இது உங்கள் சொந்த கிளப்பின் சந்திப்பை வடிவமைப்பதற்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்தக்கூடிய வடிவம், இது முயற்சி செய்து பார்த்த அசல் சந்திப்பு வடிவமாகும்.

பாத்திரங்களை எப்படி வரிசைப் படுத்தலாம் என்பதற்கான ஒரு பரிந்துரை இது. நீங்கள் Agora கிளப்பை புதியதாக நடத்தினால், நீங்கள் அனுபவம் பெறும்வரை இந்த வடிவத்தை பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறோம்.

இந்தப் பிரிவில், பொதுவான வரிசையும் பரிந்துரைக்கப்படும் நேரங்கள் மட்டுமே விளக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒவ்வொரு பாத்திரங்களும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்தத் தகவலை "கிளப் சந்திப்பிற்கான பாத்திரங்கள்" பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

சந்திப்பு நேரடியாக நடைபெற்றாலும், அல்லது ஆன்லைனில் நடைபெற்றாலும், சந்திப்பின் வடிவம் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும்.

சந்திப்பிற்கு முன்

சந்திப்பு உதவியாளர்  சந்திப்பு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே வந்து பின்வருபவைகளைச் செய்ய வேண்டும்:

  • சந்திப்பு நடைபெறும் இடத்தை தயார் செய்ய வேண்டும் - மேடைகள், நாற்காலிகள், விரிவுரை வழங்கும் மேசை, கிளப் மற்றும் Agora சின்னங்களை வைக்கும் இடம் போன்றவை தயார் செய்ய வேண்டும். 
  • நேரத்தை அளவிடுவதற்கும் சமிக்ஞை செய்வதற்கும் நேரம் கண்காணிப்பாளர் பயன்படுத்தும் கருவிகளைத் (ஸ்டாப்வாட்ச், "போக்குவரத்து" விளக்குகள் நிறத்தில் வண்ண அட்டை, முதலியனவற்றை) தயார் செய்ய வேண்டும்.
  • நிகழ்ச்சி நிரலை அச்சிட வேண்டும்.
  • பொருத்தமாக இருந்தால், வெளிச்சம், சவுண்ட் சிஸ்டம் மற்றும் புரஜெக்ஷன் கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்று சோதிக்கவும்.
  • கிளப்பில் ரெக்கார்டிங் கருவிகள் இருந்தால், அதை அமைத்து ரெக்கார்டிங்கிற்கு தயார் செய்யவும்.

ஆன்லைன் சந்திப்புகளுக்கு, சந்திப்பு உதவியாளர் சந்திப்பின் அதிகாரப்பூர்வ தொடக்க நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக சந்திப்பை தொடங்கிவிட வேண்டும்.

சில கிளப்புகள் சுயாதீனமான-வடிவில் "மக்களுடன் பழகுவதற்கான" பிரிவை நடத்துகின்றன, இது வழக்கமாக சந்திப்புக்கு முன் 30 நிமிடங்களும், சந்திப்பிற்கு பிறகு பல மணிநேரமும் நடைபெறலாம்.

 

தேவையான மெட்டீரியல்கள்

நேரடி சந்திப்புகள்

நேரடியாக நடைபெறும் கிளப் சந்திப்பிற்கு, குறைந்தபட்சம் பின்வரும் மெட்டீரியல்கள் தேவைப்படும்:

 

 

  • நேர வரையறை உடைய சொற்பொழிவுகளுக்கு ஸ்டாப்வாட்ச்
  • பேச்சாளருக்கு நேர வரம்புகளை சமிக்ஞை காட்டுவதற்கு சில மெட்டீரியல்கள். இது பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு குறிகாட்டிகள் மூலம் செய்யப்படுகிறது. நீங்கள் விளக்குகள் அல்லது வண்ண காகிதத் துண்டுகளைப் பயன்படுத்தலாம்
  • பார்வையாளர்களுக்கான கருத்து படிவங்கள். பார்வையாளர்களாக இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் (விருந்தினர்கள் கூட) இந்தக் கருத்து தெரிவிக்கும் படிவங்களில் ஒவ்வொரு பேச்சாளருக்கும் தங்கள் மதிப்பீட்டை வழங்கலாம். பிராண்டிங் போர்ட்டலில் இருந்து கீழேயுள்ளதைப் போன்ற கருத்து படிவங்களுக்கு தனிப்பயனாக்கக்கூடிய டெம்ப்ளேட்களையும் நீங்கள் பெறலாம் (www.agoraspeakers.org/brand.jsp).

நீங்கள் வழங்கப்பட்ட டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தலாம் அல்லது நீங்களே சொந்தமாக உருவாக்கலாம்.

 

 

  • பார்வையாளர்கள் மற்றும் (குறிப்பாக) நேரம் கண்காணிப்பாளர் மற்றும் மொழி இலக்கணவாதிக்கான பேனாக்கள்
  • சந்திப்பிற்கு பிரிண்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள்
  • ஒன்று அல்லது இரண்டு காகிதங்களில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட அன்றைய நாளின் வார்த்தை, அந்த வார்த்தை பேச்சாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பெரிதாக இருக்க வேண்டும்.
  • மொழி இலக்கணவாதி, நேரம் கண்காணிப்பாளர் மற்றும் உபரிச் சொல் கணக்காளர் ஆகியோருக்கான காகிதத் தாள்கள் (அல்லது டெம்ப்ளேட் பயன்படுத்துவது சிறந்தது).

 

ஆன்லைன் சந்திப்பு

தொடர்புடைய பாத்திரங்கள் மறந்துவிட்டால், பின்வரும் இணைப்புகள் மற்றும் மெட்டீரியல்களை ஆன்லைன் சந்திப்பின்போது கையிருப்பில் வைத்திருப்பது சிறந்தது:

  • நேரம் கண்காணிப்பாளர் பயன்படுத்தக்கூடிய ஜூம் பின்னணிக்கான இணைப்புகள்
  • மொழி இலக்கணவாதி மற்றும் நேரம் கண்காணிப்பாளர் பயன்படுத்தக்கூடிய டெம்ப்ளேட்கள் மற்றும் பின்னணியை உருவாக்கும் பலனளிக்கும் உடைமைகள் உருவாக்குனருக்கான  இணைப்புகள்
  • ஒவ்வொரு செயல்திட்டம் மற்றும் பாத்திரத்திற்கான மதிப்பீட்டுத் தாள்களின் முன்-உருவாக்கப்பட்ட PDF பதிப்புகள். (பாத்திரம் மற்றும் செயல்திட்டம் ஒவ்வொன்றின் பக்கத்திலிருந்து இவற்றை தானாக உருவாக்கலாம்)
  • பொது கருத்து படிவத்திற்கு முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட PDF, மதிப்பீட்டாளர்கள் அல்லாத உறுப்பினர்கள் பேச்சாளர்கள் குறித்த கருத்துக்களை வழங்க இதனைப் பயன்படுத்தலாம்

 

 

சந்திப்பு

பகுதி I - தொடக்கம் 

1. வழக்கமாக,  சந்திப்பு உதவியாளர் அனைத்தையும் வரிசைப்படுத்தி, சந்திப்பை தொடங்கி வைத்து, அனைவரையும் வரவேற்று, பின்னர் சந்திப்புத் தலைவர் பாத்திரம் வகிக்கும் நபர் குறித்த சுருக்கமான அறிமுகத்தை அளித்து, அவரிடம் மேடையை வழங்குவார்.

2. சந்திப்பின் தலைவர் அனைவரையும் வரவேற்பார். அப்போது சந்திப்பு தலைவர் செய்யக்கூடிய சில நல்ல விஷயங்கள்:

  • அனைவரையும் தங்கள் மொபைல் போன்களை அணைத்து வைக்குமாறு நினைவூட்ட வேண்டும். ஆன்லைன் சந்திப்புகளுக்கு, இது தவிர, இடையூறு விளைவிக்கக்கூடிய சாத்தியமான ஆதாரங்களை அணைத்துவிட்டு, அவர்கள் இருக்கும் அறையின் கதவை மூடி விடுமாறு கேட்கவும்.
  • சொற்பொழிவுகளின்போது அறையில் குறுக்கே நடக்க வேண்டாம் என்று அனைவருக்கும் நினைவூட்ட வேண்டும்.
  • ஆன்லைன் சந்திப்புகளில், பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கத்தை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டவும். சந்திப்பின் போது யாரும் வாகனம் ஓட்டவோ அல்லது பிற ஆபத்தான செயல்களை செய்யவோ கூடாது என்பதே இதன் பொருள். அனைவரும் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும், இறுதியாக, அனைவரும் எப்போதும் தங்கள் கேமராக்களை ஆனில் வைத்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் சிறப்பு விருந்தினர்கள் இருந்தால், Agora Speakers International மற்றும் கிளப், அதன் நோக்கம், பணி மற்றும் நாம் என்ன செய்கிறோம், எந்த வழியில் செய்கிறோம் என்பதைப் பற்றிய பொதுவான விவரத்தை வழங்கவும்.
சிறப்பு விருந்தினர்களுக்கு எப்போதும் தெரிவிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சந்திப்பு என்பது சுயாதீனமான வடிவத்தில் எல்லோரும் பேசும் சந்திப்பல்ல, இது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும், மக்கள் தானாக முன்வந்து குறிப்பிட்ட பாத்திரங்களைச் செய்யும் சந்திப்பு. இது Agora சந்திப்புகள் பற்றி விருந்தினர்களுக்கு பொதுவாக இருக்கக்கூடிய தவறான கருத்துக்களை போக்குவதற்கு உதவுகிறது
 
  • சந்திப்பு வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு நபர்கள் பொறுப்பாக இருப்பர்.
  • பாத்திரங்களும் பிரிவுகளும் குறிப்பிட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளன, அவை ஆன்லைன் மெட்டீரியல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • உறுப்பினர்கள் தானாக முன்வந்து பாத்திரங்களை ஏற்றுக் கொள்வர், மேலும் யார் வேண்டுமானாலும் எந்த பாத்திரத்திற்கு வேண்டுமானாலும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் வகிக்கும் பாத்திரங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் - இன்று சந்திப்பு தலைவராக இருக்கும் ஒரு நபர், அடுத்த சந்திப்பில் வேறு பாத்திரம் வகிப்பார்.
  • பங்காற்றும் அனைவரும் மதிப்பீடு செய்யப்படுவர், இதன் மூலம் அனைவரும் மேம்படுத்திக் கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் முடியும்.

சில நேரங்களில் அறிமுகத்தின் போது இந்த அம்சங்களை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவதும் சிறந்த மதிப்பாக இருக்கும்.
  • சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தந்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் எழுந்து நின்று பார்வையாளர்களுக்கு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும். வழக்கமாக, சந்திப்பின் தலைவர் "தங்களுக்கு எப்படி எங்களைத் தெரியும்?" அல்லது "உங்களை இங்கு அழைத்து வந்தது எது?" என்பது போன்ற எளிய கேள்விகளைக் கேட்கலாம். 
இவ்வாறு அழைப்பு விடுப்பதை சில விருந்தினர்கள், அந்த இடத்திலேயே தங்களைப் பற்றி 20 நிமிட சொற்பொழிவை நிகழ்த்த வேண்டுமென்று குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பின் தலைவர் முழு சந்திப்பிற்கும் இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற தவறான பேச்சுக்களை குறுக்கிட வேண்டும்.

 

பகுதி II - மதிப்பீட்டு குழு

3. சந்திப்பின் தலைவர் 1-2 நிமிடங்களுக்கு நேரம் கண்காணிப்பாளருக்கு மேடையை வழங்குவார், அவர் தனது பாத்திரம், நேரம் ஏன் முக்கியம், நேர சமிக்ஞைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்குவார்.

4. சந்திப்பின் தலைவர் 1-2 நிமிடங்களுக்கு  மொழி இலக்கணவாதிக்கு மேடையை வழங்குவார், அவர் தனது பாத்திரம் மற்றும் அவர் பார்க்க போகும் விஷயங்களை விளக்குவார்.

5. சந்திப்பின் தலைவர் 1-2 நிமிடங்களுக்கு உபரிச் சொல் கணக்காளருக்கு மேடையை வழங்குவார், அவர் தனது பாத்திரம், உபரிச் சொற்களைப் பயன்படுத்தாததன் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் சில எடுத்துக்காட்டுகளை விளக்குவார்.

சில சந்திப்புகளில், மொழி இலக்கணவாதி மற்றும் உபரிச் சொல் கணக்காளர் பாத்திரங்கள் இரண்டும் ஒரே நபரால் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஒருவர் "அன்றைய நாளின் வார்த்தையை" அறிமுகப்படுத்தலாம். மனப்பாடம் செய்து பேசுவதைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக மக்கள் பேசும்போது மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு பேசுவதற்கு  பயிற்சி அளிப்பதே அன்றைய நாளின் வார்த்தை உடைய குறிக்கோளாகும்.

பகுதி III- செயல்திட்டங்கள்

6. செயல்திட்டம் ஒவ்வொன்றுக்கும், சந்திப்பின் தலைவரானவர்:

  • சொற்பொழிவின் நோக்கங்களை விளக்க சொற்பொழிவு மதிப்பீட்டாளரை அழைப்பார்
  • சொற்பொழிவு நிகழ்த்த பேச்சாளரை அழைப்பார்
  • பார்வையாளர்களுக்கு 1-2 நிமிடங்களை வழங்குவார், அதன்மூலம் எல்லோரும் பேச்சாளர் குறித்த தங்கள் கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க முடியும்.
அனுபவமில்லாத பேச்சாளருக்கு முன்பாக சிறப்பாக செயல்படும் திறன் உடையோர் பேசுவதைத் தவிர்ப்பதற்காக கஷ்டமான நிலை அதிகரிக்கும் வரிசையில் செயல்திட்டங்களை வரிசைப்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

7. தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகளின் பகுதி நிறைவடைந்ததும், சந்திப்பின் தலைவர் அடுத்த பகுதியைத் தொடர்வதற்காக உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் ஒருங்கிணைப்பாளருக்கு மேடையை வழங்குவார். வழக்கமாக, இந்தப் பகுதி சுமார் 15 நிமிடங்கள் நடக்கும், இதில் ஒவ்வொரு உடனடித் தலைப்புக்கான பதிலும் 1-2 நிமிடங்களுக்குள் இருக்கும்.

கிளப் இந்த மாதிரியைக் கொண்டிருந்தால், குறுகிய இடைவெளி விடுவதற்கு இது ஒரு நல்ல தருணம், ஏனெனில் மதிப்பீட்டாளர்கள் தங்கள் மதிப்பீடுகளை நிறைவு அதிக நேரம் கிடைக்கும். மேலும், சில கிளப்புகள் சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த உடனடித் தலைப்புக்கான பதிலுக்கு வாக்களிக்க விரும்புகின்றன. அனைவரும் வாக்களிக்கவும், தங்கள் வாக்குகளை சேகரிக்கவும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வாக்களிக்கும் அமர்வு இருந்தால், பேச்சாளர்களின் பெயர்கள் மற்றும் உடனடித் தலைப்பு பகுதியின் பங்கேற்பாளர்கள் அனைவரின் பெயர்களையும் திரும்ப வாசிக்க வேண்டும் (, அவர்களின் பெயர்களை எழுதுவது சிறந்ததாக இருக்கும்).

பகுதி IV - சொற்பொழிவு மதிப்பீடுகள்

8. முந்தைய பகுதி முடிந்த பிறகு, சந்திப்பு மதிப்பீட்டாளர் சொற்பொழிவு மதிப்பீட்டாளர்களை அவர்களின் மதிப்பீடுகளை வழங்குமாறு அழைப்பார், ஒவ்வொரு மதிப்பீடும் 3-5 நிமிடங்கள் அளவு இருக்கும்.

9. அனைத்து சொற்பொழிவு மதிப்பீடுகளும் வழங்கப்பட்ட பிறகு,  உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் மதிப்பீட்டாளர் மேடைக்கு வந்து தனது அறிக்கையை அளிப்பார். இந்த மதிப்பீடு சுமார் 5-7 அளவு ஆகும்

10. விருப்பத்திற்குரியது. உங்கள் கிளப்பில் கவனம் குறித்த மதிப்பீட்டாளர் இருந்தால், இப்போது அந்த பாத்திரத்திற்கு தனது பங்கை வழங்கிட நல்ல வாய்ப்பாக இருக்கும்.

பகுதி V - தொழில்நுட்ப ரீதியான மதிப்பீடுகள் மற்றும் நிறைவு

11. முந்தைய பகுதி முடிந்ததும், உபரிச் சொல் கணக்காளர், மொழி இலக்கணவாதி மற்றும் நேரம் கண்காணிப்பாளர் ஆகியோர் தங்கள் அறிக்கைகளை 1-2 நிமிடங்களுக்கு முன்வைப்பார்கள், வழக்கமாக அவர்கள் சந்திப்பின் ஆரம்பத்தில் பங்கேற்ற வரிசைக்கு தலைகீழான முறையில் வருவார்கள்.

12. இறுதியாக,  சந்திப்பு மதிப்பீட்டாளர் சந்திப்பு பற்றியும் அனைத்து மதிப்பீட்டாளர்கள் பற்றியுமான ஒட்டுமொத்த மதிப்பீட்டை முன்வைப்பார். இந்தப் பகுதி பொதுவாக 5-7 நிமிடங்கள் நடைபெறும்.

13. சந்திப்பு தலைவர் அறிவிப்புகளைச் செய்ய வேண்டி இருப்பவருக்கு (குறிப்பாக கிளப் அலுவலர்களுக்கு) மேடையை வழங்குவார்.

சந்திப்பின் தலைவர் விருந்தினர்களிடம் அவர்களின் கருத்துக்கள், சந்திப்பு அவர்களுக்கு எவ்வாறிருந்தது போன்றவற்றைப் பற்றி கேட்க இது ஒரு நல்ல தருணம்.

14. சந்திப்பின் தலைவர் சந்திப்பு உதவியாளருக்கு மேடையை வழங்குவார், அவர் சந்திப்பை நிறைவு செய்து வைப்பார்.