சரி, கோட்பாடு ரீதியாக போதுமான அளவு பார்த்துவிட்டோம். அநேகமாக இப்போது உகந்தலிடம் ஒரு கேள்வி இருக்கலாம், "கிளப்பில் நான் சேர்ந்தவுடன், நான் எப்படி முறையாக கற்றுக்கொள்வது மற்றும் மேம்படுத்திக் கொள்வது?"
கிளப் சந்திப்புகளில் தொடர்ச்சியான முன்னேற்றம்
Agora கிளப் சந்திப்புகள் என்பது "பயிற்சி அமர்வுகளோ" அல்லது "கருத்தரங்குகளோ" அல்ல. Agora Speakers கிளப்பில் "வல்லுநர்கள்" அல்லது "ஆசிரியர்கள்" இல்லை- ஒவ்வொருவரும் அவரவர் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கே இருக்கிறார்கள், கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது, எல்லோரும் உங்கள் சகாக்கள், மேலும் உங்களுக்கு சமமானவர்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான கற்றல் செயல்முறையானது "தொடர்ச்சியான மேம்பாட்டு சுழற்சி" மற்றும் "செய்வதன் மூலம் கற்றுக்கொள்" அணுகுமுறை என்று அழைக்கப்படும் தொழில்துறையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நடைமுறையைப் பின்பற்றுகிறது.
செயல்திட்டம் ஒவ்வொன்றுக்கும், நீங்கள் பின்வரும் நிலைகளை கடந்து செல்ல வேண்டும்:
கற்றுக் கொள்வது
ஒவ்வொரு செயல்திட்டத்தின் "கற்றுக் கொள்ளும்" கட்டத்தில், நீங்கள் செய்வதாவது:
- செயல்திட்டத்திற்கான ஆன்லைன் மெட்டீரியல்கள் மற்றும் ஆதாரங்களைப் படிப்பது.
- மற்ற திறமையான பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்வது.
- கேள்விகளைக் கேட்டு, உலகளாவிய சமூகத்திலிருந்து ஆலோசனையைப் பெறுவது.
- செயல்திட்டத்தின் குறிப்பிட்ட பணிகளில் உங்கள் வழிகாட்டியுடன் ஈடுபடுவது.
தயார் ஆவது
நீங்கள் கோட்பாட்டைக் கற்றுக்கொண்டீர்கள், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது. பொதுப் சொற்பொழிவு, நூதன சிந்தனை, தலைமைத்துவம் அல்லது பிற வகை என செயல்திட்டத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் அதை நீங்களே செய்ய வேண்டும். அதற்காக, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்து அதற்காகத் தயார் ஆக வேண்டும்:
- செயல்திட்ட இலக்குகளுக்கு ஏற்ப சொற்பொழிவுகளை எழுதுவது அல்லது தலைமைப் பணிகளைத் திட்டமிடுவது.
- பலமுறை ஒத்திகை பார்ப்பது.
- உங்கள் ஆசானிடம் விவாதித்து, வழிகாட்டுதலைப் பெறுவது.
பயிற்சி செய்வது
இப்போது நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பயிற்சி செய்து, உங்கள் செயல்திட்டத்தை கிளப்பில் முன்வைக்கும் நேரம் இது. நீங்கள் இந்தக் கட்டத்தில் செய்வதாவது:
- உங்கள் உள்ளூர் கிளப்பில் தயார் செய்த சொற்பொழிவுகளை வழங்குவது.
- உங்கள் தலைமைத்துவம் தொடர்பான செயல்திட்டங்களின் முடிவுகளைக் காட்டுவது.
- மேம்பட்ட சொற்பொழிவு, ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிப்பது அல்லது நீங்கள் எடுத்த முடிவின் மீதான கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற அனைத்து வகையான சூழல்களையும் பயிற்சி செய்வது.
- கிளப் மற்றும் ஃபவுண்டேஷன் உயர் மட்டங்களில் தலைமைப் பதவிகளை வகிப்பது.
- உங்கள் சமூகத்திற்கு நல்ல பலனாக இருக்கக்கூடிய, மேலும் உங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நிஜ உலக செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது.
மதிப்பீடு மற்றும் கருத்துக்களைப் பெறுவது
கிளப்பில் செயல்திட்டத்தை முன்வைத்ததும், நீங்கள் பெறுவதாவது:
- கிளப் சந்திப்புகளில் உங்கள் சகாக்களிடமிருந்து விரிவான மதிப்பீட்டைப் பெறுவது.
- மற்ற கிளப் உறுப்பினர்களிடமிருந்து எழுத்து மூலமான கருத்துக்களைப் பெறுவது.
- உங்கள் வரிசை அமைப்பு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் வகையில் நாளேடை நீங்கள் எழுதுவீர்கள், மேலும் இது உங்கள் முன்னேற்றத்தின் வரலாறு மற்றும் நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களின் வழிகாட்டியாக இருக்கும்.
நீங்கள் பெறும் கருத்துக்களானது எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையிலும், உங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையிலும் உண்மையான நோக்கத்துடன் வழங்கப்படும். நிஜ உலக சூழ்நிலைகளைப் போலல்லாமல், யாரும் உங்கள் சொற்பொழிவை நியாயந்தீர்க்க மாட்டார்கள் அல்லது நீங்கள் சொல்வது தவறென்று நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்கள் அல்லது மற்றவர்கள் முன்னால் உங்களை மோசமாக உணர வைக்க மாட்டார்கள். உண்மையில் சொல்லப்போனால், எங்கள் சமூகத்தின் ஆதரவு, நட்பு ரீதியாகவும், அரவணைப்பு நிறைந்ததாகவும் இருக்கும், நாம் அனைவரும் ஒன்றாகக் கற்றுக் கொண்டு முன்னேறுவது Agora-வில் நீங்கள் காணக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.
திரும்பச் செய்வது
முதல் முயற்சியிலேயே யாரும் வல்லுநர் ஆகிவிட மாட்டார்கள், உங்கள் முதல் நாளிலேயே பியானோவை வைத்து சோபின் வாசித்து விடலாம் அல்லது கோல்ஃப் மைதானத்தில் முதல் முயற்சியிலேயே குழியில் பந்தை போட்டு விடலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. திரும்பத் திரும்பச் செய்து, கருத்துக்களைப் பெறுவது, மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது, பின்னர் முன்னேறுவது என்பதே வெற்றியின் அடிப்படை. பழமொழி சொல்வது போல், "அனுப்பவே மனிதனை முழுமையாக்குகிறது."
எந்தக் கருத்துக்களை செயல்படுத்தலாம், எதை புறக்கணிக்கலாம் என்பதைத் தேர்வு செய்வது உங்களுடைய விருப்பத்திற்குரியது. யாரையும் காபி அடிக்காமல், உங்களுக்கென சொந்தமான சொற்பொழிவாற்றும், தலைமைத்துவம் வகிக்கும் ஸ்டைலை சிறந்த பயிற்சிகள் மூலம் வளர்த்துக் கொள்ள உதவுவதே Agora உடைய குறிக்கோள்.
எங்களது கல்வித் திட்டத்திற்கு காலக்கெடு எதுவும் இல்லை - நீங்கள் உங்கள் சொந்த வேகத்தில் தொடரலாம், நீங்கள் விரும்பும் பல முறை ஒரு திட்டத்தை மீண்டும் மீண்டும் செய்யலாம், நீங்கள் தயாராக இருப்பதாக உணரும்போது மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்லலாம். பெரும்பாலான நிஜ வாழ்க்கை சூழல்களைப் போலல்லாமல், Agora-வில் தலைமைத்துவம் அல்லது சொற்பொழிவு நுட்பத்தை முயற்சித்து, அது நன்றாக வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தால் எந்த அபராதமும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், அவ்வாறு செய்யவே நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம், இதன்மூலம் நிஜ வாழ்க்கையில் சரியானதை மட்டுமே செய்ய வேண்டிய தருணம் வரும்போது நீங்கள் ஏற்கனவே அதற்காகத் தயாராக இருப்பீர்கள்.
இந்த அமைப்பில் சேருவது பயனளிக்குமா? இதை விட தொழில்முறை பாடப்பயிற்சி சிறந்ததல்லவா?
ஒரு திறனில் (டென்னிஸ், நடனம், நீச்சல் அல்லது பொது சொற்பொழிவாற்றுவது) மிதமான அளவில் இருக்கும் திறமைக்கு பயிற்சி தேவை என்று ஆராய்ச்சி கூறுகிறது, இது பொதுவாக தொழில்முறை படிப்புகளில் பயிற்சி செய்ய ஒதுக்கப்பட்ட கால அவகாசத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.
பின்வருவனவற்றை சற்று யோசித்துப் பாருங்கள்: நீங்கள் சிறந்த உணவுகளை சமைக்க கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன:
- பிரபலமான சமையல் வல்லுநர் ஒருவருடன் தீவிரமான 1 அல்லது 2-வார பாடப்பயிற்சிக்கு பதிவு செய்து, ஒரே நேரத்தில் சில உணவுகளை தயார் செய்யலாம், அதற்காக நிறைய பணம் செலவழிக்கலாம், அதன் பிறகு, நீங்கள் ஒரு நிபுணர் ஆகிவிட்டீர்கள் என்று நம்பலாம்.
- சமையல் குழுவில் சேரலாம். ஒவ்வொரு வாரமும், ஆன்லைன் மெட்டீரியல்கள் வாயிலாக ஒரு தனி உணவை எப்படித் தயார் செய்வது என்பதை நீங்கள் படிப்பீர்கள், மேலும் உங்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நீங்கள் அந்த உணவை சமைப்பீர்கள். அனைவரும் அதை சுவைத்து தங்கள் கருத்துக்களை உங்களுக்கு வழங்குவார்கள். நீங்கள் திருப்தி அடைந்தால், அடுத்த வாரம் நீங்கள் வேறு உணவுக்கு செல்லலாம். இல்லையென்றால், நீங்கள் அதை மீண்டும் செய்யலாம். நீங்கள் சமைக்கும் ஒவ்வொரு புதிய உணவும் மென்மேலும் கடினமானதாக இருக்கும். நீங்கள் இந்த "சுழற்சியை" வாரந்தோறும் பல மாதங்களுக்கு, பணம் செலவழிக்காமல் செய்யலாம். கூடுதலாக, சமையல் குழுவில், நீங்கள் பல்வேறு குறிப்பிட்ட சமையல் திறமைகளை பயிற்சி செய்துப் பார்ப்பீர்கள்.
- மாற்றாக, நீங்கள் சமையல் பற்றி நிறைய படிக்கலாம், நிறைய வீடியோக்களைப் பார்க்கலாம், உங்கள் விருந்தினர்களுக்காக ஏதாவது தயார் செய்யும் நேரம் வரும்போது நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று நம்பலாம்.
இதில் எந்த அணுகுமுறை சிறந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Agora இதில் இரண்டாவது அணுகுமுறையை கையில் எடுத்துக் கொள்கிறது - இதில் குறிப்பிட்ட இலக்குகளுடன் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட எங்களது கல்வி மெட்டீரியல்களை நீங்கள் அணுகலாம், அது பொது சொற்பொழிவாற்றுவது, தலைமைத்துவம் பாத்திரம் வகிப்பது மற்றும் விவாதம் செய்வது என்ற அடிப்படையான விஷயங்களில் இருந்து உங்களை மென்மேலும் மேம்பட்ட கருத்தாக்கங்களுக்கு அழைத்துச் செல்லும்.
ஆனால் எங்கள் வார்த்தையை மட்டும் நம்ப வேண்டாம். உங்களைப் பதிவுசெய்துக் கொண்டு, சிறிது காலம் ஒரு கிளப்பில் சேருங்கள், உங்களை மீண்டும் பதிவு செய்யுங்கள், குறுகிய காலத்தில் நீங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
நிச்சயமாக, நீங்கள் தவறாமல் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவற்றில் பாத்திரம் வகித்தால் மட்டுமே நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் Agora கிளப்புக்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக நீங்கள் சென்றால் - நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம். அது மாதத்திற்கு ஒரு முறை வாசித்து அல்லது நடனமாடி, பியானோ வாசிப்பவராகவோ நடனக் கலைஞராகவோ ஆவது போலத்தான் இருக்கும்.
பயிற்சிபட்டறைகள் மற்றும் மாநாடுகள்
ஃபவுண்டேஷன் மற்றும் கிளப்புகள் இரண்டும் அனைத்து மட்டங்களிலும் (நகரம், நாடு, சர்வதேச அளவில் என) பயிற்சி பட்டறைகள் மற்றும் மாநாடுகளை தொடர்ந்து ஏற்பாடு செய்கின்றன. வழக்கமான கிளப் சந்திப்புகளைத் தவிர, வல்லுநர்கள் அவர்களின் துறைகளில் வழங்கும் பல பயிற்சி பட்டறைகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நீங்கள் அனுபவித்து மகிழலாம்.