சிறப்பு விருந்தினர்கள்

கிளப்புகள் என்பது உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் நட்பு ரீதியான சூழல்ல, சிறப்பு விருந்தினர்களாக வருகை தருபவர்களுக்கும் நட்பு ரீதியான சூழலாக இருக்க வேண்டும்.

Agora Speakers எதைப் பற்றியது என்பதை அறிந்துக் கொள்ளவும், அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கவும் கிளப் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். ஒரு கிளப்பிற்கு யாரேனும் விருந்தினரை அழைக்கலாம், சிறப்பு விருந்தினர்கள் உங்கள் கிளப் விவரங்களைப் பற்றி யாரிடமாவது கேட்டு, எதிர்பாராத விதமாக கூட வருகை தரலாம் . சிறப்பு விருந்தினர்கள் தனியாகவும் வரலாம் அல்லது மற்ற சிறப்பு விருந்தினர்களுடனும் வரலாம்.

சிறப்பு விருந்தினர்களை உங்கள் கிளப் எப்படி கவனித்து, உபசரிக்கிறதோ, அப்படித்தான் அவர்கள் உங்கள் மொத்த அமைப்பை பற்றி யோசிக்கவும், பேசவும், எழுதவும் செய்வார்கள். நல்ல வாய்மொழி பாராட்டுக்களை விட சிறந்தது எதுவுமில்லை. மேலும் நிச்சயமாக, முழு அமைப்பின் நலனிற்கும் மோசமான வார்த்தைகள் இடம்பெறும் கருத்துக்களை விட மோசமானது எதுவும் இல்லை.

விதிவிலக்கான சூழ்நிலைகள் நிலவினால் தவிர (சந்திப்பு இடத்தில் போதுமான உடல் இடம் இல்லாமை அல்லது பிற பாதுகாப்பு காரணங்களுக்காக), Agora Speakers துணை சட்டங்கள்படி  அனைத்து விருந்தினர்களையும் பொது கிளப்புகளின் சந்திப்புகளில் அனுமதிக்க வேண்டும்.

சிறப்பு விருந்தினர்களும் வருங்கால உறுப்பினர்களாக மாறலாம். உண்மையில் சொல்லப்போனால், சந்திப்புகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவதே உறுப்பினர் வளர்ச்சிக்கு முக்கிய வழி என்பதை அனுபவம் சொல்லுகிறது.

சிறப்பு விருந்தினர்களை கவனிப்பது

விருந்தினர்களுக்கு, குறிப்பாக அவர்கள் தனியாக வந்தால், கிளப் சந்திப்பு ஆரம்பத்தில் மிகவும் அச்சுறுத்தும் சூழலாக இருக்கலாம். பல புதிய முகங்கள், அவர்கள் யாரையும் அறிந்திடாத புதிய இடம், சில சமயங்களில் முழு விஷயம் என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது என பல விஷயங்களுக்காக பலர் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கலாம், இதுபோன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வது கூட மிகவும் மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயமாக அவர்களுக்கு இருக்கலாம்.

 

சிறப்பு விருந்தினர்கள் நன்கு கவனிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது பங்கேற்கும் உறுப்பினர் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். "சிறிய அளவில் நெருங்கிய வட்ட" நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, புதிய நபரைப் புறக்கணிக்கும் ஒரு இடத்தில் விருந்தினர் ஒருவர் புதிதாக நுழைவதை விட மோசமான விஷயம் எதுவும் இல்லை.

 

புதிதாக யாரையாவது பார்த்தால், அவரை அணுகி வரவேற்று, உங்களுக்குத் தெரிந்த மற்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து, சந்திப்பு தலைவரிடம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்துங்கள். சந்திப்பு தலைவர் சிறப்பு விருந்தினர்களின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வது நல்லது.

சில கிளப்புகள் விருந்தினர்களை சந்திப்பின் தொடக்கத்தில் மற்ற பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளும்படி கேட்க விரும்புகின்றன. அவர்கள் இதனை அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே செய்யலாம், முன்னால் சென்று சொல்லத் தேவையில்லை.

இன்னும் சில சூழலில், விருந்தினர்கள் யார் என்பது சந்திப்பு தலைவருக்கு ஏற்கனவே தெரியும், எனவே சந்திப்பின் ஆரம்பத்தில், அவர் பின்வருமாறு சொல்லலாம்

"நாம் தொடருவதற்கு முன், விருந்தினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்கள் நம்மை எப்படி தெரிந்துக் கொண்டார்கள் என்றும், சந்திப்பிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரிவிக்குமாறு விரும்புகிறேன். ஜான் வருகை தந்திருக்கிறார். ஜான், தயவுசெய்து எழுந்து உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? நீங்கள் எங்களைப் பற்றி எப்படி தெரிந்துக் கொண்டீர்கள்?"

இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், சந்திப்பு தலைவருக்கு யார் விருந்தினர், யார் விருந்தினர் அல்ல என்பது பற்றி தெரியாது. இந்த வழக்கில், விருந்தினர்களை தங்கள் கைகளை உயர்த்தச் சொல்லுங்கள், பின்னர், அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்:

"இன்று சிறப்பு விருந்தினர்களாக யாரேனும் வருகை தந்து இருக்கிறார்களா? நீங்கள் முதல் முறையாக எங்கள் கிளப்பிற்கு வருகை தந்திருந்தால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். நன்றி!
நாம் தொடருவதற்கு முன், விருந்தினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்கள் நம்மை எப்படி தெரிந்துக் கொண்டார்கள் என்றும், சந்திப்பிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரிவிக்குமாறு விரும்புகிறேன். (யாரேனும் ஒரு சிறப்பு விருந்தினரை சுட்டிக்காட்டி) அவருடன் ஆரம்பிக்கலாம். தயவுசெய்து எழுந்து உங்களைப் பற்றியும், நீங்கள் எங்களைப் பற்றி எப்படி தெரிந்துக் கொண்டீர்கள் என்றும் சொல்ல முடியுமா?
"

சந்திப்பில் சில பகுதிகள் உள்ளன - உடனடித் தலைப்பு சொற்பொழிவுகள் போன்றவை - கூச்ச சுபாவமுள்ள  சிறப்பு விருந்தினர்களுக்கு இது கஷ்டமான விஷயமாக இருக்கலாம் அல்லது அவர்கள் தீவிர மேடைப் பயத்தைக் கொண்டிருக்கலாம். இந்தப் பிரிவுகளில் விருந்தினர்கள் பங்கேற்க வேண்டுமா என்பதை ஒவ்வொரு கிளப்பும் தீர்மானிக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் அவ்வாறு இருந்தால், விருந்தினர்கள் மிகவும் வெட்கப்பட்டால் அல்லது மிகவும் பதட்டமாக இருப்பதைக் கண்டால், அவர்களை ஒருபோதும் பேசும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்.

 

 

சந்திப்பின் முடிவில், தங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று விருந்தினர்களிடம் கேட்பது நல்லது. விருந்தினரின் கருத்து எப்போதும் புதிய கருத்தாக இருக்கும்.

சந்திப்பு நிறைவடைந்ததும், உறுப்பினருரிமையின் துணைத் தலைவர், சிறப்பு விருந்தினர்களிடம் பேசி, அவர்கள் சந்திப்பை விரும்பினார்களா, அவர்கள் சேர விரும்புகிறார்களா என்று வெளிப்படையாகக் கேட்க வேண்டும். கிளப் உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினரிடம் தங்களுக்கு இந்த கிளப்பில் சேருவதற்கு ஆர்வம் உள்ளதா என்று கேட்கும் இந்த மிகச் சிறிய கடைசி வழிமுறையை கடைப்பிடிக்காமல் போனால் பல புதிய உறுப்பினர்கள் சேருவதற்கான வாய்ப்புகள் தடைபடும். அவர்கள் சேரத் தயாராக இல்லை என்றால், விருந்தினர் புத்தகத்தை வைத்திருப்பது ஒரு நல்ல நடைமுறையாகும், அதில் விருந்தினர்கள் தங்கள் பெயர்களையும் புதிய சந்திப்புகள் அல்லது புதிய முன்னேற்றங்கள் பற்றி தெரிவிக்க தொடர்புத் தகவல்களையும் வழங்கலாம். இந்த முறையில் விருந்தினர்களிடமிருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது அல்லது கிளப்பிற்கு வெளியே பகிரப்படக்கூடாது. பல நாடுகளில் குறிப்பிட்ட தரவு-பாதுகாப்பு சட்டங்களும் உள்ளன, இதற்கு இணங்க வேண்டியது கிளப்பின் பொறுப்பாகும்.

கிளப்பில் சேருவதற்கான கோரிக்கைகள் எப்போதும் கணிவான முறையில் இருக்க வேண்டும்; விருந்தினருக்கு  அழுத்தம் கொடுக்கும் படியாகவோ அல்லது சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலோ அது ஒருபோதும் இருக்கக்கூடாது.

 

சிறப்பு விருந்தினர் பேக்குகள்

பிரிண்ட் வடிவில் கிளப் மற்றும் Agora மெட்டீரியல்கள் அடங்கிய "விருந்தினர் பேக்" கிளப்புகளில் வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விருந்தினர் பேக்கில் இடம்பெறுவன, உதாரணமாக:

  • Agora Speakers International மற்றும் அதன் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் குறித்த அறிமுகம்
  • கிளப் சாசனம் மற்றும் துணை விதிகள் அல்லது சட்டங்கள்
  • சந்திப்பின் அமைப்பு மற்றும் சந்திப்பு பாத்திரங்களின் விளக்கம்
  • மாதிரி நிகழ்ச்சி நிரல்
  • முதல் மூன்று செயல்திட்டங்கள்
  • கிளப் மற்றும் Agora கட்டணங்களை விவரிக்கும் ஒரு கிளப் உறுப்பினருரிமை படிவம்
  • பொதுவில் சொற்பொழிவாற்றுவது பற்றி சில குறிப்புகள்
  • பின், ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் வணிக பொருட்கள்
  • அனைத்து கிளப் அலுவலர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு தகவல் இடம்பெறும் அட்டை
  • கிளப் தகவல் மற்றும் சந்திப்பு அட்டவணை இடம்பெறும் கிளப்பின் வணிக அட்டைகள்

சந்திப்பின் தொடக்கத்தில் வருகை தரும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் VPM (அல்லது அவர் நியமிக்கும் உறுப்பினர்) சிறப்பு விருந்தினர் பேக்குகளை வழங்கலாம்.