகின் மிகப்பெரிய கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்" என்று பெயரிட்டுள்ளது. வெர்சோவாவின் வியத்தகு மாற்றம் வியக்கத்தக்க வகையில் இந்தியா முழுவதும் பரவலாகப் பாராட்டப்பட்டது, இந்த மிகப்பெரிய பிரச்சாரத்திற்கு உதவுவதில் உள்ளூர் தன்னார்வலர்களின் பங்கை ஆன்லைன் வர்ணனையாளர்கள் பாராட்டினர்.
இதில் நமக்கு என்ன இருக்கிறது?
Agora வழங்கும் தனிநபர் திறன் பயிற்சியை தொழில்முறை கருத்தரங்குகளில் பெறுவதற்கு பொதுவாக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும். ஆனால் இந்தப் பயிற்சியை நிரூபிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான அமைப்பைப் பயன்படுத்தி இலவசமாக வழங்குகிறோம். நீங்கள் இப்போது நினைக்கலாம், "Agora வே, இதிலிருந்து உனக்கு என்ன கிடைக்கப்போகிறது?" என்று, "நீங்கள் ஒரு பொருளுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நீங்களே தயாரிப்பாகி விடுவீர்கள்" என்று சிலருக்குள் உள்ள இழிந்த குரல் கூறலாம். எவ்வாறாயினும், உங்கள் தரவு விற்கப்படாமல் அல்லது ஆராயப்படாமல், அல்லது நீங்கள் எதையும் கைவிட வேண்டிய அவசியமில்லாமல், ஒரு காரணத்தை மட்டுமே நம்பி ஆர்வமுள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த தயாரிப்புகளையும் சேவைகளையும் இலவசமாகப் பெறுகிற உதாரணங்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. விக்கிபீடியா, ஃபயர்ஃபாக்ஸ் உலாவி, லினக்ஸ் OS, கான் அகாடமி விரிவுரைகள், சிறந்த பல்கலைக்கழகங்களின் திறந்த பாடநெறி, அனைத்து TED மற்றும் TEDx பேச்சுக்கள் மற்றும் பலவற்றைப் பற்றி சிந்தியுங்கள் ...
கல்வி ரீதியான ஒரு அறக்கட்டளையாக, எங்களுக்கு இதிலிருந்து கிடைப்பது என்னவென்றால், சகிப்புத்தன்மை கொண்ட தலைவர்கள், தைரியமுள்ள தலைவர்கள், வன்முறையை கையிலெடுக்காமல் அல்லது ஆக்ரோஷப்படாமல் வார்த்தைகளால் சமாதானப்படுத்தும் தலைவர்கள், பிறர் சொல்வதைக் கேட்டு, நூதனமாக சிந்திக்கக்கூடிய தலைவர்கள், எளிதில் சூழிச்சி செய்து ஏமாற்ற முடியாத தலைவர்கள், சிறந்த விஷயங்களை ஊக்குவித்து சாதிக்கக்கூடிய தலைவர்களை உருவாக்குவதன் மூலமும், அவர்களை வடிவமைப்பதன் மூலமும் கிடைக்கும் தார்மீக திருப்தியே.
பல மக்களுக்கு மிகுந்த வலியையும், துன்பத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியுள்ள போலி அறிவியல் போன்ற சாபத்தை எதிர்த்துப் போராடுகையில் எங்களுக்கு தார்மீக திருப்தி கிடைக்கிறது.
நட்பு மற்றும் சகிப்புத்தன்மை நிறைந்த சூழலில் மக்கள் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளும், வளரும் மற்றும் சமூக உறவுகளை உருவாக்கும் உலகளாவிய மற்றும் கலாச்சார ரீதியாக மாறுபட்ட ஒன்றோடொன்று இணைந்த சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மிகவும் அமைதியான சமுதாயத்திற்கு பங்களிப்பதன் தார்மீக திருப்தியை நாங்கள் பெறுகிறோம்.
ஜனநாயக சமூகங்களின் ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதில் நாங்கள் தார்மீக திருப்தியைக் காண்கிறோம், ஏனெனில் நூதன சிந்தனையாளர்கள் மற்றும் தவறான வாதங்கள் மற்றும் தவறான புள்ளிவிவரங்களை வேறுபடுத்திப் பார்க்கக்கூடியவர்கள் அத்தகைய ஜனரஞ்சக தலைவர்களுக்கு வாக்களிப்பதில் எளிதில் ஏமாற முடியாது. நூதனமாக பகுப்பாய்வு செய்யக்கூடியவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு மற்ற சமூக குழுக்கள், இனங்கள், மதங்கள் அல்லது நாடுகள்தான் பொறுப்பு என்று சொல்லப்படுவதை எளிதில் நம்ப மாட்டார்கள், மேலும் வன்முறை, போர் அல்லது ஆக்ரோஷமாக செயல்படுவது போன்றவற்றால்தான் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று சொல்லப்படுவதையும் அவர்கள் எளிதாக நம்ப மாட்டார்கள்.
கடைசியாக, நமது உறுப்பினர்கள் உண்மையான உலக சமூக செயல்திட்டங்களை உருவாக்கவும் வழிகாட்டவும் உதவுவதில் நாங்கள் தார்மீக திருப்தியினை அடைகிறோம். சுருக்கமாகச் சொன்னால், எங்கள் உறுப்பினர்கள் சொற்பொழிவாற்றும், வழிநடத்தும் மற்றும் வரலாறு படைக்கும் தலைவர்களாக மாறுவதைக் கண்டு நாங்கள் அளவில்லா மகிழ்ச்சியடைகிறோம்.