கல்வி துறையின் துணைத் தலைவர், (VPE) கிளப்பின் கல்வி ரீதியான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர் ஆவார், கிளப் சந்திப்புகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல வித்தியாசமான பொறுப்புகளை இவர் கொண்டுள்ளார்.

பெரிய கிளப்புகளைப் பொறுத்தவரை, வழக்கமாக கல்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துணை தலைவர் இருப்பது வசதியானதே.

கல்வி ஆண்டைத் திட்டமிடுவது

Agora கல்வித் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட பல, பல கல்வி ரீதியான செயல்பாடுகள் உள்ளன, இந்தப் பட்டியல் இன்னும் நீண்டுக் கொண்டே செல்கிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தையும் ஒரே சந்திப்பில் கொண்டிருப்பது சாத்தியமான விஷயமல்ல. நிலையான செயல்பாடுகளை சந்திப்புகளில் கொண்டிருப்பது எளிதான விஷயமாக இருப்பதால், அதிகம் கல்வி சம்பந்தப்பட்டதாகவும், இன்னும் உற்சாகமானதாகவும் இருக்கும் புதிய செயல்பாடுகளை முயற்சிக்க நாம் ஒருபோதும் துணிவதில்லை. இது சலிப்பை ஏற்படுத்தக்கூடிய, மீண்டும் மீண்டும் அதே சந்திப்பாகவும், மூத்த உறுப்பினர்களை கவராத வகையிலும் இருக்கிறது.

கல்வி துறையின் துணைத் தலைவராக (VPE ஆக), கிளப்பின் கல்வி ஆண்டைத் திட்டமிடுவதற்கு நீங்களே பொறுப்பு - நீங்கள் எந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறீர்கள், அவற்றின் எண்ணிக்கை குறித்து தீர்மானிப்பது என்பன போன்ற விஷயங்களுக்கு நீங்களே பொறுப்பு. அவ்வாறு செய்ய, எல்லா செயல்பாடுகளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும், அதற்கு எவ்வளவு தயார் நிலை தேவைப்படுகிறது என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களும் Agora அனுபவம் குறித்த சில நிலைத்தன்மையை உறுதிப்படுத்த சில குறைந்தபட்ச செயல்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும், ஒவ்வொரு சந்திப்பிலும் சில பாத்திரங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க. இவை செயல்பாட்டு தேவைகள் பக்கத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வ திட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உண்மையில் சொல்லப்போனால், புதிய பாத்திரங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்வது, வடிவமைப்பது மற்றும் பரிசோதனை செய்துப பார்ப்பது போன்ற விஷயங்களை நீங்கள் செய்துப் பார்க்க வேண்டுமென்று நாங்கள் ஊக்குவிக்கிறோம், அவை கல்வி நோக்கத்திற்காக வினைபுரியும் வரையிலும், Agora Speakers International உடைய ஒட்டுமொத்த பணி மற்றும் குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் வரை. பிரத்யேக பாத்திரங்களை வரையறுப்பது பற்றி நீங்கள் இங்கே மேலும் வாசிக்கலாம்.

ஆண்டு முழுவதும் நீங்கள் எத்தனை பெரிய அளவிலான செயல்பாடுகளை கொண்டிருக்க விரும்புகிறீர்கள், மேலும் எத்தனை அதிக நேரம் பிடிக்கும் செயல்பாடுகளை கொண்டிருக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றியுமான பொதுவான கண்ணோட்டத்துடன் தொடங்குங்கள் (அடிப்படையில் செயல்படுத்த 20 நிமிடங்களுக்கு மேல் ஆகும், பொதுவாக மொத்த சந்திப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் செயல்பாடுகள்). உதாரணத்திற்கு:

  • 5 விவாதங்கள்
  • 10 குறுக்கு சொற்பொழிவாற்றுபவர்
  • 10 கருத்தரங்குகள்
  • 5 பயிற்சி பட்டறைகள்

வருடாந்திர சந்திப்புகள் முழுவதும் அந்த நடவடிக்கைகளை பிரித்து திட்டமிட்டு, பின்னர் மீதமுள்ள நேரத்தையும் சந்திப்புகளையும் சிறிய செயல்பாடுகள் கொண்டு நிரப்பவும்.

உங்கள் வருடாந்திர திட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் சூழ்நிலைகளுக்கு இடமளிக்கும் வகையில் சில நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும், அது கிளப் சந்திப்பு தடைபடுவதைத் தடுக்கும், மேலும் ஒப்பீட்டளவில் உங்கள் திட்டங்கள் கடினமான முறையில் இருக்க வேண்டும் - 5 மாதங்களுக்கு முன்பே 21 ஆம் சந்திப்பில், 4 தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் 4 குறுக்குச் சொற்பொழிவு பங்கேற்பாளர்கள் இடம் பெற வேண்டும் என்று கணிக்க இயலாது.

உங்கள் திட்டமானது பின்வரும் முறையில் இருக்க வேண்டும்:

 

வருடாந்திர திட்டத்தை தயார் செய்வது மிகவும் நல்லது என்றாலும், எப்போதும் உங்கள் உறுப்பினர்களிடமும் கேளுங்கள்: ஒருவேளை நீங்கள் அந்த வருடத்தில் 10 குறுக்குச் சொற்பொழிவுகள் மற்றும் 6 கருத்தரங்குகள் திட்டமிட்டிருக்கலாம், முதல் காலாண்டிற்குப் பிறகு கருத்தரங்குகள் உறுப்பினர்களுக்கு அதிகம் பிடித்திருப்பதைக் காண்கிறீர்கள், எனவே உறுப்பினர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பாடுகளை மாற்றியமைப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

 

உங்கள் கிளப்பில் ஆன்லைன் வசதி இருந்தால், கல்வித் செயல்பாடுகளை விக்கி விளக்கத்துடனான இணைப்புகளுடன் கல்வித் திட்டத்தை ஆன்லைனில் வெளியிடுவது மிகவும் வசதியானதாக இருக்கும்.

 

சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களை வரையறுப்பது

கிளப் கல்வித் துறையின் துணைத் தலைவராக, ஒவ்வொரு சந்திப்பிற்குமான நிகழ்ச்சி நிரலை நிறுவுவதற்கான பொறுப்பும் உங்களுக்கே உள்ளது. இதன் பொருள் - சந்திப்பில் என்னென்ன பிரிவுகள் இடம்பெறப் போகின்றன, அவை சந்திப்பில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட உள்ளன, அவற்றில் எத்தனை உள்ளன என்பதை தீர்மானிப்பது உங்கள் பொறுப்பாகும். உதாரணத்திற்கு:

புதன்கிழமை 23 சந்திப்பு
இடம்பெறும் பாத்திரங்கள்
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #1
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #1 மதிப்பீட்டாளர்
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #2
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #2 மதிப்பீட்டாளர்
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #3
தயார் செய்யப்பட்ட சொற்பொழிவு #3 மதிப்பீட்டாளர்
உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் ஒருங்கிணைப்பாளர்
உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் மதிப்பீட்டாளர்
இன்று நாம் பார்வையிட இருப்பது பேச்சாளர் #1 
இன்று நாம் பார்வையிட இருப்பது பேச்சாளர் #2 
நேரம் கண்காணிப்பாளர்
மொழி இலக்கணவாதி
உடல் பாவனை மதிப்பீட்டாளர்
நூதன சிந்தனை மதிப்பீட்டாளர்
கவனம் குறித்த மதிப்பீட்டாளர்
சந்திப்பு மதிப்பீட்டாளர்
VPE ஆக நிகழ்ச்சி நிரல் பாத்திரங்களை யார் வகிப்பது என்று தீர்மானித்து அதனை நிரப்புவது உங்கள் பணி அல்ல (இந்த பாத்திரங்களை வகிக்க தன்னார்வத்தின் பேரில் யார் முன்வருகிறார்கள் என்று கண்டறியது உங்கள் பணியல்ல) - அது சந்திப்பு தலைவருடைய பொறுப்பு. நிச்சயமாக, நீங்கள் விரும்பினால் அவருக்கு உதவலாம், ஆனால் அது முதன்மையாக அவர்களின் பணியாகவே இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சந்திப்பை ஏற்பாடு செய்வது ஒரு சந்திப்புத் தலைவர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒரு பகுதியாக இருக்கிறது.

எவ்வாறாயினும், சந்திப்பிற்கு முன்னதாக ஒரு சந்திப்புத் தலைவர் எப்போதும் நியமிக்கப்படுவதை (முந்தைய சந்திப்பின் முடிவிலேயே)  நீங்களே உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள், இதன் மூலம் அவர்கள் நிகழ்ச்சி நிரலை விளம்பரம் செய்து, பங்கேற்க விரும்பும் மக்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறலாம், மேலும் மற்ற பாத்திரங்களுக்கான தன்னார்வலர்களையும் தீவிரமாக தேடலாம்.

நேரம் கண்காணிப்பாளர், மொழி இலக்கணவாதி, உதவியாளர் போன்ற சில உதவி பாத்திரங்களை நிரப்ப சந்திப்பின் தலைவர்கள் தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டால் - மிகவும் பிரபலமான பாத்திரங்களுக்கான பங்கேற்பு தேவைகளை அறிமுகப்படுத்த நீங்கள் மற்ற அதிகாரிகளுடன் பேசலாம். உதாரணமாக, "தயார் செய்யப்பட்ட சொற்பொழிவை வழங்குவதற்கு நீங்கள் கடைசியாக தயார் செய்யப்பட்ட சொற்பொழிவை வழங்கியதிலிருந்து நீங்கள் ஒரு உதவிப் பாத்திரத்தில் இருந்திருக்க வேண்டும்" என்பன போன்ற விதிமுறைத் தேவைகளை அறிமுகப்படுத்தலாம்.

புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்துவது

உறுப்பினருரிமையின் துணைத் தலைவருடன் இணைந்து பங்காற்ற வேண்டிய பொறுப்பும் கல்வியின் துணைத் தலைவருக்கு உள்ளது - அது புதிய உறுப்பினர்களை வசதியாக உணரச் செய்வதும், விரைவில் பங்கேற்கத் தொடங்க அவர்களை ஊக்குவிப்பதும் ஆகும். 

இருப்பினும், ஒவ்வொரு நபரும் அவர்களின் வேகத்தில் முன்னேறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து சொல்ல முடியும், ஆனால் அவர்கள் விரும்பாத ஒரு பாத்திரத்திற்கு யாரையும் ஒருபோதும் நீங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:

  • கூச்ச சுபாவமுள்ள உறுப்பினர்களிடம் சென்று அதே வரிசை அமைப்பில் சென்ற பிற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
  • அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் "ஆரம்ப" மற்றும் "பிந்தைய கால" வீடியோக்களைப் பகிரவும், இவ்வாறு செய்வதன் மூலம் புதியவர்கள் மாற்றத்தைக் காணலாம்.
  • அவர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்து, நேரம் கண்காணிப்பாளர் அல்லது மொழி இலக்கணவாதி போன்ற குறிப்பிட்ட எளிதான பாத்திரங்களை எடுக்க பரிந்துரைக்கவும்.

 

உறுப்பினர்களின் கல்வி ரீதியான முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வது

சந்திப்புகளானது ஒரு பெரிய சமூகக் கூறுகளைக் கொண்டிருந்தாலும், ஒரு VPE ஆக, Agora என்பது கல்வி ரீதியான ஒரு ஃபவுண்டேஷன் என்பதையும், எங்கள் கல்வித் திட்டங்கள் மைய கொள்கைகளை தவறாது பின்பற்றும் என்பதையும் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பல முறை உறுப்பினர்கள் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக துணை அல்லது மதிப்பீட்டு பாத்திரங்களில் சிக்கிக் கொள்கின்றனர்:

  • சொற்பொழிவுகளை தயார் செய்வதற்கு அவர்களுக்கு செலவிட போதுமான நேரம் இல்லாதிருக்கலாம் மற்றும் சந்திப்பிற்கு வெளியே வேலை செய்யாத பாத்திரங்களை விரும்பலாம் (உடனடித் தலைப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவை).
  • மதிப்பீடு செய்யப்படுவது குறித்து அவர்கள் பயப்படலாம்.
  • ஒரு செயல்திட்டத்திற்குத் தேவையான தொழில்நுட்பம் அல்லது கூறுகளைப் பயன்படுத்துவதற்கான அறிவு அவர்களுக்கு இல்லாதிருக்கலாம் (எடுத்துக்காட்டாக, "விளக்கக்காட்சி மென்பொருளைப் பயன்படுத்தும்" செயல்திட்டத்திற்கு).
  • அவர்களுக்கு சொற்பொழிவாற்றுவதற்கான யோசனைகள் இல்லாமல் இருக்கலாம்.
  • அவர்களின் கல்வி முன்னேற்றத்தில் அடுத்தது என்ன என்று அவர்கள் குழப்பத்தில் இருக்கலாம் அல்லது அதைப் பற்றிய சந்தேகம் கொண்டிருக்கலாம்.

யாரோ ஒருவர் அவர்களின் முன்னேற்றத்தில் ஸ்தம்பித்திருப்பதை நீங்கள் கவனித்தால், என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கவும். அவர்கள் தொடர்ந்து பயணிப்பதற்கு அவர்களை மெதுவாக ஊக்குவிக்கவும், சொற்பொழிவு யோசனைகள் மற்றும் பதட்டத்தை நிர்வகிப்பது குறித்த ஆவணங்களை சுட்டிக்காட்டவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்யவும், உறுப்பினர் உபகரணங்களுடன் எங்காவது பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யவும். இந்த செயல்பாடுகள் அனைத்தையும் உங்கள் மீது சாட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை: இம்மாதிரியான சிக்கலை நீங்கள் அடையாளம் கண்டுவிட்டால், உதவி மற்றும் பரிந்துரைகளுக்கு உங்கள் சக அலுவலர்களை அணுகவும்.

நீங்கள் நபர்களிடம் சவால் செய்தாலோ அல்லது "பார், மார்த்தா உங்களை விட 2 செயல்திட்டங்களில் பங்கெடுத்து முன்னிலையில் இருக்கிறார்" என கிண்டல் செய்தாலும், முன்னேற்றத்தை ஒரு பந்தயமாக மாற்றி விட வேண்டாம். நீங்கள் விரைந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. உறுப்பினர்கள் மெதுவாக ஆனால் சீராக முன்னேறுவதும், அவர்களின் அறிவை அனுபவத்தின் வாயிலாக உறுதியாக வைத்திருப்பதும் மிகவும் நல்லது.

நாள் முடிவில் புள்ளிகள்/சான்றிதழ்கள்/எதையாவது அடைய வேண்டுமென்று விரைந்து செல்வது தொழில்முறை உலகில் எதையும் சாதிப்பதற்கு உதவாது, நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய உண்மையான திறமைகளை நீங்கள் கற்றுக்கொள்வதில்தான் விஷயமிருக்கிறது.

 

கருத்தின் தரத்தை உறுதி செய்வது

Agora கல்வி முறையின் முக்கிய அம்சம் என்னவென்றால் அது சகாக்கள் தெரிவிக்கும் கருத்தேயாகும். கருத்தானது பயனுள்ளதாக இருக்க, பயனுள்ள கருத்து பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளையும் அவை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • கருத்து குறித்த ஆவணங்களை வாசிக்குமாறு உறுப்பினர்களை ஊக்குவிக்கவும்.
  • பொருத்தமற்ற ("எல்லாம் சரியாக இருந்தது") அல்லது விரோதமானது ("நீங்கள் எந்த அர்த்தத்தோடும் பேசவில்லை") அல்லது தலைப்புக்கு சம்பந்தமில்லாத ("நான் உங்களுடன் முற்றிலும் உடன்படவில்லை") கருத்துக்களை தவிர்ப்பதற்கு, ஒட்டுமொத்த கருத்துக்களின்  தரத்தை மேற்பார்வையிடவும்.
  • மதிப்பீடு குறித்து பயிற்சி பட்டறைகளை நடத்தவும்.
  • பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்த வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை ஆராய்ச்சி செய்து பகிர்ந்து கொள்ளவும்.
  • மதிப்பீட்டாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளை வழங்கவும்.

 

வழிகாட்டல் திட்டத்தை மேற்பார்வை செய்வது

அனைத்து கிளப்களிலும் வழிகாட்டல் திட்டம் இடம்பெற வேண்டும், இது புதிய உறுப்பினர்களை அதிக அனுபவமுள்ளவர்களுடன் இணைக்கிறது, இவை ஆரம்ப செயல்திட்டங்கள் வாயிலாக அவர்களுக்கு உதவக்கூடும், அத்துடன் கிளப் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் அவர்களை சிறப்பாக ஒருங்கிணைக்க உதவுகிறது.

உங்கள் கிளப் அப்போதுதான் சாசனம் செய்யப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் புதியவர்களாக இருந்தால், "அதிக அனுபவம் வாய்ந்த உறுப்பினராக" யாராலும் செயல்பட முடியாத சூழல்கள் இருந்தால், எங்கள் சமூக வலைப்பின்னல்கள் மூலம் பரந்து விரிந்திருக்கும் Agora சமூகத்தை தயங்காமல் அணுகவும், மற்ற உறுப்பினர்களை உங்கள் மிகவும் உறுதியான உறுப்பினர்களின் வழிகாட்டிகளாக செயல்படவும் கேளுங்கள், இதன் மூலம் அவர்கள் அதிக அனுபவமுள்ளவர்களாக ஆகிவிட்டால், அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்படலாம்.

எங்கள் ஆன்லைன் மேலாண்மை அமைப்பு முறைமை கிடைக்கும்போது, நீங்கள் அதை நேரடியாக VPE டாஷ்போர்டிலேயே செய்யலாம்.

 

பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்வது

பயிற்சி பட்டறைகள் என்பது எப்போதும் உறுப்பினர்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு செயல்பாடு. உங்கள் கிளப்பிற்குள்ளேயே பயிற்சி பட்டறைகளை நீங்கள் ஏற்பாடு செய்யலாம் - அதில் ஒரு Agora உறுப்பினர் ஒரு தலைப்பில் ஒரு விரிவான சொற்பொழிவை வழங்குவார், அல்லது உங்கள் கிளப்பில் பேச வெளிப்புற பேச்சாளர்களை அழைக்கலாம். இத்தகைய பேச்சாளர்களுக்கு கட்டணம் தேவைப்படுகிற சூழலில், தேவைப்பட்டால் நீங்கள் கிளப் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய உறுப்பினரின் வருகையைப் பொறுத்து, நீங்கள் சில பயிற்சி பட்டறைகளை அவ்வப்போது மீண்டும் நடத்த விரும்பலாம்:

  • கிளப் நடைமுறைகள்
  • Agora பேச்சாளர்களிடமிருந்து அதிகமான பலனைப் பெறுவது
  • பயனுள்ள மதிப்பீடுகள்
  • பதட்டத்தை நிர்வகிப்பது
  • உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளுக்கு பதிலளிப்பது
  • ஆன்லைன் தளத்தில் பணிபுரிவது

 

எச்சரிக்கை வார்த்தை

Agora Speakers அறிவியலில் உறுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள், உண்மையில் சொல்லப்போனால் அது எங்களது துணை விதிகளின் ஒரு பகுதியாகும். நாங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும் கல்வி ரீதியான செயல்பாடுகளும் உறுதியானதாகவும், சகாக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும், பலன் தரக்கூடிய ஆராய்ச்சியை மீண்டும் மீண்டும் செய்யக்கூடியதாகவும் உள்ளன. நிஜ உலகில் பலன் தரக்கூடியதாக நிரூபிக்கப்பட்ட, நம்பத்தகுந்த மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தவே உறுப்பினர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக, பொதுவாக இவ்வாறு நடப்பதில்லை. பொது சொற்பொழிவும்,  தலைமைத்துவ துறைகளும் சோதிக்கப்படாத, சந்தேகத்திற்குரிய மற்றும் சில நேரங்களில் வெளிப்படையான தவறான ஆலோசனைகள் நிறைந்துள்ளன. இந்த வகையான பொதுவான உள்ளடக்கம் மற்றும் குக்கீ அளவிலான அர்த்தமற்ற ஆலோசனையை மறுசுழற்சி செய்து, மறு பேக்கிங் செய்து ஒரு ஆசிரியராக உங்கள் தேவைக்கேற்ப புத்தகங்களைத் தயாரிக்கும் ஒரு முழுத் தொழில் துறையும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக, ஆராய்ச்சி உண்மையில் ஒரே கதையைச் சொல்லாதபோது பூஜ்ஜிய உபரி சொற்களைக் கொண்டிருக்க முயற்சிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் - உபரி சொற்கள் இல்லாதது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்கலாம். வலியுறுத்தும் சொற்பொழிவுகளுக்கு சரியான கட்டமைப்பாக மன்ரோவின் உற்சாகமூட்டும் வரிசை முறை அமைப்பு பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம், மேலும் இந்த அறிவுரை புத்தகத்திற்கு புத்தகம், பாடத்திற்கு பாடம், சொற்பொழிவுக்கு சொற்பொழிவு இடம்பெறுகிறது. உண்மையில் சொல்லப்போனால், மன்ரோவின் வரிசை முறை அமைப்பில் விசேஷம் எதுவும் இல்லை என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது  - உங்களிடம் தேவையான விஷயங்கள் இருக்கும் வரை மற்ற நிறுவன சொற்பொழிவு அமைப்பு முறைகளை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்சாகமூட்டுவதற்காக இது இல்லை என்று காட்டுகிறது.

உறுப்பினர்கள் தான் விரும்பும் ஏதேனும் விஷயம் குறித்து சுதந்திரமாக சொற்பொழிவுகளை தயார் செய்து பேசலாம், அது எவ்வளவு கிரேசியான விஷயமாக இருந்தாலும் கூட (அது சொற்பொழிவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களைக் கொண்டிருக்கும் வரை), பயிற்சி பட்டறைகள் என்பது சமச்சீரற்ற செயல்பாடுகளாக இருக்கிறது, இதில் ஒரு நபர் மற்றவர்கள் உண்மை என்று கருதும் அறிவை வெளிப்படுத்தும் ஒருவரின் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்.

நாம் பயிற்றுவிக்கும் துறைகள் பற்றிய போலியான அல்லது விஞ்ஞானமற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி பட்டறைகள் அனுமதிக்கப்படாது.

வெளிப்புற பேச்சாளர்களையும் அவற்றின் பயிற்சி பட்டறைகளின் உள்ளடக்கத்தையும் சரிபார்க்க TEDx உள்ளடக்க வழிகாட்டுதல்களை (குறிப்பாக "மோசமான அறிவியல்" பிரிவு) பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். மோசமான அறிவியலைக் கண்டறிவது பற்றி TEDx உடைய இந்த சமூக கடிதத்தையும் பார்வையிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

 

கல்வித் திட்டம் தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது

கல்வித் திட்டம் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் அணுக வேண்டிய நபர் VPE.

எல்லா நல்ல தலைவர்களும் "தலைமை வகிப்பது சேவை செய்வதற்கே" என்பதைப் புரிந்துகொள்கிறார்கள், எனவே நீங்களே சென்று, அவர்களிடம் ஏதேனும் கேள்விகளைக் கேட்குமாறு அவர்களை ஊக்குவிக்கவும். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. உங்களுக்குத் தெரியாது என்றும், அது குறித்து விஷயங்களை பெற்று உங்களிடம் திரும்பி வருகிறேன் என்று அவர்களிடம் ஒப்புக்கொள்வது முற்றிலும் சரியானதே. Agora பற்றி  உங்களுக்கு பதில் தெரியாத  ஏதேனும் கேள்விகளை நீங்கள் எதிர்கொண்டால், அதற்கான பதிலினைப் பெற எங்களுக்கு அது குறித்து எழுதி அனுப்புங்கள்.