மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவராக, கிளப்பின் வலிமை, அதன் உறுப்பினருரிமை மற்றும் கிளப்பின் வெளியே கிளப் உறுப்பினர்களின் சொற்பொழிவாற்றும் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை அதிகரிக்க கிளப்பின் மார்க்கெட்டிங் மற்றும் ஊடகக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

 

மார்க்கெட்டிங் பட்ஜெட் மற்றும் மார்க்கெட்டிங் திட்டத்தை உருவாக்குவது

உங்கள் கிளப்பை முன்னெடுத்துச் செல்ல, நீங்கள் பல விஷயங்களைச் செய்யலாம், ஆனால் எப்போதும் போல, நேரம் குறைவு, நிதி அதைவிட குறைவு (அல்லது இல்லாமல் கூட இருக்கலாம்), எனவே எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

நிச்சயமாக, "எதில் கவனம் செலுத்த வேண்டும்" என்பது நீங்கள் எதை (எந்த இலக்குகளை) அடைய விரும்புகிறீர்கள் என்பதையும், அந்த இலக்குகளை நோக்கிய ஒவ்வொரு செயல்பாடுகளும் எவ்வாறு சீரமைக்கப்பட்டவை அல்லது பொருத்தமானவை என்பதையும் பொறுத்தது. நீங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம். நீங்கள் செல்லும் திசையை நீங்கள் எப்போதும் மாற்றிக்கொண்டே இருந்தால், நீங்கள் நிறைய வெளிப்படையான விஷயங்களைச் செய்வீர்கள், ஆனால் அந்த சுழற்சியில், இறுதியில், நீங்கள் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்பீர்கள்.

மார்க்கெட்டிங் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த சில நடைமுறை வழிகாட்டுதல் இதோ இங்கே:

1. இந்தக் கட்டுரையையும் அதில் உள்ள யோசனைகள் அனைத்தையும் முழுமையாக வாசியுங்கள்.

2. கிளப் இப்போது எந்த இடத்தில் இருக்கிறது, அது என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறது என்பதை எழுதுங்கள். உதாரணத்திற்கு:

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு பார்வையாளர்களை மட்டுமே நாங்கள் பெறுகிறோம் - இது கிளப்பின் வளர்ச்சியை பாதிக்கிறது, மேலும் கிளப் செழுமை அடைவதைக் குறைக்கிறது.

3. அளவீடு மூலம் இயக்கப்படும் குறிக்கோள்களின் தெளிவான தொகுப்பை அமைக்கவும் ("ஸ்மார்ட்" குறிக்கோள்கள் குறித்த குறிப்பிட்ட கட்டுரையை பார்வையிடவும்) இவை இரண்டு குறிக்கோள்களாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக:

1. இந்தப் பருவத்தின் முடிவில் ஒவ்வொரு வார சந்திப்பிலும் 6 புதிய விருந்தினர்களாக அதிகரிக்க விரும்புகிறேன்.
2. நமது சமூகத்தில் நமது கிளப்பைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புகிறேன், இதனால் தெருவில் குறைந்தது 30 பேரில் 2 பேர் தோராயமாக நம்மைப் பற்றி அறிந்திருப்பார்கள்.

ஒவ்வொரு இலக்குக்கும் ஒரு குறிப்பிட்ட முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலே உள்ள இலக்கு(1) மற்றும் இலக்கு (2) - இவை இரண்டுக்கும் இடையில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது எதுவாக இருக்கும்?

4. மேலே உள்ள இலக்குகளை எவ்வாறு அடையலாம் என்பது குறித்து வேறு ஏதேனும் மார்க்கெட்டிங் யோசனைகளை பெற உங்கள் சக அலுவலர்கள் மற்றும் கிளப் உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்.

உங்கள் மார்க்கெட்டிங் செயல்பாடுகள் வெற்றிடத்தில் நடக்கப்போவதில்லை. பிற வணிக மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை விட அல்லது பிற செயல்பாடுகளை விட மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு நீங்கள் போராட வேண்டியிருக்கும். "நான் வீட்டில் படம் பார்ப்பதற்கு பதிலாக, அல்லது தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதற்கு பதிலாக அல்லது யோகா வகுப்பிற்கு செல்வதற்கு பதிலாக நான் ஏன் உங்கள் கிளப்புக்கு செல்ல வேண்டும்"?

இந்தக் கட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படை செயல்பாடுகளில் ஒன்று போட்டியைத் தரநிலைப்படுத்துவது. இதன் பொருள்:
  • உங்கள் ஒவ்வொரு இலக்குகளும், நீங்கள் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது
  • அந்தப் போட்டியானது உங்கள் இலக்கு பொதுமக்களின் கவனத்தை எவ்வாறு பெறுகிறது என்பதையும் அவர்கள் எந்த வாதங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் தீர்மானிப்பது
  • அவர்கள் என்ன விளம்பர செயல்பாடுகளை பயன்படுத்துகிறார்கள்
  • அந்த இலக்கை அடைவதில் அவர்கள் எவ்வளவு திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்

சில யோசனைகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறன் இருப்பிடத்தை அதிகம் சார்ந்ததாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக, meetup.com குழுக்கள் மாட்ரிட்டில் சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் வேறு சில நாடுகளில் மோசமாக செயல்படுகிறது. முகநூல் விளம்பரங்கள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் சிறப்பாக வேலை செய்கின்றன, ஐரோப்பாவில் அந்தளவுக்கு வேலை செய்வதில்லை, ரஷ்யாவில் மோசமாக செயல்படுகின்றன, அங்கு vk.com சமூக வலைத்தளம் அல்லது இன்ஸ்டாகிராம் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன.

5. அந்த யோசனைகள் ஒவ்வொன்றும் உங்கள் இலக்குகளுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றன அல்லது ஒவ்வொரு இலக்குகளுக்கும் அவை எவ்வளவு உதவக்கூடும் என்று நீங்கள் கருதுவதை மதிப்பீடு செய்யுங்கள். கிளப்பானது முன்பு சிறந்த மார்க்கெட்டிங் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இலக்குக்கு குறிப்பிட்ட எண்களை நியமிப்பது கடினம் - அந்த குறிப்பிட்ட செயல்பாடு இலக்குகளை அடைய எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதைக் குறிக்க "0", "+", "++" போன்ற சில சின்னங்களைப் பயன்படுத்தவும். முந்தைய மார்க்கெட்டிங் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் முடிவுகளுக்கான அணுகலைப் பெறுகிற அதிர்ஷ்டசாலி நீங்கள் என்றால், எல்லா வகையிலும், அந்தத் தகவலை தொடக்க புள்ளியாகப் பயன்படுத்துங்கள்.

உதாரணமாக, பின்வரும் மேட்ரிக்ஸில், meetup.com நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கொண்டுவருவதற்கு நிறைய உதவும் என்று VPM மதிப்பிட்டுள்ளார், ஆனால் உண்மையில் இது சமூகத்தில் கிளப்பை அதிகம் வெளிப்படுத்துவதற்கு உதவுவது இல்லை.

 

மார்க்கெட்டிங் மேட்ரிக்ஸ்
மார்க்கெட்டிங் செயல்பாடு   ஒவ்வொரு சந்திப்பிற்கும் 6 பார்வையாளர்களை அதிகரிப்பது
(முக்கியத்துவம்: 4)
30 இல் 2 நபர்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பது
(முக்கியத்துவம்: 1)
1. Agora மராத்தான்களில் பங்கேற்பது   0 0
2. உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் செய்வது   ++ ++
3. meetup.com இல் நிகழ்ச்சி குறித்து விளம்பரங்கள் செய்வது   ++ 0
4. முகநூலில் நிகழ்ச்சிகள் குறித்து பதிவிடுவது   + +
5. கூகிள் மேப்ஸில் கிளப்பை குறிப்பது   0 +
6. பொது இடங்களில் சந்திப்புகளை நடத்துவது   + +
...      

 

6. ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், எவ்வளவு முயற்சி மற்றும் நிதி தேவைப்படும் என்பதைக் குறிக்கவும்.

மார்க்கெட்டிங் மேட்ரிக்ஸ்
மார்க்கெட்டிங் செயல்பாடு

முயற்சி (மணிநேரம்) /

$(ஆண்டுக்கு)

ஒவ்வொரு சந்திப்பிற்கும் 6 பார்வையாளர்களை அதிகரிப்பது
(முக்கியத்துவம்: 4)
30 இல் 2 நபர்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பது
(முக்கியத்துவம்: 1)
1. Agora மராத்தான்களில் பங்கேற்பது 1 / 0 0 0
2. உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் செய்வது 5 / $600 ++ ++
3. meetup.com இல் நிகழ்ச்சி குறித்து விளம்பரங்கள் செய்வது 2 / $150 ++ 0
4. முகநூலில் நிகழ்ச்சிகள் குறித்து பதிவிடுவது 1 / $100 + +
5. கூகிள் மேப்ஸில் கிளப்பை குறிப்பது 2 / $0 0 +
6. பொது இடங்களில் சந்திப்புகளை நடத்துவது 0 / 0 + +
...      

 

7. அடுத்து, பார்வையாளர்களை அதிகம் அழைத்து வரும் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை வரிசைப்படுத்தவும். 

8. இறுதியாக, நீங்கள் எந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, ஒதுக்கப்பட்ட நேரம் முழுவதும் அவற்றை விநியோகிக்கவும்.

 

உங்கள் முடிவுகளை அளவிடுவது

நீங்கள் எந்தச் செயல்பாடுகளை முன்னெடுத்து செய்தாலும் - ஒரு PR ஐ அனுப்புவதிலிருந்து திறந்த-நிலை நிகழ்ச்சியை நடத்துவது வரை, எப்போதும் ஒரு குறிப்பிட்ட இலக்குகளை தயார் நிலையில் வைத்திருங்கள், அப்போதுதான் அச்செயல்பாட்டின் விளைவுகளைக் கண்டறிந்து அளவிடலாம். "இது மிகச் சிறப்பாகச் சென்றது" என்று உங்களை நீங்களே சமாதானப் படுத்திக் கொள்ளாதீர்கள், மேலும் எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்.

"SMART இலக்குகளையும்", தொடர்ச்சியான மேம்பாட்டு அணுகுமுறைகளையும் பயன்படுத்துங்கள்.

  • செயல்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? (பணத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நேரம், முயற்சி மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும்)
  • செயல்பாட்டின் குறிப்பிட்ட குறிக்கோள்கள் என்னவாக இருந்தது?
    • கிளப்புக்கு பார்வையாளர்கள் வருகையை அதிகரிக்கிறீர்களா? - எத்தனை நபர்கள் கூடுதலாக வருகை தந்தனர்?
    • நிதி திரட்டுகிறீர்களா? - எவ்வளவு பணம் திரட்டப்பட்டது?
    • பக்கத்தை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்களா? - மாற்றம் என்னவாக இருந்தது?
    • இன்னும் பற்பல.
  • நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? அவற்றைப் பற்றிய கருத்துக்கள் என்ன?
  • மீண்டும் மீண்டும் செய்தால் செயல்பாட்டின் செயல்திறன் எவ்வாறு அதிகரிக்கும் (அதனை மீண்டும் மீண்டும் செய்வது அர்த்தமுள்ளதாக இருந்தால்)

நீங்கள் பிரச்சாரம் அல்லது செயலை மீண்டும் செய்தால், சில கட்டுப்பாடான மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கவும். நீங்கள் பத்து விஷயங்களை மாற்றினால், செயல்திறனை 10% மேம்படுத்தினால், பத்து விஷயங்களில் எது முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்பதை உங்களால் சொல்ல இயலாது.

 

முக்கிய மார்க்கெட்டிங் கருவிகள்

இந்தப் பிரிவில், உங்கள் கிளப்பில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் சில முக்கிய கருவிகள் மற்றும் யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்:

கிளப்பின் மின்னஞ்சல் முகவரியைப் பெறுங்கள்.

மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவராக நீங்கள் செய்யக்கூடிய முதல் பணிகளில் ஒன்று, கிளப்புக்கு அதன் சொந்த மின்னஞ்சல் முகவரி இருப்பதை உறுதி செய்வது, இது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த மின்னஞ்சல் முகவரியை அணுகுவதற்கான தரவுகள் அனைத்து கிளப் அலுவலர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அது @gmail.com, @outlook.com என இதைச் சார்ந்து வேண்டுமானாலும் அந்த முகவரி இருக்கலாம். மின்னஞ்சலின் பெயரில் கிளப் பெயர் இருப்பதை உறுதிசெய்க. எடுத்துக்காட்டாக, உங்கள் கிளப்பின் பெயர் "சைலண்ட் ஹில்ஸ் ஸ்பீக்கர்கள்" என்றால், சில நல்ல விருப்பங்கள் [email protected], [email protected] போன்றவையாக இருக்கலாம்.

பெறப்படும் மின்னஞ்சல் முக்கியமானது, எனவே தினமும் அவற்றை வாசிக்க வேண்டும். சாத்தியமானால் - மற்றும் பிற அலுவலர்களின் உதவியுடன் - அனைத்து மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கும் ஒரே நாளில், நீங்கள் அவற்றைப் படிக்கும் தருணத்தில் பதிலளிக்க முயற்சி செய்யவும்.

சமூக மேலாளரின் உதவியை நீங்கள் நாடி இருப்பதை பொறுத்து, ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை உருவாக்குவது நல்லது.

ஒரு குறிப்பிட்ட சமூக வலைத்தள கணக்கை திறந்து விட்டு அதை பயன்படுத்தாமல், செயலற்ற நிலையில் வைத்திருப்பதைக் காட்டிலும் அவற்றில் இல்லாமல் இருப்பது நல்லது. உங்களால் செய்ய இயலாத விஷயங்களை முயற்சிக்காதீர்கள், சாத்தியமான சூழலில் அவற்றைப் பிறகு செய்துக் கொள்ளலாம். வெறுமனே, உங்கள் நாடு மற்றும் இலக்கு உறுப்பினர்களுக்கு மிகவும் பிரபலமான ஒற்றை சமூக வலைத்தளங்களில் தொடங்கவும், அது சீராகவும், வலுவாகவும் செல்லும்போது, நீங்கள் பிற கணக்குகளைத் திறக்கலாம்.

கிளப்பின் அனைத்து ஆன்லைன் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அந்த மின்னஞ்சல் முகவரியை வெளியிடுங்கள், இதனால் யார் வேண்டுமானாலும் கிளப்பைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கிளப் லோகோவை அந்த சமூக வலைத்தள கணக்குகளில் அவதார்/சுயவிவரப் படமாக பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க, Agora Speakers International லோகோவை பயன்படுத்தக் கூடாது. சரியான லோகோ பயன்பாடு குறித்த விவரங்களுக்கு பிராண்டிங் வழிகாட்டுதல்களைச் சரிபார்க்கவும்.

 

கிளப் பேனரை உருவாக்கவும்

Agora கிளப்கள் பேனர் கொண்டிருக்க வேண்டியத் தேவையில்லை. இருப்பினும், பேனரைக் கொண்டிருப்பதற்கு செலவாகும்:

  • உங்கள் கிளப் மெட்டீரியல்கள் அனைத்தும் (புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) தற்போதுள்ள பேனருடன் மிகவும் வித்தியாசமாகவும் மார்க்கெட்டிங் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
  • கிளப் பேனரை போட்டிகள் மற்றும் மாநாடுகளுக்கு நீங்கள் கொண்டு செல்லலாம்.
  • வெளிப்புற பார்வையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, பேனர் உடைய கிளப் மிகவும் நிரந்தரமானதாகவும் தொழில் ரீதியானதாகவும் தெரியும்.
கிளப் பேனரை நிலையான வடிவமைப்பைப் பயன்படுத்தி, நீடித்து உழைக்கக்கூடிய பொருள் (வினைல் அல்லது துணி போன்றவை) மற்றும் துல்லியமான அளவில் (76 செ.மீ x 122 செ.மீ அல்லது 2.5 'x 4') அச்சிட வேண்டும். எங்கள் பிராண்ட் போர்ட்டலில் இருந்து டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்யலாம். எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் உங்களுக்கானதை உருவாக்க எங்களது பலன் உருவாக்குனர் மென்கருவியைப் பயன்படுத்தலாம்.

வழக்கமாக, ஒரு பேனரை அச்சிடுவதற்கான செலவு 30 டாலரை தாண்டக்கூடாது.

 

 

 

விளம்பர மெட்டீரியல்களை உருவாக்குவது

மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவராக நீங்கள் செய்யும் இன்னொரு பணி, கிளப்புக்கு தேவையான அனைத்து விளம்பர மெட்டீரியல்களையும் உருவாக்குவதாகும். சந்திப்பு பாத்திரங்களை அறிமுகப்படுத்தி வீடியோ எடுப்பவர் மற்றும் புகைப்படம் எடுப்பவருக்கு உதவுவது மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவது, மல்டிமீடியா மெட்டீரியல்கள் அனைத்தையும் சேகரித்து, அவற்றை வகைப்படுத்தி, பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

விளம்பர மெட்டீரியல்களை உருவாக்கும்போது அனைத்து பிராண்டிங் விதிகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • விளம்பர மெட்டீரியல்களை உருவாக்குவது.
  • கிளப் செயல்பாடுகளுக்கான (வழக்கமான சந்திப்புகள், "திறந்த நிலை" சந்திப்புகள் அல்லது போட்டிகள் போன்றவற்றுக்காக) விளம்பரம் மற்றும் பலரை சென்றடையும் பிரச்சாரங்களை வடிவமைத்து செயல்படுத்துவது.
  • கல்வித் துறையின் துணைத் தலைவரின் உதவியுடன், பொது மக்களுக்கான "திறந்த நிலை" சந்திப்புகள் மற்றும் பிற உறுப்பினர்-மேம்பாட்டு பிரச்சாரங்களைத் திட்டமிடுவது.

 

கிளப் மல்டிமீடியா சொத்துடமை நூலகத்தை உருவாக்குவது

கிளப்பின் மல்டிமீடியா சொத்துடைமை நூலகமானது கிளப்பை மேம்படுத்துவதற்கும், அமைப்பு செயல்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஒரு அடிப்படை கருவியாக திகழுகிறது. உங்கள் கிளப் சொத்துடைமை நூலகத்தில் என்னென்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது இதோ இங்கே:

  • சந்திப்புகளின் ஆடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள்.
  • சில உறுப்பினர்களின் தொடக்க நிலையையும் தற்போதைய நிலையையும் காட்டும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட "தொடக்க" மற்றும் "தற்போதைய" வீடியோக்கள்.
  • சான்றுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது ஆடியோ பதிவுகள்.
  • ஊடக பங்கேற்புகளின் ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது புகைப்படங்கள் அல்லது வீடியோ பதிவுகள்.

 

குறிச்சொற்கள் (லேபிள்கள்) உடன் அஞ்சல் பட்டியலை தயார் செய்வது

அஞ்சல் பட்டியல் என்பது உங்கள் கிளப்பை மேம்படுத்துவதற்கும், சமூகத் தலைமையின் துணைத் தலைவர் உங்கள் உறுப்பினர்களுக்கான வெளிப்புற சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்கும் ஒரு சிறந்த கருவியாக இருக்கும்.

வழக்கமாக, உங்கள் இணைய வழங்குநர் அஞ்சல் பட்டியல் ஆதரவை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலேயோ சேர்க்கலாம். இல்லையெனில், நீங்கள் emailDodo போன்ற இணைய வழங்குநர்களைப் பயன்படுத்தலாம், சிறிய பட்டியல்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு இது ஒரு இலவச விருப்பத்தைக் கொண்டுள்ளது ( பட்டியலை இயக்க விரும்புவதற்கான காரணத்தையும், மின்னஞ்சல்களை எங்கிருந்து பெறுவீர்கள் என்பதையும் விளக்க வேண்டியிருக்கும், மேலும் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்).

 

தனியுரிமை பற்றிய குறிப்பு

கிளப்கள் அனைத்தும், அது எங்கிருந்தாலும் சரி, EU GDPR உடன் இணங்கக்கூடிய தனியுரிமைக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அஞ்சல் பட்டியலில் ஒருவரைச் சேர்க்க நீங்கள் அவரிடமிருந்து வெளிப்படையான ஒப்புதலை பெற வேண்டும் என்பதே இதன் பொருள், எந்த நிறுவனம் (அது கிளப்பாக இருக்கும்) இந்த பட்டியலை சேகரிக்கிறது, சேகரிக்கப்பட்ட தகவல்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும், மேலும் அவர்களின் பதிவுகளில் திருத்தங்களைச் செய்யும்படி கோருவதற்கும், அவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கும்படி கோருவதற்கான அணுகல் அல்லது உரிமை அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இருக்க வேண்டும்.

ஒப்புதல் பதிவின் நகலை நீங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

குறைந்த பட்ஜெட் மார்க்கெட்டிங் செயல்பாடுகள்

உங்கள் கிளப்பை விளம்பரப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில யோசனைகள் இதோ இங்கே:

திறந்த நிலை நிகழ்ச்சிகள் - கல்வி துறையின் துணைத் தலைவருடன் சேர்ந்து, திறந்த-நிலை நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு, அதனை சமூகத்தில் விளம்பரப்படுத்தலாம்.

பயிற்சி பட்டறைகள் - சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவம் பற்றிய தலைப்புகளில் சிறப்பு பயிற்சி பட்டறைகளை உருவாக்குவது. கிளப் சந்திப்பை உடைய ஒரு நிகழ்ச்சியின் பகுதியாக இந்தப் பயிற்சி பட்டறையை வைப்பது சிறந்ததாக இருக்கும், பயிற்சி பட்டறைக்கு பிறகு கிளப் சந்திப்பை நடத்தினால் பங்கேற்பாளர்கள் அதில் கலந்துக் கொண்டு, அமைப்பை அனுபவித்து பார்ப்பார்கள்.

இலவச Google MyBusiness கணக்கை உருவாக்கவும் - இது உங்கள் கிளப்பை வரைபடத்தில் குறிப்பிட அனுமதிக்கும். நீங்கள் தற்போது இணையம் வாயிலாக சந்தித்தாலும், உங்கள் கிளப் குறித்து மக்கள் அறிந்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழி.

 

Agora மராத்தான்கள் - மராத்தான் மற்றும் நட்பு ரீதியான போட்டிகள் என கிளப்புகளுக்கு இடையிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும்.

குறுக்கு-இணைப்பு - இதேபோன்ற செயல்பாட்டுப் பகுதிகள் (பொது சொற்பொழிவு, தலைமைத்துவம், விவாதம், விமர்சன ரீதியான சிந்தனை) உடைய பிற நிறுவனங்களைத் தேடி, இணைவது குறித்து பரிந்துரைக்கவும்.

இணைக்கப்பட்ட அமைப்பை நீங்கள் வழிமொழியவில்லை என்பது தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அவ்வாறு வழிமொழிவது நடுநிலை கொள்கையை மீறும் செயலாகும்.

உங்கள் கிளப்பின் சமூக ஊடக இடுகைகளில் ஆர்வமுடைய நபர்களை டேக் செய்யவும் அல்லது @குறிப்பிடவும் - (இந்தச் செயல்பாடு சமூக மேலாளருடன் ஒருங்கிணைந்து செய்யப்பட வேண்டும்). ஆர்வமுள்ள நபர்களை (ஊடகங்கள், உள்ளூர் தலைவர்கள், பிரபலங்கள், வருங்கால உறுப்பினர்கள், இன்னும் பல பல) சுவாரஸ்யமான இடுகைகளில் டேக் செய்வது அவர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சிறந்த வழியாகும், இது கவனமாக செய்யப்படும் வரை.

அணியக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வது - பொதுவாக டி-ஷர்ட்கள், போலோக்கள் அல்லது முக கவசங்களில் பிரிண்ட் செய்வது அணிவது ஒப்பீட்டளவில் மலிவானது. வழக்கமான அச்சுப்பொறியைப் பயன்படுத்தி வீட்டிலேயே அதைச் செய்யக்கூடிய கருவிகள் கூட உள்ளன.

கிளப் அளவிலான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிடுங்கள் - உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் பொதுவாக தங்கள் சாதனைகளை தங்கள் சமூக சுயவிவரங்களில் இடுகையிடுவதை விரும்புகிறார்கள்.

கிளப் சந்திப்புகளை ஆன்லைன் சந்திப்பு தளங்களில் நிகழ்ச்சிகளாக அறிவிக்கவும் - அவ்வாறு அறிவிக்க பல தளங்கள் உள்ளன - Airbnb, Meetup, CouchSurfing, Internations, போன்றவை.  கிளப்பின் சந்திப்புகளை அங்கு அறிவித்து, அதில் சேர மக்களை தீவிரமாக ஊக்குவிக்கவும். நீங்கள் வழக்கமான முறையில் சமூக வலைத்தளங்களிலும் இவ்வாறு செய்ய வேண்டும் (எ.கா.: முகநூல் நிகழ்ச்சிகள்).

உங்கள் கிளப் சந்திப்புக்கான அட்டவணையுடன் கூகுள் காலெண்டரை உருவாக்கி, அதை பொதுவில் பகிரவும் - இது உங்கள் கிளப் எப்போது, எங்கு சந்திக்கிறது என்பதை எளிதாகக் காணவும், அந்த நிகழ்ச்சிகளை தங்கள் காலெண்டரில் எளிதாகச் சேர்க்கவும் மக்களுக்கு உதவி புரியும்.

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், புத்தகக் கடைகள், கலாச்சார மற்றும் சமூக மையங்களில் துண்டுப்பிரசுரங்களை விடுங்கள் - Agora கல்வி ரீதியான இலாப நோக்கற்ற ஃபவுண்டேஷனாக இருப்பதால், பல நிறுவனங்கள் எங்களுடன் பணியாற்றுவதற்கும் உள்ளூர் கிளப்புகளுக்கு உதவுவதற்கும் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

உள்ளூர் நிறுவனங்களை அணுகிடுங்கள்- சமூகத் தலைமையின் துணைத் தலைவருடன் இணைந்து, உங்கள் பகுதியில் உள்ள நிறுவனங்களுக்குச் செல்லுங்கள். வணிகரீதியான பொது சொற்பொழிவு மற்றும் தலைமைத்துவம் தொடர்பான திட்டங்களுக்கு வழக்கமாக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும், மேலும் நீங்கள் இதை அவர்களுக்கு பென்னிகளில் நிரூபிக்கப்பட்ட முறையாக வழங்குவீர்கள். இது உங்கள் கிளப்பில் புதிய உறுப்பினர்களை மட்டுமல்ல, நிறுவனத்திற்குள்ளேயே ஒரு புதிய கார்ப்பரேட் கிளப்பையும், உங்கள் உறுப்பினர்களுக்கு பல புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்: தொழில்முறை ரீதியான சூழலில் பேசுவதிலிருந்து நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வரை. நீங்கள் வழக்கமாக இது குறித்து நிறுவனங்களின் மனிதவள அல்லது பயிற்சி துறைகளுடன் பேச வேண்டும்.

பின்னுகளை உருவாக்கி, கிளப் அல்லாத நிகழ்ச்சிகளுக்கு உறுப்பினர்கள் செல்லும்போது அதனை அணிந்துச் செல்லுமாறு ஊக்குவிக்கவும்.

வணிகப் மெட்டீரியல்களை உருவாக்குங்கள் - ஸ்டிக்கர்கள், குவளைகள், சட்டைகள் முதலியன.

உங்கள் கிளப்பில் சமூக மேலாளர், இல்லை என்றால், நீங்கள் அவர்களை செய்யக்கூடிய சில பணிகளைச் செய்ய விரும்பலாம்.

"புதிய கிளப்பைத் தொடங்குவது - அணியை உருவாக்குவது"  பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து யோசனைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Agora -வை போன்ற பிற நிறுவனங்களின் உடைமைகளில் (குழுக்கள், மன்றங்கள் போன்றவை) விளம்பரப்படுத்த நீங்கள் ஆசைப்படலாம். இது பொதுவாக அந்தளவு வேலை செய்யாது, எனவே எச்சரிக்கையுடன் தொடரவும். இந்த நிறுவனங்கள் பல பிரிவு வாரியாக இருக்கும், அதில் நீங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடித்திருப்பீர்கள், சில மோசமான சூழலில், நீங்கள் சட்ட ரீதியான அச்சுறுத்தல்களாலும் பாதிக்கப்படுவீர்கள்.

 

நன்றாக வேலை செய்யும் யோசனைகளை நீங்கள் கொண்டு வந்தால், அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நாங்கள் அவற்றை இங்கே சேர்ப்பதன் மூலம், எல்லா கிளப்களும் அவற்றிலிருந்து பயனடைவார்கள்.

 

இணக்கத்தை உறுதிசெய்வது

மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவராக, Agora பிராண்டிங் மற்றும் தகவல்தொடர்பு வழிகாட்டுதல்களுடன் உங்கள் கிளப் ஒத்துப்போவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. இது உங்கள் சொந்த தகவல்தொடர்புகளைப் பற்றி கவனமாக இருப்பது மட்டுமல்லாமல், கிளப்பின் சமூக மேலாளர் (அப்படி ஒருவர் இருந்தால்) மற்றும் உறுப்பினர்களின் தகவல்தொடர்புகளைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும், அதாவது பிற நிறுவனங்கள் அல்லது முன்னணி சமூக செயல்திட்டங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகளை வழங்குவது அல்லது அங்கு நடத்தப்படும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்வது என அவர்கள் கிளப்பிற்கு வெளியே Agora தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

 

மீடியாவை அணுகுவது

உங்கள் கிளப்பையும், ஒட்டுமொத்த அமைப்பையும் மக்கள் அதிகம் அறிந்துக்கொள்ள உள்ளூர் ஊடகங்களை அணுகுவது அடிப்படையான ஒரு விஷயமாகும். கூடுதலாக, இந்தச் செயல்பாடு சமூகத் தலைமையின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினருரிமையின் துணைத் தலைவர் பணிக்கு பெரும் உதவியாக இருக்கும்:

  • ஊடகங்களில் உங்கள் கிளப் (மீண்டும் மீண்டும்) குறிப்பிடப்பட்டிருந்தால், சமூகத் தலைமையின் துணைத் தலைவர் கிளப் உறுப்பினர்களின் சேவைகளை வெளி நிறுவனங்களுக்கு வழங்குவது மிகவும் எளிதாக இருக்கும்.
  • புதிய உறுப்பினர்களை கவருவதற்கு உறுப்பினருரிமையின் துணைத் தலைவருக்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.
இப்போதெல்லாம், ஊடகங்கள் "பாரம்பரிய ஊடகங்களை" விட அதிகம் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. ஊடகங்களில் தனிப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்கள், பிளாக்கிங்/வ்லாகிங் பிரபலங்கள், செல்வாக்கு உடையவர்கள் என பலர் உள்ளனர்.

எப்படி அணுகுவது

  • ஊடக தொடர்புகளின் பட்டியலை உருவாக்குங்கள், அவர்களின் ஆர்வங்கள், அவர்கள் எந்த வகையான பார்வையாளர்கள் மற்றும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறித்து தெளிவான பார்வையினைக் கொண்டிருங்கள்.
  • உங்களுக்குத் தேவை ஏற்படுவதற்கு முன்பே ஊடக வல்லுநர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • மதிப்புடையதை வழங்கிடுங்கள். அந்த நிபுணர்களிடமிருந்து உங்களுக்குத் தேவையானதைப் பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள், அவர்களின் பார்வையாளர்கள் ஆர்வமுள்ள விஷயங்களை வழங்கி நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவிடலாம் என்பது குறித்தும் சிந்தியுங்கள்.
  • எதோஸ், பாத்தோஸ், லோகோஸின் அனைத்து கொள்கைகளும் ஊடகங்களுடனான தகவல்தொடர்புகளுக்கும் பொருந்தும், ஆனால் இந்த விஷயத்தில், நம்பகத்தன்மை, நாணயம் போன்றவற்றை நிரூபிக்க வேண்டியது கிளப் தான்.
  • மேற்கூறியவற்றுக்கு அதிகமாக, நீங்கள் அனுப்பும் எதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எழுத்துப்பிழை மற்றும் இலக்கண சரிபார்ப்பிற்கு பல இலவச ஆன்லைன் கருவிகள் உள்ளன, இவை சிறப்பாக வேலை செய்கின்றன, தற்போதைய காலக்கட்டத்தில், இந்த வகையான தவறுகளோடு ஏதேனும் ஒன்றை அனுப்புவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.
  • அதே பி.ஆர் அல்லது செய்தியுடன் அனைவருக்கும் ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாம். ஒவ்வொரு அவுட்லெட்டின் தேவைகளுக்கும் ஏற்ப உங்கள் செய்தியை வடிவமைக்கவும்.
  • விடாமுயற்சியுடன் இருங்கள், ஆனால் வெறுக்கத்தக்க வகையில் அல்ல. உங்கள் முதல் முயற்சியில் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால், அந்த விஷயத்தை கைவிட்டு விடாதீர்கள்.